First
மன்னர் சின்ன மருது பாண்டியர், ஆதிதிராவிடர் அரவணைப்பும்
மாமன்னர் மருது பாண்டியர் சிவன் மீது அதிக பக்தி கொண்டிருந்த காரணத்தால் அவரது ஆட்சி காலத்தில் காளையார் கோயில் ராஜகோபுரத்தை கட்ட ஆரம்பித்தார்கள்.
மானாமதுரை அடுத்து சிற்றூரில் இருந்து செங்கற்களையும், மேலூர் வட்டம் கருமலையிலிருந்து மலங்கற்களையும் எடுத்து வரும் வண்டிகர்களுக்கு தண்ணியும், பானமும் கொடுத்து திருப்பணிகளை எளிய முறையில் நடைபெற தன்னால் முடிந்த உதவியை ஆதிதிராவிடர் துறவி மொட்டை பிரதேசி என்பவர் உதவி செய்து கொண்டிருந்தார்.
கொல்லங்குடியில் வண்டிகள் செல்லும் சாலை அருகே கூரை அமைத்து பலரிடம் கையேந்தி வாங்கி பணத்தில் ஒரு தண்ணீர் பந்தலை தொடங்கினார். கடுமையான பாரத்தை ஏற்றிக் கொண்டு வரும் வண்டிக்காரர்களுக்கு தன்னால் முடிந்த தண்ணீர் மற்றும் நீர் மோரை கொடுத்தார், வண்டிக்காரர்களுக்கு அது வேலையின் களைப்பைத் தெரியாமல் புத்துணர்ச்சியை கொடுத்தது.
இவ்வாறாக நீரும், மோரும், பானமும் அருந்தி வண்டிக்காரர்கள் கொஞ்சம் ஒயந்துவிட்டனர். வண்டியை குறித்து நேரத்தில் போய் சேருவதில் தாமதம் ஏற்பட்டது காளையார் கோயில் கட்டுமான பணிகளை மேற்பார்வையிட்ட சின்ன மருது பாண்டியருக்கு உடனடியாக காரணம் புரியவில்லை, கொல்லங்குடியில் தான் தடங்கல் ஏற்பட்டுள்ளது என அதற்கு மொட்டை பரதேசி என்ற துறவி தான் காரணம் என செவி வழி செய்தியாக தெரிய வருகிறது.
சின்ன மருது ஆத்திரமாக புறப்பட்டு வந்தார் இதை கேள்விப்பட்ட மொட்ட பிரதேசி தம் அரசிடம் அனுமதி பெறாமல் தண்ணீர் பந்தல் வைத்ததின் விளைவாக தான் திருப்பணி தாமதப்படுது என்ற காரணத்தால் தண்டனைக்கு ஆளாகும் நேரம் என்ற அஞ்சி கொல்லங்குடியில் இருந்து குருவாட்டிப்பட்டிக்கு ஓடிவிட்டார்.
சின்ன மருது கொல்லங்குடிக்கு வந்தடைந்தும் வண்டிக்காரர்களை சோர்வாக அங்கிருந்து வண்டி கிளப்ப தயாராவதை பார்த்து நிறுத்தி விசாரித்தார். மொட்டை பரதேசி துறவி கொடுத்த நீரும் மோரும் தான் நாங்கள் காளையார் கோயில் வரை களைப்பில்லாமல் தெம்புடன் வண்டி ஓட்டு வர முடியுது என்று பணிவாக சின்ன மருதுயிடம் வண்டிக்காரர்கள் தெரிவித்தனர்.
மன்னர் சின்ன மருது உடனடியாக மொட்டை பரதேசி அழைத்த வாருங்கள் என ஆணையிட்டார். மொட்டை பரதேசி துறவியும் அஞ்சிய படி சின்ன மருது பாண்டியரிடம் நேர் எதிரே நின்று கொண்டிருந்தார்.
மொட்ட பரதேசி இடம் இனி நீங்கள் தொடர்ந்து தண்ணீர் பந்தல் நடத்தலாம், அதற்கு அருகிலேயே ஊரணி அமைத்து தருகிறோம், தண்ணீர் பந்தலுக்கு நிரந்த கட்டிடம் கட்டிக் கொடுக்கிறோம். நீங்களும் இங்கே தங்கிக் கொள்ளலாம்.
உமது பெயரில் இங்கு மொட்டை பரதேசி மடம் கட்டித் தருகிறோம், தண்ணீர் பந்தலுக்கு தேவையான பணத்திற்கு குருவாய்ப்பட்டி உள்ள நிலம் மானியமாக உங்களுக்கு தருகிறோம்.
என்று ஓலைச்சுவடியில் எழுதி ஆணையாக வெளியிட்டு உடனடியாக நடைமுறைப்படுத்துங்கள் என உத்தரவிட்டார்.
சிவகங்கை சீமை ஆண்ட மாமன்னர் மருது பாண்டியர்கள் 1780 – 1801 ஆட்சி காலத்தில் சாதி, மத நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
கட்டுரையாளர்
த.விஜயகுமார் அகமுடையார்.
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்