மாணவிக்கு கல்விக்கான தொகை செழுத்துவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது —————–…

Spread the love

First
மாணவிக்கு கல்விக்கான தொகை செழுத்துவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது
———————————————————-
இருநாட்களுக்கு முன்பு பிளஸ் 2 மாணவி பவானி என்பவர் பற்றி அகமுடையார் ஒற்றுமை தளத்தில் பதிவிட்டிருந்தோம்.

திருப்பரங்குன்றம் மருதிருவர் கல்விமையத்தை சேர்ந்த திரு.மருதமுத்து அவர்கள் நம் பதிவை பார்த்துவிட்டு அவர் கல்வியை தொடர்வதற்கு தேவையான உதவிகளை செய்ய ஏற்பாடுகள் செய்வதாகவும் மாணவி அடுத்து என்ன செய்ய விரும்புகிறார் என்று கேட்டார்.

அதை விசாரித்து மாணவி சார்டர்ட் அக்கவுண்டன்ட் படிக்க விரும்புகிறார். இதற்காக கோயமுத்தூரில் உள்ள கோச்சிங் சென்டரில் சேர்ந்துள்ளார் என்பதையும் திரு.மருதமுத்து அவர்களிடம் தெரிவித்தோம்.

பின்னர் அவர்
சென்னையில் உள்ள நிறுவனத்தை நடத்திவரும் தொழிலதிபர் திரு.முத்துக்காளை அவர்கள் அந்த மாணவியின் கல்வித்தொகையை விடுதி செலவுடன் ஒவ்வொரு வருடம் என படிப்பு முடியும் வரை செழுத்தி விடுவதாக திரு.மருதமுத்து அவர்களிடம் உறுதியளித்துள்ளார். இதை மருதமுத்து அவர்கள் என்னிடம் இருமுறை தெரிவித்தார். ஏற்கனவே எம்பிபிஎஸ் படிப்பவர்களுக்கு கல்வி உதவி செய்துவருவதாகவும் மாணவி பவானி அவர்களுக்கும் உதவி நிச்சயம் செய்துவிடுவோம் என்று உறுதியளித்துள்ளார்கள்.

நன்றி:
இந்த மாணவி குறித்து அகமுடையார் ஒற்றுமை தளத்திற்கு தகவல் தெரிவித்த திரு. ராஜ்குமார் அகமுடையார் அவர்களுக்கும் முழுஉதவித்தொகை செழுத்த உறுதியளித்துள்ள மருதிருவர் கல்விமையத்தை சேர்ந்த திரு.மருதமுத்து அவர்களுக்கும் முதல் நிதிஉதவி அளித்த அண்ணன் திரு.அருள் அகமுடையார் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

அதேநேரம் அந்த மாணவிக்கு ஏற்கனவே உதவி செய்ய நினைத்திருப்பவர்கள் மறக்காமல் உதவி செய்யவும்! அந்த குடும்பத்திற்கும் உங்கள் உதவி பயன்படும் என்பதை மறக்க வேண்டாம்! நன்றி!

படம்: அகமுடையார் சங்கத்தை சேர்ந்த சிலர் மாணவியை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இப்பதிவில் அவர்களின் முழுப்படத்தை இணைத்தால் இப்பதிவில் உள்ள தொழிலதிபர் இவர்களோ என்று குழப்பம் ஏற்படும் என்பதால் மாணவி படத்தை மட்டும் இப்பதிவில் கொடுத்துள்ளோம். சங்கத்தினர் சந்தித்த அந்த முழுப்புகைப்படத்தை தனிப்பதிவில் தருகின்றேன் . மாணவியை வீட்டில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்த அவர்களுக்கும் நமது நன்றிகள்

அகமுடையார் இனத்தில் செல்வம் உள்ள ஆயிரக்கணக்காணோர் இருக்கிறார்கள் அவர்கள் இதை போல உதவி செய்ய மனம் கொண்டால் அகமுடையார் சமுதாயம் கல்வி,வேலை வாய்ப்பு, பொருளாதாரம்.அதிகாரம் போன்ற பல்வேறு தளங்களில் முன்னேறிவிடும் .ஆனால் அதற்கு பணம் படைத்தவர்களுக்கு, மனமும் கொஞ்சம் தாரளமாக வேண்டும்.



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

4 Comments

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?