First
அகம்படி நன்னன் கல்வெட்டும்-துளுவ வேளாளரும்
——————————————–
பழந்தமிழ் வேந்தர்களில் துளு நாட்டை ஆண்ட வேளிர் மன்னரில் நன்னன் குறிப்பிடத்தக்கவர். இந்த நன்னன் மரபினரில் நிறைய மன்னர்கள் பல்வேறு காலங்களில் தொடர்ச்சியாக நன்னன் பெயரை தாங்கி வந்துள்ளனர்.
இதே துளு நாட்டு அரசரான நன்னன் பெயரை தாங்கி நிற்கும் கல்வெட்டு புதுக்கோட்டை பகுதியில் கிடைத்துள்ளது.
ஆதாரம்: புதுக்கோட்டை கல்வெட்டு தொகுதி,கல்வெட்டு எண் 683
இக்கல்வெட்டின் 9-10 வரிகளில் அகம்படி நன்னன் என்ற பெயர் குறிக்கப்பட்டுள்ளது.
துளுநாட்டு அரசரான நன்னன் மரபினரின் பெயரை தாங்கி கல்வெட்டு கிடைத்துள்ளது, தமிழ்நாட்டிலேயே நமது அகமுடையார் சாதிக்கு மட்டுமே.
ஆனால் எந்த வித ஆதாரமும் இல்லாமல் துளு நாட்டு வேளிர் அரசர்களான நன்னன் போன்றவர்களை சில வரலாற்று போலிகள் சொந்தம் கொண்டாட முயற்சிப்பது கேலிக்குரியது.
மேலதிக தகவல்கள்
————————-
குறிப்பிட்ட இந்த கல்வெட்டு
விஜயநகர பரம்பரையை சேர்ந்த மன்னர் புக்கராயன் காலத்தில் விஜய நகர அரசபிரதியாக இருந்த சயன உடையார் என்பவரின் காலத்தியதாகும் என்பதால் இக்கல்வெட்டு கி.பி 14ம் நூற்றாண்டுடையதாகும்.
இக்கல்வெட்டு அகம்படியர் சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினர் வடக்கிலரையன் ,தெற்கிலரையன் என்று பிரிந்து இரு தரப்பினரும் அவர்கள் சார்ந்த பணியாளர்களும் மோதி கொலைகள் நடந்துள்ளதையும் அதன் பின் உடன்பாடு ஏற்படுத்திக்கொண்ட செய்தியை குறிக்கிறது. இக்கல்வெட்டு குறித்து மற்றொரு நாள் விரிவாக பேசப்படும்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்