• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • Shorts
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

வாணாசுரன்-வாணர் குல அகம்படியர்களின் முன்னோன் ———————————–…

September 20, 2017 by administrator Leave a Comment

Spread the love

வாணாசுரன்-வாணர் குல அகம்படியர்களின் முன்னோன்
—————————————————————-
“மாயப் பொருபடை வாணனை ஆயிரந்தோளும் பொழிகுருதி பாய”திவ்ய பிரபந்தம்-திருப்பல்லாண்டு பாடல் 7

பிரகலாதனின் பேரனும் அகம்படி மகாபலி என்னும் அசுரவேந்தனின் புதல்வனே இந்த வாணாசுரன். வாணர் மரபை தோற்றுவித்த அசுர குல சத்திரியன் இவனே! இவனுடன் திருமால் நடத்திய போரையே மேற்குறிப்பிட்ட திருப்பல்லாண்டுப் பாடல் தெரிவிக்கிறது.

மாபலி அகம்படியர்களின் முன்னோடி மகாபலி சக்ரவர்த்தி என்றால் ,வாணர் மரபை தோற்றுவித்து “அகம்படி மகாபலி வாணர்” மரபை தோற்றுவித்தவன் இவனே ! இந்த அசுர குல சத்திரியனின் ஆற்றலில் மயங்கியே சிவபெருமான் தனது கணங்களில் ஒன்றாகவும் தன்னை அகம்படி(காவல்) செய்யவும் செய்யவும் ஆக்கிக்கொண்டார்.

அகம்படியர்,கணத்தார், வாணர்,மகாபலி,வாணர் என்ற வார்த்தைகளுக்கு பொருள் புரிகின்றதா?

புராணங்களின் மறைபொருளாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று தான் ! வேதங்களில் அசுரர் என்று காட்டப்படுவர்கள் இம் மண்ணின் மைந்தர்கள் என்பதும் அவர்களே இந்த மண்ணை தொன்மத்தில் ஆட்சி செய்தவர்கள் என்பதும் விளங்கும்
வெளியில் இருந்து வந்தவர்கள் இம்மண்ணின் பூர்வகுடி ஆட்சியாளர்களை அசுரர் என்று தங்கள் இலக்கியங்களிலும் புராணங்களிம் வர்ணித்துள்ளதும் தெரிகிறது.

அசுர சத்திரியராகிய அகம்படியர் எனும் இன்றைய அகமுடையார் இனத்தவர்கள் இந்த மண்ணின் இந்த மண்ணின் தொல் அரசகுடி என்பது விளங்குகின்றதா?

விளங்கிக் கொள்ள இன்னும் எவ்வளவோ இருக்கிறது.ஆனால் நமக்கு(அகமுடையார்களுக்கு) வரலாற்றிலும் மரபை பாதுகாப்பதிலும் அக்கறையே இல்லையே! அது தேவையில்லை அதனால் பயன் என்ன என்ற நினைப்பும் பொருளாதாரத்தை மட்டுமே இலக்காக்கி ஓடிக்கொண்டிருந்தால் நம் வரலாறு மற்றவர்கள் வசமாகத்தான் எப்போதும் இருக்கும்.
விரிவான கட்டுரை அகமுடையார் ஒற்றுமை இணையதளத்தில் விரைவில் வெளியாகும்

நன்றி: (வாணாசூரன் அறிமுகம்-)வரலாற்றிஞர் திரு.எஸ் ராமசந்திரன் வழியே திரு.பாலமுருகன் அகமுடையார்(நிறுவனர் அகமுடையார் அரண்)

மேற்குறிப்பிடப்பட்ட பாடல் முழுவதும்

தீயிற் பொலிகின்ற செஞ்சுட ராழி திகழ்திருச் சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொருபடை வாணனை ஆயிரந் தோளும் பொழிகுருதி
பாயச் சுழற்றிய ஆழிவல் லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே –திவ்ய பிரபந்தம்-திருப்பல்லாண்டு பாடல் 7

பாடல் விளக்கம்:
திருமாலின் திருச்சக்கரம் தீயைக் காட்டிலும் பிரகாசமாக விளங்கும் ஒரு வட்ட வடிவ சோதியால் சூழப்பட்டதாய் உள்ளது. இந்த திருச்சக்கர சின்னத்தை திருமால் ஆலயங்களில் ‘பகவானிடம் சரணாகதி செய்துவிட்டேன். இனி நான் உன் உடைமை.’ என்று சொல்லி அதன் அடையாளமாக சரணாகதர்கள் தங்கள் தோள்களில் பொறித்துக் கொள்வர். அவ்வாறு பிறவி தோறும் பிறவி தோறும் அவனுக்கே ஆட்பட்டு அடிமை செய்யும் தொண்டர்களோம். ஆயிரம் தோள்கள் உடையவன் ஆதலால் மிகுந்த வலிமையுடன் திகழ்ந்த வாணாசுரன் தன் வலிமையால் ஆணவம் உற்று இருந்தான். தன்னுடன் மாயப்போர் செய்த வாணாசுரனின் ஆணவம் அழியும் வகையில், சுதர்சன சக்கரத்தை ஏவி அவனது வலிமையைப் பறித்த கிருஷ்ணனுக்குப் பல்லாண்டு பாடுவோம்.

புகைப்படம்: வாணாசூரனுக்கும் திருமாலுக்கும் இடையில் நடந்த போர்.
வாணாசூரனுக்கு ஆதரவாக சிவபெருமான்,விநாயகர்,முருகன் ஆகியோர் திருமாலை எதிர்த்து போர் செய்யும் காட்சி!


Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

இரட்டை வேடம் போடும் நாய்களால் தான் அகமுடையார் சாதி அழிகிறது... சில எச்சை வேளை,...
புதுவை மாநிலம் பாகூர்கொம்யூன்பஞ்சாயத்துக்குஉட்பட்ட ஸ்ரீ வேதாம்பிகைசமேத ஸ்ரீ மூலந...
மலையமான் வம்சத்தினர் அகமுடையார்களே! எலவானசூர் சிவன் கோவில் கல்வெட்டு
வணக்கம் உறவுகளே, வருகின்ற 10/04/2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:45 மணிக்கு, மதுரை...
சர்.ஏ.ராமசாமி முதலியார் (அகமுடையார்) தான் உண்மையில் இந்திய ஜனாதிபதியாக இருக்க வே...
#வீழ்ந்தும்_எழுந்தேன் ம[சி]ன்னவரே #உங்கள்_விவேகத்தின்_குணம்_கண்டு #மாமன்னர்_சி...
நவம்பர் 15- பொதுவுடமைப் போராளி வாட்டாகுடி இரணியன் பிறந்தநாள் -இந்நாளில் இவரைப் ...
தாலிக்கு வேலி-தமிழுக்கு காவலர்-மாமன்னர் மருதுபாண்டியர் வாழ்வில் நடந்த ஓர் சுவையான உண்மை நி
எங்கள் முப்பாட்டன் மண்ணில் அவர் படத்தை சுமந்து ஊர்வலம் வர யாரிடமும் அனுமதி கேட்ப...
இம்முறை குருபூஜைக்கு இராமநாதபுரத்திலிருந்து அகமுடையார் உறவுகள் 100 வண்டிகளில் கா...
#திருவண்ணமலை மாவட்டம் தாட்டியமான #அகமுடையார் அதிகம் வாழும் கிராமம் #மேல்வன்னி...
#ஆந்திரா_அகமுடையார்களின் ஒரே அடையாளம்... #சித்தூரின்_சிங்கம் புல்லட் சுரேஷ் அவ...

Filed Under: Uncategorized

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Primary Sidebar

Recent Posts

  • கோவையில் #கிருஸ்தவ_அகமுடையார்கள்… மதம் மாறினாலும் நம் சாதி அடையாளத்தை பல சமூக…
  • agamudayar mandagapadi Mannargudi
  • #agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam#muthuvaduganathathevar #thevar
  • #agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam ஜம்புத் தீவு பிரகடனம்
  • agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam#muthuvaduganathathevar #thevar