அகமுடையார் ஓலை ஆவணம் ———————————— அதளை (அதலை) எனும் ஊ…

Spread the love
0
(0)

First
அகமுடையார் ஓலை ஆவணம்
————————————

அதளை (அதலை) எனும் ஊர் மதுரையில் இருந்து வடக்கில் 14 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இவ்வூரில் நடராசன் சேர்வை என்பவரிடம் 400க்கும் மேற்பட்ட வரலாற்று ஆவணங்கள் ( பனை ஓலைகள், செப்பு பட்டயங்கள், நில பத்திரம் போன்ற ஆவணங்கள் ) இருந்துள்ளதாக தெரிகின்றது.

இப்பதிவில் நாம் காணும் இந்த ஓலை ஆவணமும் மேற்குறிப்பிட்டவரின் சேகரிப்பில் இருந்து பெறப்பட்டு பிரிட்டிஷ் லைப்ரியில் பாதுகாக்கப்படும் ஆவணம் ஆகும். குறிப்பிட்ட இந்த ஆவணம் கி.பி 1817ம் ஆண்டிற்கும் 1874 காலத்திற்கும் இடைப்பட்ட ஆவணமாக இருக்கலாம்.

சரி இந்த ஓலையை பார்ப்போம்.

இந்த ஓலை ஆரம்பிக்கும் போதே மாடக்குளத்தை சேர்ந்த தாசில்தார் வெங்கிட வரத யரங்கையார்(அய்யங்கார்) அவர்கள்… அதளை நாட்டாண்மை சுப்பிரமணியன் சேறுவை (அகமுடையார்) அவர்களுக்கு என்றும் ஆரம்பிக்கிறது. இதில் இருந்து இவர் அதளை நாட்டண்மையாக விளங்கியது தெரிகின்றது. ஆனால் ஓலையின் ஆரம்ப சுவடி தெளிவில்லாமல் இருப்பதால் (ஸ்கேன் செய்தவர்கள் தெவிள்ளாமல் ஸ்கேன் செய்திருக்கலாம்) மாடக்குளத்திற்கும் இவர்களுக்குமான தொடர்பு விளங்கவில்லை.

இதற்கு அடுத்து வரும் ஓலை சுவடியில் பல்வேறு ஊர்களை சேர்ந்த அகமுடையார் இனத்தவர்கள் பெயரும் அவர்கள் கோவிலில் இருந்து பெற்ற அல்லது கோவிலுக்கு அளித்த பிரசாதம் (அரிசி) அளவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் வரும் அகமுடையார்கள் பெயர்கள் வருமாறு

ப.முத்திருளாண்டி சேறுவை( சேர்வை) கு.
சோணைமுத்து சேர்வை
வீ.நாகமலை சேர்வை
கு.முத்திருளாண்டி சேறுவை
மா.வீரணன் சேறுவை
சு.முத்தையன் சேறுவை
பொதும்பு வீரணன் சேறுவை
பரவை சின்ன சோணை சேறுவை
பரவை பெரிய சோணை சேறுவை
பரவை வாசல் சேறுவை

இதில் “பரவை வாசல் சேறுவை” என்பவர் பெயரில் உள்ள “வாசல்” என்பது ஓர் அடையாள பெயராக இருந்திருக்க வேண்டும். அகமுடையார்களில் இராசவாசல் என்ற பிரிவு இருந்துள்ளது கல்வெட்டு மற்றும் இதர ஆவணங்கள் மூலம் தெரிந்த விடயம் தான். ஆகவே “வாசல் சேறுவை” என்று இங்கு குறிப்பிடப்படுபவர் பிற்காலங்களில் வாசல் அதிகாரியாக பணியாற்றியவர்களின் வழியினராக இருக்க வேண்டும். இதை மேலும் ஓர் செப்பேட்டு செய்தி உறுதி செய்ய காரணமாகிறது.

அதாவது அகமுடையார் அரண் திரு.பாலமுருகன் அகமுடையார் ஒரு தகவலை நம்மிடம் கூறினார். ஆதாவது
மதுரை நாயக்க மன்னர்களின் மெய்காவலராகவோ படையிலோ பணிபுரிந்த சோணை சேர்வை என்பவர் நாயக்க மன்னரை காப்பதற்காக உயிர் துறந்துள்ளார் .இவர் இறந்தபோது இவரது மனைவை சதி எனும் உடன்கட்டை ஏறியுள்ளார். இவர் உடன்கட்டை ஏறிய இடம் இன்று வைகை கரையில் அழகர் ஆற்றுக்குள் இறங்கும் போது நுழையும் இடத்தில் ( தற்போதைய மீனாட்சி கல்லூரி அருகே ) அமைந்துள்ளதாக அறிகின்றோம்.
இதற்காக சோணை சேர்வை வழியினருக்கு நாயக்க மன்னர்கள் நிலதானம் (உதிரப்பட்டி) வழங்கி பட்டயம் வழங்கியுள்ளதாகவும் இந்த செப்பேடு தெலுங்கு மொழியில் இருப்பதாகவும் அறியமுடிகின்றது. ஆனால் துரதிஷ்டவசமாக சம்பந்தப்பட்டவர்கள்
இந்த செப்பேட்டை வெளியில் காட்ட மறுப்பதால் இதில் உள்ள செய்திகளை முழுமையாக அறிய முடியவில்லை. குறிப்பிட்ட சோணை சேர்வை வழியினர் இன்று குறிப்பிட்ட பரவை எனும் ஊர்களில் வாழ்வதை அறிகின்ற போது இந்த ஒலை ஆவணம் குறிப்பிடும் பரவை வாசல் சேர்வை என்பவர்களுக்கும் இவர்களுக்கும் தொடர் இருக்கலாம் .

குறிப்பு:
மதுரை சேர்வைக்கார் மண்டகப்படி இருப்பதே சில வருடங்கள் முன்புவரை மதுரை நகர் பகுதியில் இலட்சக்கணக்கில் இருக்கும் அகமுடையார்களில் ஒரு சிலர் தவிர மற்ற எவருக்கும் தெரியாது.

இந்த சோணை சேர்வை நாயக்க மன்னர்களுக்காக உயிர் துறந்ததும் அது வைகைகரையில் இருக்கும் செய்தியும் ஒட்டு மொத்த அகமுடையார்களில் ஒரு சிலர் தவிர யாருக்கும் தெரியாது .

இப்படி வரலாற்று செய்திகளை நமக்குள்ளேயே வைத்துக்கொண்டு இருந்தால் என்றாவது ஓர் நாள் இதற்கு இடையூறு ஏற்படும் போது எவருக்கும் இந்த விடயம் தெரியாததால் உதவுவதற்கு வாய்ப்பிலாமல் சென்று விடுகின்றது. செய்திகளை பாதுகாத்து, வரலாற்றை ஆவணப்படுத்தி பொதுவெளியில் ஆவணபப்டுத்துதல் மூலம் தான் மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும் பிரச்சனைகள் ஏற்படும் போது எளிதில் தீர்வும் கிடைக்கும்.

சொல்வதற்கு நிறைய விடயங்கள் உண்டு ஆனால் சிலவற்றை வெளிப்படையாக பொதுவெளியில் விமர்சனம் செய்ய முடியவில்லை. ஆனால் ஒன்றே ஒன்று ! ஆவணங்களை ஒருவர் தன்னோடு வைத்துக்கொண்டாடல் அவர் இறக்கும் போது அந்த ஆவணமும் அவரோடு அழியும் வாய்பு உள்ளது. அவர்களுக்கு பின்னால் வரும் சந்ததியினர் அதை பாதுகாத்து கடத்துவார்கள் என்று சொல்லமுடியாது ஏனென்றால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த ஆவணங்களின் முக்கியத்துவம் தெரியாமல் இவற்றை எடைக்கு போடுவதும் , அடுப்பெரிக்க பயன்படுத்தியதும், குப்பையில் கொட்டியதும் நடந்திருப்பதாக திரு.பாலமுருகன் அகமுடையார் தெரிவித்துள்ளார்.

இதனாலேயே ஒருவருக்கு பாரம்பரியமாக கிடைத்துவந்த உரிமைகள் பின்னாட்களில் அவர்களின் வழியினருக்கு கிடைக்காமல் போய்விட்டது என்பதோடு அகமுடையாருக்கான வரலாறும் அவர்களோடு அழிகின்றது.

ஆகவே இனிமேலேனும் அகமுடையார்கள் விழிப்புனர்வு அடைந்து ஆவணங்களை வெளிப்படுத்தி தங்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.

அகமுடையார் வரலாற்று தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள
அகமுடையார் ஒற்றுமை வாட்ஸ் அப் எண் : 072005 07629இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?