First
அகம்படி முதலிகளில் கூடல் மாறன் குழந்தான் சேதிராயன் கல்வெட்டு பார்வையிடல்
————————–
அகமுடையார் வரலாற்று மீட்பு குறித்து கல்வெட்டு செய்திகள்,இலக்கியங்கள், நூல் குறிப்புகள் வழியே அகமுடையார் ஒற்றுமை முகநூல் பக்கத்தில் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றோம்.
இதே போல் அரசு மற்றும் தனியார் மூலம் ஏற்கனவே படியெடுத்து வெளியிட்ட கல்வெட்டு செய்திகளை அக்கல்வெட்டு கண்டறியப்பட்ட இடங்களுக்கே சென்று கல்வெட்டுக்களை நேரடியாக பார்த்து அதனை பதிவு செய்யும் அரிய முயற்சியை அகமுடையார் அரண் நிறுவனர் திரு.பாலமுருகன் அகமுடையார் தொடர்ந்து செய்துவருகின்றார்.
அதன் பொருட்டு சென்ற வாரத்தில் நடு நாட்டில் உள்ள கல்வெட்டுக்களை நேரடியாக ஆய்வு செய்துள்ளார் அவ்வகையில் நேற்று (01-01-2022) அன்று திருப்பாலைப்பந்தல் எனும் ஊரில் கிடைத்த அகம்படியர் கல்வெட்டு கிடைத்த கோவிலில் சென்று கல்வெட்டினை நேரடியாக சென்று ,பார்த்து நமக்கு படம் பிடித்து அனுப்பியுள்ளார்.
மேலும் இந்த கல்வெட்டு பற்றிய குறிப்பு மத்திய அரசு கல்வெட்டு ஆண்டறிக்கையில் பதிவு செய்யப்படிருந்தது இதை பின்பற்றி பல்வேறு நூல்களில் இச்செய்தி வெளியிடப்படிருந்தது என்றாலும் இக்கல்வெட்டின் முழுவரிகள் எந்த நூலிலும் இடம்பெறாமல் இருந்தது.
இந்நிலையில் அகமுடையார் அரண் நிறுவனர் திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்கள் மைசூர் மத்திய தொல்லியல் துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று இக்கல்வெட்டு படியினை நேரடியாக பெற்று இச்செய்தியை ஆராய்வதற்கு நமக்கு அனுப்பியிருந்தார் அதற்காக அவருக்கு நமது நன்றிகள்.
இக்கல்வெட்டு செய்தி பற்றி விரிவாக பார்ப்பதற்கு முன்பு இக்கல்வெட்டு குறிப்பினை முதலில் அறிந்து கொள்வோம்.
திருப்பாலைப்பந்தல் என்னும் சிற்றூர் தற்போதுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் ,திருக்கோவிலூர் எனும் ஊரில் இருந்து 8 கீ.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இவ்வூரில் உள்ள திருநாகிசுவரமுடையார் கோவிலில் கிடைத்த மூன்றாம் குலோத்துங்க சோழன்(கி.பி 13ம் நூற்றாண்டு) காலத்து கல்வெட்டு செய்தியில் அறகளூர் மகதேசன் பொன்பரப்பினான் என்ற அரசரிடம் அதிகாரியாக பணியாற்றிய அகம்படி இனத்தை சேர்ந்தவனான கூடல் மாறன் குழைந்தான் சேதிராயன் என்பவன் இக்கல்வெட்டு அமைந்துள்ள கோவிலில் மண்டம் எழுப்பியதோடு அக்கோவிலில் பூசைகள் சிறப்பாக நடைபெற நான்னிசை (நான்கு திசையிலும் ) ஒரு வேலி நிலமும், புஞ்சை(புன்செய்) நான்கு வேலி நிலத்தை கோவிலுக்கு இறையிலியாக (வரி நீக்கப்பட்ட நிலமாக) வழங்கியுள்ளான். இந்த நிலங்களில் கிடைக்கும் விளைச்சல் வருமானத்தை கொண்டு கோவிலில் பூசைகள் நடைபெற ஏற்பாடுகள் செய்துள்ளான்.
இதனை இக்கல்வெட்டு செய்தியில் “நான் செய்த திருமண்டபத்துக்கு ” என்று கூறியுள்ளதன் மூலமும் “இந்நாயனாருக்கு தேவதானமாக விட்டுக்கல்வெட்டிக்குடுத்தேன் குழந்தான் சேதிராயநென்” என்று கூறி அறிவித்துள்ளதை வைத்தும் தெளிவாக அறிந்துக்கொள்ள முடிகின்றது.
ஆதாரம்: மத்திய அரசு கல்வெட்டு ஆண்டறிக்கை எண் 407, ஆண்டு 1937-38 பார்க்க இணைப்பு: 1,2
கல்வெட்டு தொடர்பான விரிவான செய்திகள்
———————————-
கல்வெட்டில் ” அகம்படி முதலிகளில் கூடல் மாறன் குழைந்தான் சேதிராயன் ” என்ற பெயர் குறிப்பிடப்படுகின்றது.
இதில் அகம்படி முதலி என்பது அகம்படி இனத்தில் முதலி என்கிற தலைவனாக அல்லது ஆதிகாரம் படைத்தவனாக (அதிகாரியாக) பணியாற்றியவன் என்பதை குறிப்பிடுகின்றது.
மேலும் இதற்கு அடுத்து வரும் கூடல் மாறன் என்பது பாண்டிய அரசு தொடர்புடைய பெயராகும். அதாவது மாறன் என்பது பாண்டிய மன்னர்களை குறிக்கும் மரபுப்பெயராகும். அதே போல் கூடல் என்பது பாண்டிய அரசின் தலைநகரான கூடல் நகரான மதுரையை குறிக்கும் மற்றோரு நகராகும்.
சோழர் ஆட்சியாண்டில் தொடங்கும் இக்கல்வெட்டில் பாண்டிய அரசு மரபுப்பெயர்களை குறிப்பிடுவதற்கான காரணம் , கல்வெட்டில் குறிப்பிடப்படும் குழந்தான் சேதிராயன் என்பவன் சோழர்களின் சார்பில் பாண்டிய நாட்டை ஆட்சி செய்தவன் என்பதை உணர்த்துகின்றன.
வாணர் குல அரசர்கள் சோழர்களால் ஏவப்பட்டு பாண்டிய நாட்டை வென்றனர் என்பதையும் பாண்டிய நாட்டை சில காலம் இவர்கள் ஆட்சி செய்தனர் என்பதை பல்வேறு வரலாற்றஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் அகம்படி இனத்தை சேர்ந்த குழந்தான் சேதிராயன் ,பொன்பரப்பினான் எனும் வாணர் குல மன்னனிடம் அதிகாரியாக பணியாற்றியதையும் ,இவனுக்கு கூடல் மாறன் என்ற பெயர் சிறப்புப்பெயர் இருப்பதைக்கொண்டும் இவன் சோழர்களின் சார்பாக பாண்டிய அரசப்பிரதிநிதியாகவோ அல்லது பாண்டிய மன்னர்களை கண்காணிக்கும் அதிகாரியாகவோ இருந்திருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
இதனை மேலும் ஓர் ஆதாரம் கொண்டும் உறுதி செய்துகொள்ளலாம். அதாவது
இன்றைய விழுப்புரம் மாவட்டம் அறகண்டநல்லூர் ஒப்பில்லாமணீஸ்வரர் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட குலோதுங்க சோழர் காலத்து கல்வெட்டு செய்தியில் இதே வாணர் குலத்தில் வந்த மகதை பெருமாளிடம் பணியாற்றிய ” பெரிய பெருமாள் பாண்டிய ராயன்” எனும் அகம்படி இனத்தை சேர்ந்தவன் குறிப்பிடப்படுகின்றான். இவன் பெயரிலும் பாண்டிய அரசர்களை விளிக்க பயன்படும் பெருமாள் என்றும் பாண்டிய ராயன்(அரசன்) என்ற பெயர்கள் பயன்பட்டிருப்பதை பற்றியும் இவன் சோழ அரச பிரதிநியாக பாண்டிய நாட்டை ஆட்சி செய்தவன் என்பதையும் ஏற்கனவே சென்ற பதிவுகளில் குறிப்பிட்டிருந்தோம்.
ஆதாரம்: தென் இந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 7, கல்வெட்டு எண் 493.பார்க்க இணைப்பு:
இச்செய்தியை ஓப்பிட்டுப்பார்க்கும் போது இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் குழந்தான் சேதிராயன் என்பவனும் சோழ அரசர்களின் சார்பாக பாண்டிய நாட்டை ஆட்சி செய்தவன் என்ற உண்மை உறுதியாகின்றது.
மேலும் இந்த குழந்தான் என்ற பெயருக்கு பின்னால் சேதிராயன் என்ற பெயர் குறிப்பிடப்படுகின்றது. சேதிராயர் என்பது சோழர்களின் கிளைப்பிரிவினரை அல்லது மலை நாட்டினை ஆட்சி செய்தவர்கள் அல்லது குறிக்க வர்களுடன் திருமண தொடர்பு உடையவர்களை குறிக்க பயன்பட்ட பெயராகும்.
சோழர்கள் என்போர் அகம்படி இனத்தை சேர்ந்தவர்கள் என்பது குறித்து ஆதாரங்களுடன் விரிவான காணொளியை ஏற்கனவே நமது அகமுடையார் ஒற்றுமை யூடிப் சேனலில் வெளியிட்டிருந்தோம்.
அதை நிருபிக்கும் மற்றொரு சான்றாக இக்கல்வெட்டு விளங்குகின்றது. அதாவது சோழர்களின் சார்பாக பாண்டிய நாட்டை ஆட்சி செய்தவனாக இந்த குழந்தான் சேதிராயன் எனும் அகம்படியர் குறிப்பிடும் நிலையில் இவனின் சேதிராயர் பட்டம் இவன் சோழர்களின் கிளை வழியினராக குறிப்பதை கொண்டும் சோழர்கள் இன்றைய அகமுடையார் இனத்தவர்கள் என்பதை உணர்ந்துகொள்ள முடியும். நம்மை பொறுத்தவரை சோழர்களான அகம்படியர்கள் மலை நாட்டினருடன் கொண்ட திருமண உறவை நிறுவும் சான்றாக இது விளங்குகின்றது.
இன்னும் நிறைய செய்திகள் உள்ளன.அதையும் வரும்காலத்தில் ஒவ்வொன்றாக பார்ப்போம்.
நன்றி அறிவிப்பு:
இந்த ஆய்வுப் பணிக்கு அனைத்து உதவியும் செய்த திருக்கோவிலூர் அகமுடையார் அடையாளம், உயர்திரு T.K.T.முரளி அண்ணன் அவர்களுக்கும், திருக்கோவிலூர் அகமுடையார் (துளுவவேளாளர்) சங்கம் நிர்வாகக்குழுவிற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அகமுடையார்கள் வரலாற்று தேடலின் அவசியம்
——————————————–
அகமுடையார் சாதியினருக்கு பல்வேறு பட்டங்களில் காணப்படுவதால் பட்டம் வேறுபடுவதால் ஒரே சாதியினரையே வேறு சாதியின நினைப்பதும் ,பட்டத்தின் பெயர் ஒற்றுமையை காட்டி மாற்று சாதியினரை தங்கள் சாதி என நினைத்து மயங்கும் நிலமையும் ஏற்பட்டுள்ளது.
ஆனால் கல்வெட்டுக்களில் சென்று பார்ப்போமானால் இன்றைய அகமுடையார் சாதியினர் உலகம் முழுக்கவே அகம்படி ,அகம்படியர் என்ற ஒற்றை பெயருடன் காணப்படுகின்றதை பார்க்க முடியும். அகமுடையார்கள் இந்த உண்மையை உணர்ந்து ஒன்றாக இணைய வேண்டுமென்றால் இது போன்ற வரலாற்று மீட்டெடுப்பு வேலைகளை தொடர்ந்து செய்ய வேண்டும் அதற்கு T.K.T.முரளி அண்ணன் அவர்கள் மற்றும் திருக்கோவிலூர் அகமுடையார் (துளுவவேளாளர்) போன்று மற்றவர்களும் உதவ வேண்டும்.
கட்டுரை ஆக்கம்
மு.சக்திகணேஷ்(மதுரை-திருமங்கலம்)
அகமுடையார்ஒற்றுமை சார்பாக.
இணைப்புகள்
1,2 – மத்திய அரசு கல்வெட்டு ஆண்டறிக்கை எண் 407, ஆண்டு 1937-38
3- திருப்பாலைப்பந்தல் கல்வெட்டின் முழு வரிகள் (தற்போதைய எழுத்து வடிவத்தில்)
4- கோவிலில் உள்ள கல்வெட்டு (கல்வெட்டின் உண்மை படம்)
5,6- கல்வெட்டை சுட்டிக்காட்டும் அகமுடையார் அரண் நிறுவனர் திரு.பாலமுருகன் அகமுடையார்
7-கல்வெட்டு உள்ள கோவில் அர்த்த மண்டபம்
8,9,10- கோவிலின் புகைப்படங்கள்
11-அறகண்டநல்லூரில் ஏற்கனவே பார்த்த பெரிய பெருமாள் பாண்டிய ராயன் கல்வெட்டின் முழு வரிகள் (தற்போதைய எழுத்து வடிவத்தில்)
12,13,14- அறகண்டநல்லூர் கோவிலில் உள்ள பாண்டிய ராயன் மூலக்கல்வெட்டு
கல்வெட்டின் முழுவரிகள்(மூலபாடம்)
————————————
திரிபுவன சக்கரவர்த்திகள் குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 26 பெண்ணை தென்கரை வாணக்கோப்பாடி கீழ் தொண்டை நாட்டுத்திருப்பாலை பந்தல் உடையார் திருநாகிசுவரமுடையாற்கு ஆற்றூர் கூட்டத்து ஆறகளூர் மகதேசன் இரா ரா தேவன் பொற்பரப்பினான் அகம்படி முதலிகளில் திருமுனைப்பாடி நாட்டுக் கூடல் மாரன்(மாறன்) குழைந்தான் செதிராயனேன்(சேதிராயனேன்) இந்நாயனார்க்கு நான் செய்த திருமண்டபத்துக்கு பழந்தேவதானத்து கிழக்கு நாந்(நான்) விட்ட நான்னிசை நிலம் ஒரு வேலியும் புஞ்சை நான்கு வேலி நிலமிறையிலியும் அந்தராயம் உட்பட இந்நாயனாருக்கு தேவதானமாக விட்டுக்கல்வெட்டிக்குடுத்தேன் குழந்தான் சேதராயநென் இது மாறுவான் நரகத்து கீழா நரகமாவான் கெங்கையிடை குமரியிடை பசுக்குத்துவான் பாவங்கொள்வான் இது பன்மாசுவரர் இரக்ஷை
agambadi mudaligalil koodal maran kulainthan sedirayan chedirayan annual report on indian epigraphy 1935-38 insno407
koodal maaran maran kulainthan chedirayan sedirayan
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்