First
அகமுடையார் ஒற்றுமை வெப்சைட் 2 நாட்கள் பின்பு மீண்டும் இயங்குகிறது
—————————————-
அகமுடையார் ஒற்றுமை வெப்சைட் agamudayarotrumai.com 2015ம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது.
நேற்றைக்கு முன் தினம் (ஏப்ரல் 27ம் தேதி) நம்மை போனில் தொடர்புகொண்ட சகோதரர் ஒருவர் அகமுடையார் ஒற்றுமை வெப்சைட் தெரியவில்லை என்றார்.
சோதித்து பார்த்தபோது டொமைன் புதுப்பிக்கும் நாள் ஏப்ரல் 27ம் தேதி வந்திருந்தது.அதை கவனிக்காததால் டோமைனில் நேம் சர்வர்கள் மாறி வெப்சைட் பார்வைக்கு கிடைக்காமல் இருந்தது. பின்னர் நேற்று (28 ஏப்ரல் 2023) அந்த டொமைனை ரினுவல் செய்ததோடு சர்வர் பிளானுக்கான பணத்தையும் செழுத்தி 1 வருடத்திற்குள் புதுப்புத்துக்கொண்டோம்.
ஆகவே இரு நாட்களுக்கு பின் அகமுடையார் ஒற்றுமை வெப்சைட் மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கின்றோம். அதோடு நினைவூட்டிய அந்த உறவுக்கு நமது நன்றிகள்!
டொமனை ரெனுவல் செய்யும் போது ஒரு வருடத்திற்கு ரூ1600 வாங்கினார்கள். பொதுவாக .காம் டொமைன் ரிஜிஸ்டர் செய்கையில் வருடத்திற்கு ரூ800 முதல் ரூ1200 வரை செழுத்துவதே வழக்கம் .
ஆனால் ஒருவருடம் முடிந்து அடுத்து ஒருவருடம் புதுப்பித்தலுக்கே ரூ1600 பிடித்துகொண்டார்கள்.
டொமைன் வாங்கும்போதே 5-6 வருடத்திற்கு மொத்தமாக ரிஜிஸ்டர் செய்திருந்தால் இந்த கூடுதல் பணம் வந்திருக்காது. சில பல காரணங்களால் அதை செய்யாமல் விட்டதினால் இந்த கூடுதல் தொகை வந்துவிட்டது.
அதே போல் ஒருவருட செர்வருக்கு ரூ 14,000 (VPS Starter Plan ,Annual Term) பணம் செழுத்தி விட்டோம்.
இதையெல்லாம் எதற்கு சொல்கிறோம் என்றால் அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக், யீடிப் , வெப்சைட் ,அப்ப்ளிகேசன் போன்றவற்றி நடத்துவதற்கு பின்னால் மிகப்பெரிய உழைப்பும், செலவுகளும், எதிர்ப்பும் ,சிரமங்களும் இருக்கின்றன.
இதையெல்லாம் தாண்டி இவற்றை நடத்துவதன் நோக்கம் இந்த தளங்களையெல்லாம் நீங்கள் தக்க முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காத்தான் .
பேஸ்புக், வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற குருப்களில் நாம் வெளியிடும் செய்திகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
உங்களுக்கு தெரிந்த தகவல்களை எங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது தான் உங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது ஆகும்.
அகமுடையார் ஒற்றுமை வெப்சைட்டால் என்ன பலன் என்று நீங்கள் கேள்வி எழுப்பினால் அதில் நிறைய பலன்கள் உள்ளன. அதில் உள்ள முக்கிய பலன் என்னவென்றால் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அகமுடையார் ஒற்றுமை வெளியிட்ட தகவல்களை உடனுக்குடன் தேடி எடுக்க முடியும் என்பது தான்.
அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக்கில் பல்வேறு தகவல்களை கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு தகவல்களை வெளியிட்டிருப்போம். ஆனால் அவற்றில் உங்களுக்கு திடீரென்று ஒரு தகவல் தேவைப்படலாம். ஆனால் அவற்றை தேடி எடுக்க ஒவ்வொரு பதிவாக கீழே சென்று பார்த்து தேட வேண்டும். இது களைப்பையும் ,நேரத்தையும் விரையம் செய்யும் பணியாகும்.
அதே நேரம் agamduayarotrumai.com வெப்சைட் சென்று அங்குள்ள சர்ச் பாக்சில் நீங்கள் தேட வேண்டுய வார்த்தையை இட்டு சர்ச் பட்டனை கிளிக் செய்தால் நீங்கள் தேடும் தகவல்கள் உள்ள கட்டுரைகள் பட்டியலிடப்படும் அதில் வரும் தகவல்களை ஒவ்வொன்றாக கிளிக் செய்து பார்த்து நீங்கள் தேடிய தகவல்களை உடன் பார்க்காலாம்.
உதாரணத்திற்கு அகமுடையார் சமுதாயத்தில் பல்லவராயர் பட்டம் குறித்து தகவல் பெற விரும்பினால் பல்லவராயர் என்று டைப் செய்தால் பல்லவராயர் குறித்து இதுவரை நாம் வெளியிட்ட தகவல்களை சில நொடிகளில் நீங்கள் பார்க்க முடியும்.
இது போன்று பல்வேறு சிறப்பம்சங்கள் அகமுடையார் ஒற்றுமை வெப்சைட்டில் உள்ளன. அதை இன்னொரு பதிவில் விரிவாக சொல்கின்றோம். இத்தகைய சிறப்பம்சங்கள் கொண்ட வெப்சைட்டையும் அதில் உள்ள தகவல்களையும் ஆக்க பூர்வமான வழியில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் அடிக்கடி இப்பதிவுகளை சேர் செய்து அகமுடையார் வரலாற்று தகவல்களை பொதுவெளியில் அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் நம் கோரிக்கை.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்