இராமநாதபுரம் பிரதானி முத்திருளப்ப பிள்ளை அகமுடையார் சாதியே! ஆதாரம் 1 -மற்றும் அக…

Spread the love

First
இராமநாதபுரம் பிரதானி முத்திருளப்ப பிள்ளை அகமுடையார் சாதியே! ஆதாரம் 1 -மற்றும் அகம்படியர் ,அகமுடையார் பெயர் குழப்பவாதிகளுக்கு பதில்
————————————————

பிரதானி பற்றி முன்னுரை
——————-
இராமநாதபுரம் சேதுபதிகளிடம் கி.பி 1784 முதல் 1791 வரை பிரதானியாக பணியாற்றியவர் பிரதானி முத்திருளப்ப பிள்ளை.
இவர் மிகச்சிறந்த மதியூகியாகவும் , அறச்செயல்கள் புரிந்தவராகவும் அறியப்படுவர்.

அக்காலத்தில் எல்லா நிலங்களுக்கும் ஒரே மாதிரி வரிவிதிப்பு இருந்து வந்தது.
விளையாத நிலம் உள்ள விவசாயிகள் விளையாத நிலத்திற்கு தொடர்ந்து ஓரே மாதிரியான செழுத்த நிர்பந்தத்தால் தங்கள் மாடு ,கன்றுகளை கூட விற்று வரி செழுத்தி மிகவும் பாதிப்படைத்து இருந்தனர் . மற்றொரு பக்கம் நல்ல மகசூல் உள்ள நிலம் உள்ளவர்கள் அதே வரியை செழுத்திவிட்டு நல்ல மகசூலை அனுபவித்து வந்தனர்.

பிரதானி முத்திருளப்ப பிள்ளை குடிமக்களது நிலங்களின் தன்மை, நீராதாரம் ஆகியவைகளைக் கணக்கில் கொண்டு குடிகள் அவர்களது நிலத்திற்குச் செலுத்த வேண்டிய தீர்வையை நிர்ணயம் செய்தார்.

இதற்காக இவர் சேது நாட்டின் நிலத்தை நஞ்சை புஞ்சை, மானாவாரி, பொட்டல் என்று தரவாரியாகப் பிரிவு செய்தார். அதற்கேற்ப வரி செழுத்தினால் போதும் என்று புதிய வரிவிதிப்பு முறையை கொண்டு வந்தார்.
இதன் மூலம் அரசுக்கு வரி வருவாய் அதிகரித்ததோடு , விவசாயிகளும் வரிச்சுமையில் இருந்து விடுபட்டு நிம்மதி அடைந்தனர்.

அதுமட்டுமல்ல தான் பதவி வகித்த இராமநாதபுரம் பகுதி பெரும்பாலும் வறட்சியில் இருப்பதை அறிந்திருந்த அவர் அதற்கு ஓர் நிரந்தர தீர்வு அளிக்க விரும்பினார்.

அதற்காக வருசநாட்டு மலைபகுதியில் உருவாகி கடலில் சென்று வீணாகி வந்த வைகை நீரை அணைகட்டி திருப்பி இராமநாதபுரம் வரை செழுத்தி இராமநாதபுரத்தை தஞ்சை போன்று வளமிக்க பகுதியாக்க விரும்பினார்.

இதை சேதுபதி மன்னர்களிடம் தெரிவித்து ஆய்வுப்பணிகள் செய்து வந்த நிலையில் நிதிப்பற்றாக்குறை காரணமாக சேதுபதிகளால் இப்பணியை நிறைவேற்ற முடியவில்லை. அந்த வகையில் இன்று இருக்கும் பெரியார் அணை திட்டத்தின் முன்னோடி பிரதானி முத்திருளப்ப பிள்ளையாவார்.
பல்வேறு ஆக்கப்பணிகளை மேற்கண்ட இவர் அறப்பணிகள் பலவற்றையும் செய்துள்ளார் .

ஆலயங்கள் மற்றும் மடங்களுக்கு நிதி ஆதாரத்திற்கு மகமையை ஏற்படுத்தி அதற்கு பல்வேறு இனத்தவர்கள்,பக்தர்கள் ,கோவில் நிலங்கள் ,விளைச்சல் வருவாயை சேர்த்து அதன் மூலம் நிதிநிலமையை மேம்படுத்தினார்.

உலகின் நீண்ட கோவில் பிரகாரமாக உள்ள இராமேஸ்வரம் கோவிலின் மூன்றாம் பிரகாரம் இவர் தலைமையிலேயே சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டது. அதற்கு சான்றாக பிரகாரத்தில் இவரது சிலை வடிக்கப்பட்டுள்ளது.

பிரதானி முத்திருளப்ப பிள்ளை அகமுடையார் இனத்தை சேர்ந்தவர்
——————————————————
இவ்வளவு சிறப்புமிக்க பிரதானி முத்திருளப்ப பிள்ளை அகமுடையார் இனத்தை சேர்ந்தவர் . இவருடைய வாரிசுகள் இன்றும் இராமநாதபுரம் ,மதுரை பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

இருப்பினும் இவருடைய பிள்ளை பட்டத்தினை வைத்து சிலர் இவரை வெள்ளாளர் என தவறாக நினைத்து அறியாமையால் உள்ளனர்.
அவர்களுக்கு உணர்த்தும் விதமாகவும் நமது அகமுடையார் உறவுகளுக்கு பிரதானி முத்திருளப்ப பிள்ளை அகமுடையார் இனத்தை சேர்ந்தவர் என்பதற்கு பல்வேறு ஆதாரங்களை தொடர்ந்து வழங்க உள்ளோம்.

அந்தவகையில் இப்பதிவில் குறிப்பிட்ட ஆதாரத்தை பார்ப்போம்.
1930ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்த கோவாபரேட்டிவ் சொசைட்டிகளின் டிப்டி ரிஜிஸ்தராக மிக முக்கிய பதவியில் வகித்தவர் M.R.பூபதி பிள்ளை அவர்கள் இவர் முன்னர் சொன்ன பிரதானி முத்திருளப்ப பிள்ளையின் வழியினர் ஆவர் .

இவர் சென்னை மாகாண அகம்படியர் சங்கத்தின், ஒருங்கிணைந்த மதுரை ஜில்லா தலைவராகவும் விளங்கி அகம்படியர் சமூத்திற்கு பல்வேறு ஆக்கபணிகளை திட்டமிட்டு நடத்தியவர்.

விருதுநகர் அகம்படியர் வாலிபர் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு விழா 1932 ஆம் ஆண்டு ஜூலை மாதம், 24ம் தேதி மேற்குறிப்பிட்ட மு.இராமச்சந்திர பூபதி பிள்ளை (M.R.பூபதி பிள்ளை ) அவர்கள் தலைமையேற்றார்.

அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டு, வரவேற்புப் பத்திரம் வழங்கப்பட்டது . அதில் இவர் புகழ்மிக்க பொக்கிசம் முத்திருளப்ப பிள்ளை வழிவந்தவர் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளதைக்காணலாம்(பார்க்க இணைப்பு 1 )
அதுமட்டுமல்ல இராமேஸ்வரம் பாம்பன் நகரில் பிறந்து பெரும் ஞானியாக விளங்கிய அகம்படிய திலகரான பாம்பன் சுவாமிகளும் பொக்கிசம் முத்திருளப்ப பிள்ளை அவர்களும் உறவினர்கள் ஆவர். பாம்பன் சுவாமிகளும் அகம்படியர் இனத்தில் பிள்ளை பட்டம் கொண்டவர் ஆவர்.
சில தினங்களுக்கு முன்பு நாம் வெளியிட்ட
சீனி முருகப்பிள்ளை என்பவர் குறிப்பிட்ட பாம்பன் சுவாமிகளின் வாரிசு ஆவார் இவரை அகம்படியர் என்று குறிப்பிட்ட ஆவணத்தை அப்பதிவில் குறிப்பிட்டுருந்தோம் அதனை இப்பதிவிலும் இணைத்துள்ளோம் (பார்க்க இணைப்பு 3)

இராமநாதபுரம் பகுதியில் பிள்ளை பட்டம் கொண்ட அகம்படியர்கள் குறிப்பிட்ட அளவில் உள்ளனர் இவர்கள் ஒருவருக்கொருவர் நெருங்கிய உறவுக்காரர்களாவர்.

ஏன் இந்த அவல நலைமை???
———————-
பிரதானி முத்திருளப்ப பிள்ளை அவர்களின் வாரிசுகள் இன்றும் இராமேஸ்வரம்,ராமநாதபுரம், மதுரை பகுதியில் நிகழ்காலத்தில் வாழ்ந்து வரும் நிலையிலும் அகம்படியர் சாதியினரான பிரதானி முத்திருளப்ப பிள்ளையை வெள்ளாளர் என சிலர் தவறாக புரிந்து கொண்டதற்கு காரணம் என்ன?

ஒன்று அறியாமை மற்றோன்று நம் வரலாற்றை நாம் முறையாக ஆவணப்படுத்தாத அலட்சியமுமே ஆகும்.

ஆம் தென் மாவட்ட அகம்படியர்கள் பலர் சேர்வை பட்டமே அகம்படியர் என்று நினைப்பதும் பிள்ளை ,முதலி பட்டம் உள்ள அகம்படியர்கள் பற்றி இது நாள் அறியாமல் இருந்த அறியாமையே முதற் காரணமாகும் .
பொது சமூகத்தில் நல்ல மதிப்பீட்டில் உள்ள அகமுடையார்கள் எவரிடமும் தங்களை உயர்த்திக்காட்டிக்கொள்ள அவசியமில்லை என்று நினைப்பதால் வரலாற்றின் மீது பெரிதாக அக்கறை காட்டியதாக தெரியவில்லை.

அடுத்து வரலற்றின் மீது அகமுடையார் சமுதாயத்திற்கு வரலாற்றின் மீது பெரும் அலட்சியப்போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.

பொருளாதார வளர்ச்சியை நோக்கி மட்டுமே நகர்ந்து நினைக்கின்ற அகமுடையார்கள் தங்கள் முன்னோர்கள் மற்றும் வரலாற்று செய்திகளை தங்கள் வழியினருடம் வெளிப்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை.
முன்னோர்கள் சேர்த்து வைத்த ஆவணங்கள் பலவற்றையும் சேமித்தவரின் காலம் முடிந்தபின் பல காலம் சேர்த்து வைத்த பல்வேறு அரிய ஆவணங்கள் கேட்பாரற்று செல்லரிக்க போட்டுவிடுவதும் ,கரையான்கள் தின்பதும் ,வீட்டில் தீ எரிக்க பயன்படுத்தி விடுவதும் என அழிந்துவிட்டன என்று அகமுடையார் ஆவண சேகரிப்பிலேயே தன் வாழ்நாளில் பெரும்பகுதியை செலவிட்ட அகமுடையார் அரண் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் அகமுடையார் தெரிவிக்கிறார்.

இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ள M.R.பூபதி பிள்ளை அவர்களின் புகைப்படம் மற்றும் இவருக்கு விருதுநகர் அகம்படியர் சங்க வரவேற்பு பத்திரமும் M.R.பூபதி பிள்ளை அவர்களின் வாரிசுதார்களிடமிருந்து பாலமுருகன் அகமுடையார் அவர்களின் பல ஆண்டுகள் முயற்சிக்குப்பின் கிடைக்கப்பெற்றது.

ஆகவே இனிமேலேனும் அகமுடையார் சமூகம் வரலாறு மற்றும் ஆவணங்களை பாரமாரிப்பதிலும் வெளிக்கொணர்வதிலும் ஆர்வம் காட்ட வேண்டும்.

நன்றி
——
தான் பெரிதும் முயன்று சேகரித்த இந்த ஆவணங்களை அகமுடையார் வரலாற்றை வெளிப்படுத்த நமக்களித்த அகமுடையார் அரண் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு நம் மானமார்ந்த நன்றிகள்.

அகமுடையார் ,அகம்படியர் இரு பெயர்களும் ஒன்றே
—————————————-
1939ம் வருடத்தில் தென்மாவட்டமான விருதுநகர் அகம்படியர் சங்கம் வழங்கிய வரவேற்பு பத்திரத்தில் அகம்படியர்,அகமுடையார் என்று இரு பதங்களும் பயன்படுத்தப்பட்டிருப்பதை கவனிக்கலாம்.

ஆகவே தென்மாவட்டத்தில் இருப்பவர்கள் அகம்படியர் என்றும் வடமாவட்டத்தில் இருப்பவர்கள் அகமுடையார்கள் என்றும் சம்பந்தப்படாத சாதியை சேர்ந்தவர்கள் செய்யும் விசமப்பிரச்சாரத்தை நம் தென் மாவட்ட அகம்படிய முன்னோர்கள் முறியடித்துள்ளனர். உணர்ந்து ஒற்றுமையாவோம்.

குறிப்பு:
பிரதானி முத்திருளப்ப பிள்ளை அகமுடையார் என்பதற்கு இன்னும் பல ஆதாரங்களை வரும் காலங்களில் வெளிப்படுத்த இருக்கின்றோம். தொடர்ந்து பதிவுகளை வாசியுங்கள். நன்றி.
அகமுடையார் ஒற்றுமைக்காக
மு.சக்திகணேஷ் சேர்வை(அகமுடையார்) மதுரையிலிருந்து.

வரவேற்பு பத்திரம் -எழுத்து வடிவத்தில்
—————————–
வரவேற்பு பத்திரத்தின் படத்தினை இப்பதிவில் இணைத்துள்ளோம் ஒருவேளை படம் தெளிவாக இல்லாதிருந்தால் பதிவில் உள்ள கருத்துக்களை எழுத்து வடிவில் கீழே கொடுத்துள்ளோம்.
சிவமயம்.
மதுரை, நமது குலதிலகரும்,
கோவாபரேட்டிவ் சொசைட்டிகளின் டிப்டி ரிஜிஸ்தராருமாகிய
மகா – ஸ்ரீ – ஸ்ரீ – ஸ்ரீ M.R.பூபதி பிள்ளை அவர்களுக்கு
விருதுநகர், அகம்படியர் வாலிபர் சங்கத்தார் வாசித்தளித்த
வரவேற்புப் பத்திரம்.
—————————————
வருக! வருக!! தங்கள் வரவு நல்வரவாகுக!!!
இந்நகர் நம்குல வாலிபர்களால் நடத்தப் பெறுமிவ் வாலிபர் சங்க முதலாவது ஆண்டு விழாவின் அவைத்தலைமை பூண மனமியைந்த தங்கள் வரவு கண்டு ஆனந்தக் கடலாடும் யாங்கள் தங்களை உள்ளன்புடன் வணங்கி வரவேற்கிறோம்.

காருண்யம் நிறைந்த வுதாரண்யப் புனித!
——————————————————————————
மலர்தலை யுலகத்தில் வன்மையைக் கொண்ட முரசு முழங்குத்தானை மூவேந்தர் நாட்டில் பண்டைப் பழங்குடியாயும், தண்டமிழ்த் தொல்குடியாயும் விளங்கி, அறநெறி நிற்கும் ஆற்றலுடைய “அகமுடைய சமூகத்தே சிறுதளையில் அவதரித்த இருநிதிச்செல்வன் பொக்கிஷம் முத்திருளப்ப பிள்ளையருள் அருந்தவப்புதல்வ, வருக!” நுன் வரவு நல்வரவாகுக!! மதிநிறைந்த மாக்ஷிமை யுற்ற இராமச்சந்திர பூபதியே! நுமது வரவால் யாம் அளவிடற்கரிய ஆனந்தமடைகின்றனம்.

பாரது போற்றும் பேரறிவாள!
——————————————————
நீவிர் தோன்றும்போதே புகழுடன் தோன்றி இளமையிற் கற்று, கலைவல்லுனராய் இன் சொல்லும் தாழ்நடையுங் கொண்டு, உலகின் உத்தமர்போற்ற ஒழுகி, ஐக்ய சங்க உத்யோகத்தமர்ந்து. உழுநர்படுந் துயரொழித்து ஜனாநுகூலனாய் விளங்கி, அறிவறிந்த நாள்தொட்டு “சமூகத் தொண்டே தலை சிறந்தது” எனக் கடைப்பிடித்துச் சமூக சீர்திருத்தத்திற்காக அரும்பாடுபட்டு சங்கங்கள் நிறுவியும், சமூக ஒற்றுமை யுண்டாக்கியும், சமூக மகாநாடுகள் நடத்தியுமுள்ள நுமது அரிய ஆற்றலுக்கு யாம் நன்றி பாராட்டுவதுடன், எங்கள் வேண்டுகோளுக் கிணங்கி தங்கள் உத்தியோக அலுவல்களையும், மற்றும் முக்கியமான காரியங்களையும், சௌகரியங்களையும் பொருட்படுத்தாது இவண் விஜயஞ்செய்து சிறப்பித்த தங்கட்கு யாங்கள் என்றும் நன்றி செலுத்தவும் கடமைப்பட்டவர்க ளாகிறோம்.

கலைநலமலி கற்பகமே!
———————————————
“கற்கக் கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்ற பொய்யா மொழியைச் செயன்முறையில் புரியும் கடமை “இளமையிற் கல்” என்ற பீடிகைப் பிரகாரம் வாலிபர்களைப் பொறுத்தே நிற்கிற தென்பதை சரித்திரங்கள் – சமாச்சாரப் பத்திரிகைகள் முதலியவைகள் மூலமாய்க் கேட்டும் பிறசமூக முற்போக்குகள் மூலமாய் நேரில் கண்டிருந்தும் நம்குல வாலிபர்கள் மட்டும் அயர்ந்து நிற்கும் தன்மைதான் என்னே!

சீரும் சிறப்பும் சேருமுதார!
————————————————-
இவணே, நம்சமூக சகோதரர்கள் பன்னெடும் நாளாய் அற்பக்காரணார்த்தமாய் ஒற்றுமையின்றி பிளவேற்படுத்தி சமூக சீர்திருத்தத்திற்கே இடையூறு செய்தமையை நீவிர் நிவர்த்தித்து ஒற்றுமை யுண்டாக்கி சமூகச் சீர்திருத்தத்திற்கு அத்தியாவசியமாய் வேண்டியிருக்கும் மூலதன வருவாய்க்குச் செய்ய வேண்டிய முறைகளைத் தெரிவித்து, கல்வி, கைத்தொழில், விவசாயம், வியாபாரம் இவைகளைச் சமூகச் சங்கத்திலிருந்து சமூக ஏழை மக்களின் ஜீவனார்த்தத்தின் பொருட்டு செய்விக்க சுலபமான மார்க்கங்களை எடுத்துக்காட்டி சமூக உயர்தரக் கலாசாலை ஒன்றும், தொழிற்சாலைகளும் இந்நகரில் சமூக சங்க நிதியிலிருந்து ஏற்படுத்த சமூகப் பிரமுகர்களை பிரயாசை எடுத்துக் கொள்ளத் தூண்டி, அடுத்தடுத்து எமது சங்கத்திற்கு விஜயம் செய்து சமூகத் தொண்டில் ஈடுபடச் செய்விக்க வேண்டுமாய்த் தங்களைப் பன்முறை வேண்டுகிறோம்.

குலநலக் கோவே!
———————————-
குழுவிய சமூகக் குறையெனும் இருளைப் போக்க எழுபரித்தேரில் வந்த இளஞாயிறு போன்ற தங்களின் மேன்மைக்கும் கௌரவத்திற்கும் ஏற்றவாறு பணிவிடை செய்ய ஆற்றல் இல்லாது போயினும், எங்கள் அன்பொன்றையே ஏற்றருளப் பணிவுடன் வேண்டுவதோடு பன்முறையும் எங்கள் மத்தியிற் றோன்றி, நமது சமூக நலத்திற்குச் துணைபுரியுமாறு தங்கட்கு நீடிய ஆயுளும், உத்தியோகப் பெருக்கும், குறைவற்ற செல்வமும், பீடுசால் மேன்மையும் பெருக உண்டாவதாகக் கற்றையஞ்சடைக் கண்ணுதற் பெருமானைத் திரிகரணசுத்தியாக வழுத்துகிறோம்.
தங்கள் அன்புள்ள,
அகம்படியர் வாலிபர் சங்க அங்கத்தினர்கள்.
விருதுநகர்.
24-7-32
————————————————-
உண்மை விளக்கம் பிரஸ்,
விருதுநகர் – 32





இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo