அதளை நில ஆவணங்கள் – மதுரையில் பிள்ளை பட்டத்துடன் அகம்படியர், கோனார்களுக்கு யாதவ …

Spread the love

First
அதளை நில ஆவணங்கள் – மதுரையில் பிள்ளை பட்டத்துடன் அகம்படியர், கோனார்களுக்கு யாதவ சாதி நில ஆவணம்
——————–
அதளை கிராமத்தை சேர்ந்த அகம்படியர் நடராசன் சேர்வை அவர்கள் சேகரித்த நிலஆவணங்கள் இணையத்தில் கிடைத்தன. 150க்கும் மேற்பட்ட ஆவணங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
அதில் பெரும்பாலானவை அகம்படியர் சமுதாயத்தினர் வாங்கிய நில ஆவணங்கள் .ஒரு சிலவை மற்ற சமுதாயங்கள் சேர்ந்தவை.

அதில் ஒரு ஆவணம் 1870ம் வருடத்தியது.
பழனியான்டி சேர்வைக்காரன் ,அகம்படியர் சாதி விவசாய ஜீவனம்

இன்னொரு குறிப்பிடத்தக்க முக்கிய ஆவணம் 1902ம் வருடத்தியது
“மதுரை வடக்கு ஆவணி மூல வீதியில் இருக்கும் சொக்கலிங்கம் பிள்ளை மகன் அகம்படிய சாதி விவசாய ஜீவனம் துரைச்சாமி பிள்ளை”

ஆகவே தென் மாவட்ட தலைநகரான மதுரையில் பிள்ளை பட்டம் கொண்டு அகம்படியர்கள் இருந்துள்ளார்கள் என்பதற்கு இது ஓர் முக்கிய ஆவணமாக உள்ளது.

இதில் மற்றொருமொரு குறிப்பிட்ட ஆவணம்
கோனார்களை ,யாதவ சாதி என்று 1935ம் ஆண்டு முதலே குறிக்கின்றன.
பெரிய கருப்ப கோனார் ,யாதவகுலம் சுகஜீவனம்
1943ம் ஆண்டு ஆவணமும் இதை பிரதிபலிக்கிறது.

“அதளையிலிருக்கும் பிச்சை கோனார் குமாரன் யாதவ சாதி விவசாய ஜீவனம் ஆகாச கோன்”

இதன் மூலம் செப்பேடுகளில் யாதவர் குலம் என்று குறிப்பிட்டுக்கொள்ளும் இந்த ஆயர்கள் (இன்றைய கோனார்கள்) நில ஆவணங்களிலும் அதை பதிவு செய்துள்ளனர் என்று தெரிகிறது.

குறிப்பு:
பாண்டிச்சேரி பிரெஞ்சு யுனிவர்சிட்டி இந்த ஆவணங்களை பதிவேற்றியுள்ளது. இங்கிலாந்து பிரிட்டி லைப்ரரியில் இந்த ஆவணங்கள் பார்வைக்கு கிடைக்கின்றனர்.
என்னதான் இந்த ஆவணங்கள் இணையத்தில் வெளிப்படையாக வெளியிடப்பட்டிருந்தாலும் நாம் எடுத்து வெளியிடும் போது நில அவணங்களில் சாதியை தவிர மற்ற பாகங்களை கட் செய்துவிட்டோம். பொதுவெளியில் நாம் தெரிவிக்க விரும்புவது அகமுடையார் சாதிக்கான பெயர்களும்.பட்டங்களும் பற்றிய தகவல் மட்டும் தானே!

ஆவணங்களை பார்வையிட்டுக்கொண்டுள்ளோம். முழுமையாக பார்த்தபிறகு மீண்டும் பதிவு செய்கின்றோம்.

அகமுடையார்கள் இன்றும் பயன்படுத்தும் பட்டங்களுக்கு கல்வெட்டுக்கள் பல ஆதாரமாக இருக்கின்றன. ஆனால் இக்கல்வெட்டுக்களில் காட்டும் பட்டங்களை சமீபத்திய நில ஆவணங்கள்(பத்திரங்கள்) உள்ள பட்டங்கள்,பெயர்கள் மூலம் நிருபிக்கலாம் என்றால் அதற்குரிய நில ஆவணங்கள் ,செப்பேடுகளை அதை வைத்திருக்கும் அகமுடையார் சமூகத்தவர் வழங்குவதே இல்லை.

இந்த ஆவணம் கூட நமக்கு நேரடியாக கிடைக்கவில்லை. வெளிநாட்வர்கள் இணையதளம் வாயிலாகவே நமது பார்வைக்கு கிடைத்தது.

இனிமேலேனும் அகமுடையார் வரலாற்றை மீட்க அவற்றை அகமுடையார்கள் வழங்க வேண்டும் .அகமுடையார் ஒற்றுமை வாட்ஸ் அப் எண் 720050 7629 என்ற எண்ணிற்கு இதன் புகைப்படங்களை அனுப்பினால் அவற்றை நாங்கள் அகமுடையார் வரலாற்றை மீட்க பயன்படுத்துவோம்.

நில ஆவணங்கள் அனுப்பினால் உங்கள் தகவல் வெளியில் சென்றுவிடும் என்று நீங்கள் நினைக்க தேவையில்லை!
இப்பதிவில் நாம் பதிவிட்டிருக்கும் ஆவணங்கள் கூட இணையத்தில் கிடைத்தது என்றாலும் ஆவணத்தின் முழு பக்கங்களையும் நாங்கள் வெளியிடுவதில்லை.

நில ஆவணங்கள் அனுப்புவோர் முழு பக்கங்களையும் அனுப்ப வேண்டாம். பத்திரத்தின் முதல் பக்கத்தை கூட முழுதாக அனுப்ப வேண்டாம்.
பத்திரத்தின் முதல் பக்கத்தின் மேல்பகுதி (ஸ்டாம் பகுதி ) மற்றும் நிலஆவணத்தில் பெயர் ,சாதி குறிப்பிடும் பகுதியை மட்டும் அனுப்பினால் மட்டும் போதும் .

ஆகவே உங்கள் தகவல்கள் பத்திரமாகவும் இருக்கும் அகமுடையார் வரலாற்றை மீட்கவும் உதவும்!





இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

1 Comment

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?