First
சேர்வைகாரர் மண்டகப்படி
—————————————————
நாள் : 28-04-2023,
நேரம் : மாலை 4.00 மணியளவில்,
இடம் : மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை.
பாண்டிய நாட்டின் பழம்பெரும் கோயிலாகிய மதுரை மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு “மருதரசர்கள்” செய்த திருப்பணிகள் போற்றற்குரியதாகும்.
காளையார் கோயில், திருப்பத்தூர், குன்றக்குடி, திருக்கோஷ்டியூர், சிங்கம்புணரி, திருப்பாச்சேத்தி, மானாமதுரை, திருமோகூர், அழகர் கோவில், பழனி உள்ளிட்ட பல கோயில்களுக்கு திருப்பணி செய்தது போலவே,
சேர்வைகாரர் மண்டபம்
———————————————-
மதுரை மீனாட்சி – சுந்தரேசுவரர் கோயிலுக்கும் திருப்பணி செய்துள்ளார்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் திருக்கல்யாண மண்டபத்திற்கு எதிரில் உள்ள “சேர்வைக்காரர் மண்டபம்” இவர்களால் 1795 இல் கட்டப்பட்டதாகும்.
இடதுபுற மண்டபத் தூணில் பெரிய மருதுவின் உருவச்சிலையும், சின்ன மருதுவின் சிலையும் உள்ளது.
திருவாட்சி விளக்கு
—————————————
மீனாட்சி அம்மன் சந்நிதியில் அழகுற விளங்கும் இரு திருவாட்சி விளக்குகள் “மாமன்னர் மருதுபாண்டியர்கள்” செய்த அறப்பணியே ஆகும். இத்திருவாட்சி
25 அடி உயரத்துடன் 1008 சிறு விளக்குகளைப் கொண்டு விளங்குகிறது. ஒவ்வொரு தினமும் இரவில் எல்லா விளக்குகளும் ஏற்றிய பின், அந்த காட்சி அழகாகவே இருக்கும். வெகு தூரத்திலிருந்து இந்தத் தீபவரிசைகள் நன்கு தெரியும். இவ்விளக்குகள் இன்றும் மருதரசர்களின் புகழை ஒளியுடன் விளங்குமாறு செய்து வருகின்றன.
இத்தீபங்கட்கு நெய் வார்க்க மருதரசர்கள் விட்ட மானியமே ஆவியூர் கிராமம் ஆகும்.
அன்னை மீனாட்சி திருவாட்சி விளக்கிற்கு எண்ணெய் செக்கில்
எள்ளாட்டி மருதங்குடியிலிருந்து மின்னவர் நாற்பத்தெட்டரைக் கிராமம் விட்டொளி வீசிய வைத்தார்கள் மருதரசர்கள்.
மானியங்கள்
————————–
புஷ்பக் கட்டளைக்காக உப்பிலிக்குண்டு, கடம்பங்குளம், சீகனேந்தல், மாங்குளம், மங்கை ஏந்தல், பூவனேந்தல் முதலிய கிராமங்களையும், ஆறு காலத்திலும் அன்னையின் ஆறு கால பூசைக்காகத் தக்க மானியங்களையும், சார் விழா பூசைக்குப் பிரமனூர், கால சந்திப் பூஜைக்காகச் சீகனேந்தல், நேர்திருக்கால சந்திக்கு அதிகரை, நீளுச்சிக் காலமன் பிர்க்குளம், சாயாட்சைக்கு இடையன்குளம், அர்த்த சாமம் ஆலாந்தூர் பொட்டப்பாளையம், முதலிய கிராமங்களும் மருதரசர்களால் இறையிலியாக கொடுக்கப்பட்டது.
வெள்ளித் தேர்
—————————-
மதுரை ஆதினம் மடத்திற்கு, மாமன்னர் மருதுபாண்டியர்கள் பல மானியங்களை அளித்துள்ளனர். அவற்றுள், சைவ நெறி தழைக்க, மதுரை ஆதினத்தை நிறுவிய திருஞான சம்பந்த பெருமானின் அவதார நட்சத்திரமான வைகாசி மூல நட்சத்திரத்திரத்தன்று, மதுரை மாநகரை திருவீதி உலாவர, சைவ சமயத்தின் பால் பற்று கொண்ட மாமன்னர் மருதுபாண்டியர் திருப்பணியில் உருவான வெள்ளிக்கோ ரதம், இன்றும் வீதி உலா வருகின்றது.
மீனாட்சி சொக்கர் அஷ்டமிச் சப்பரக் கட்டளையால் தம்பதிகள் வெளி வீதி சுற்றிவர சித்திரை மாதந் திருநாட்கு மீனாள் சின்னத் தேரைச் செய்து வெள்ளோட்டம் விட்டார்கள் மருதரசர்கள்.
சித்திரை திருவிழா ஆறாம் நாள் – சேர்வைகாரர் மண்டகப்படி,
—————————————————-
மாமன்னர் மருதுபாண்டியர் கட்டிய சேர்வைகாரர் மண்டபத்தில் “சைவ சமய வரலாற்று லீலை” விழாவிற்காக வானவகம்படிகுல மாதேவி அன்னை மீனாட்சி சுவாமியுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருள்கிறார் !
அது சமயம், அகத்தமிழ் ஆன்மீக அன்பர்களும், மாமதுரை வாழ் மருதரசர்களின் தொண்டர்களும் இந்நிகழ்வில் பங்கேற்று அன்னையின் அருளையும்,
மருதரசர்களின் ஆசியையும் பெற அகத்தமிழர் உறவுகளையும், பக்த கோடிகளையும் அன்புடன் அழைக்கிறோம் !
பிறந்த பேரினத்தின் பெருமையை பேணிக் காப்போம்…
———————————————
உரிமையோடு அழைக்கிறது….
சேர்வைகாரர் மண்டகப்படி திருப்பணிக்குழு, மதுரை.
தொடர்புக்கு :
94429 38890, 98421 43888, 7010493288,
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்