மருது சேனை சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற அனைத்து சமுதாயத்தை சேர்ந்த மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
இன்று 26-006-2022 ஞாயிற்றுக்கிழமை
திருமங்கலம் ரெங்கவிலாஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
அதன் புகைப்படங்கள் கிழே.
குறிப்பு:
இந்த செய்தியை கூட நாம் நேரில் சென்று புகைப்படம் எடுத்து பதிவு செய்தோம்.
அகமுடையார் ஒற்றுமை நிர்வாகியான நானும் திருமங்கலம் மீடியாவிலும் இருக்கிறோம் ஆனால் மருதுசேனை எங்களை போன்ற திருமங்கலம் மீடியாவை சேர்ந்தவர்களுடன் இதுவரை அறிமுகம் நடந்ததாகவும் தெரியவில்லை. மருதுசேனையின் நடவடிக்கைகளை உள்ளூரில் போஸ்டர் பதிவு தாண்டி ஊடக்கவியளாளர்களுடன் நல்ல அறிமுகத்தோடு இருந்து மருதுசேனையின் செய்திகளை வெளியே கொண்டு சென்ற மாதிரியும் தெரியவில்லை என்பது பெரும் வருத்தமே.
மருது சேனை அரசியல் கட்சியா ?
அல்லது சமுதாய இயக்கமா?
என்பதிலேயே குழப்பம் நீடிக்கிறது.
தமிழகத்தில் எவரும் ஜாதி பின்புலத்துடன் வந்து ஆட்சியை வென்றெடுக்கவில்லை.அரசியல் கட்சி என்றால் அதற்கு எந்தவிதமான ஜாதி பின்புலமோ, பூச்சோ இருக்க கூடாது. அப்படி இருந்தால் மற்ற சாதிக்காரகள் ஓட்டளிக்க மாட்டார்கள்.
சமுதாய இயக்கம் என்றால் தனிப்பட்ட(சுயெட்சை) அரசியலை செய்யகூடாது. தேர்தலில் நிற்கவும் கூடாது. ஆட்சிக்கு வருபவர் எவராக இருந்தாலும் அவர்களை சந்தித்து சமுதாயத்திற்கு தேவையான பணிகளை செய்து முடித்து சமுதாயத்தில் பேரை எடுக்கலாம்.
மருதுசேனைக்கு இதில் மிகப்பெரிய குழப்பம் இருப்பதாக தெரிகிறது.அதை அவர்கள் மாற்றிக்கொண்டால் நிச்சயமாக ஜெயிக்கமுடியும். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இனியாவது செய்வார்களா?
Leave a Reply