First
கல்வெட்டில் அகமுடையார்
—————————————–
சித்தலிங்கமடம் அகம்படிகள்
——————————–
இன்று நாம் காண இருக்கும் கல்வெட்டு, வடதமிழகமான கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், சித்தலிங்கமடம் எனும் ஊரில் இன்றைய அகமுடையார் சாதியினரை அகம்படிகள் என குறிப்பிடும் கல்வெட்டு செய்தியாகும்.
திருக்கோவிலூரில் இருந்து கிழக்கே 8 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள, முன்னர் “சிற்றிங்கூர்” என்றும், தற்போது “சித்தலிங்கமடம்” என்று அறியப்படும் ஊரில் கிடைத்த கல்வெடு செய்தியாகும்.
குறிப்பிட்ட இந்த சித்தலிங்கமடம் எனும் ஊரில் திருப்புலிபகவர் என்று தமிழிலும், வியாக்ரபாதீஸ்வரர் சமஸ்கிரத்திலும் அழைக்கப்படும் சிவன் கோவிலின் இரண்டாம் திருச்சுற்று நுழைவுவாயிலின் கிழக்கு சுவற்றில் (இடப்புறம்) காணப்படுகின்றது.
இக்கல்வெட்டு, விஜயநகர மன்னர் ஆட்சியாண்டை குறிப்பிடுவதால் (கி.பி 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த) கல்வெட்டு செய்தியாகும்.
இக்கல்வெட்டினை தமிழக அரசு தொல்லியல் துறை தனது தமிழ்நாட்டு கல்வெட்டுக்கள் தொகுதி -14 (விழுப்புரம் மாவட்ட கல்வெட்டுக்கள் தொகுதி – 1)
இல் வெளியிட்டுள்ளனர்.
குறிப்பிட்ட இந்த கல்வெட்டு செய்தியில் படுவூரை சேர்ந்த ஆட்கொண்ட தேவ ராகுத்தராயன் என்பவர், சித்தலிங்கமடத்தின் நான்கு எல்லைகளுக்குள் வசிக்கின்ற கைகோளர் (இன்ற்றைய செங்குந்தர்), செட்டிகள், அகம்படிகள் (இன்றைய அகமுடையார்), பள்ளிகள் (இன்றைய வன்னியர்), கண்மாளர் (இன்றைய விஸ்வகர்மா) போன்ற சாதியினர் கோவிலுக்கு வழங்கிய வரிகளை இந்த ஊரில் உள்ள திருப்புலிபகவர் கோவிலுக்கு கொடையாக வழங்கியுள்ளார். கல்வெட்டு முற்றுப்பெறாததால் மேலும் அதிக செய்திகளை அறியமுடியவில்லை.
இதில் நாம் குறிப்பிட்டு கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் வடதமிழகமான கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், சித்தலிங்கமடத்திலும் இன்றைய அகமுடையார் சாதியினர் “அகம்படிகள்” என்றே குறிக்கப்பட்டுள்ளனர்.
ஆதாரம் : தென் இந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 38, கல்வெட்டு எண் : 240
அகமுடையார் சாதிக்கே சம்பந்தம் இல்லாத சில குள்ளநரிகள் குழப்பம் செய்வது போல், வடதமிழகத்தில் உள்ளவர்கள் அகமுடையார் என்றும் தென் தமிழகத்தில் உள்ளோர் அகம்படியர் என்பதோ கிடையாது.
வடதமிழகமோ, தென் தமிழகமோ இன்றைய அகமுடையார் சாதியினர் அகம்படி அல்லது அகம்படியர் என்ற பதத்தோடு தான் குறிப்பிடப்பட்டுள்ளனர் என்பதை நிரூபிக்கும் மற்றுமொரு கல்வெட்டு ஆதாரமாக இது திகழ்கிறது.
நம் கருத்துக்கு ஏற்கனவே பல்வேறு சான்றுகளை வழங்கியுள்ளோம். உதாரணத்திற்கு,
அஞ்சாத பெருமாள் அகம்படியர்
———————–
இதே சித்தலிங்க மடத்திற்கு 12 கி.மிட்டர் தொலைவில் அமைந்துள்ள திருவெண்ணைநல்லூர், கம்பரை ஆதரித்த சடையப்ப வள்ளல் வாழ்ந்த சிறப்புடையது. இந்த திருவெண்ணைநல்லூரில் கிடைத்த கி.பி.1247 காலத்திய கல்வெட்டு செய்தியில்
“அரசூரில் இருக்கும் அகம்படியாரில் திருமழபாடி மகன் சுப்பிரமணியன்” குறிபிடப்படுகின்றார்.”
ஆதாரம்: மத்திய அரசு கல்வெட்டு ஆண்டறிக்கை : 449/1921
படுவூர் அகம்படியர்கள்
———————-
இதே சித்தலிங்கமடம் கல்வெட்டில் குறிப்பிடப்படும் படுவூர் எனும் ஊரில் கிடைத்த மற்றொரு விஜயநகர காலத்து திருவெற்றியூர் கோயில் கல்வெட்டு செய்தியில்,
படுவூர் எனும் ஊருக்கு நாடாள்வராக (தலைவர்களாக) இருந்த
ஆதித்தன், காலிங்கராயன், சேதிராயன் உள்ளிட்ட 48 அகம்படியர்கள், விஜயநகர ஆட்சியின் போது, விஜயநகர ஆட்சியை மதிக்காமல் தங்கள் ஊரில் காவல் பணியை உதறியதையும், அதற்கு தண்டனையாக அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள்,
நிலங்களையும் பறிக்கபட்டதையும் பார்த்தோம்.
ஆதாரம்: தென் இந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 38, கல்வெட்டு எண் : 240
மற்றும் The Early History Of The Madras Region, பக்கம் 145.
இது போன்று பல்வேறு கல்வெட்டுக்கள் வடதமிழகத்தில் அகமுடையார் என்றும் அகமுடைய முதலி என்று அறியப்படுவர்கள் கல்வெட்டுக்களில் அகம்படி என்றும் அகம்படி முதலி என்றுமே காணப்படுகின்றனர். அங்கு கிடைத்த எல்லா கல்வெட்டுக்களையும் இப்பதிவில் குறிப்பிட்டால் குறிப்பிட்ட இந்த பதிவில் உள்ள செய்தி தவறிவிடும் என்பதால் இக்கல்வெட்டு சம்பந்தமான மற்ற செய்திகளை காண்போம்.
குறிப்பிட்ட சித்தலிங்கடம் ஊரில் கல்வெட்டில் குறிப்பிடப்படும் அகம்படிகள் எனும் இன்றைய அகமுடையார் சமூகத்தினர்கள் உடையார் பட்டம் கொண்டு இவ்வூரில் பெரும்பான்மையானவர்களாகவும், நிலச்சுவான்தாரர்களாகவும் உள்ளனர்.
ஆதாரம்: “சித்தலிங்கமடம்” ஆய்வு நூல் பக்கம் எண் 5, தமிழக அரசு தொல்லியல் துறை வெளியீடு.
குறிப்பிட்ட சித்தலிங்கமடம் ஊரின் வியாக்ரபாதீஸ்வரர் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் தொடங்கி 12 நாள் திருவிழாக்களில் 9 நாள் திருவிழாக்கள் அகமுடையார் சமூகத்திற்குரியவையாக உள்ளது. அகமுடையார்கள் இவ்வூரில் உடையார் மற்றும் பிள்ளை பட்டம் சூடியுள்ளனர்.
குறிப்பாக அகம்படியர்களின் அடையாளமாகிய நந்தி தேவர் வாகனம் மற்றும் ரிஷப வாகனம், நாக வாகனம் , பஞ்ச மூர்த்திகள் போன்ற இன்னும் பலவை வாகனங்கள் அகமுடையார் களுக்குரியதாக உள்ளன.
நன்றி அறிவிப்பு:
இக்கல்வெட்டினை ஆய்வுக்கு நம் பார்வைக்கு அனுப்பிய அகமுடையார் அரண், தலைமை ஒருங்கிணைப்பாளர், திரு சோ.பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு நமது நன்றிகள்!
அழைப்பிதழ் பட உதவி: சித்தலிங்கமடம், திரு.தங்க வெங்கடேசன் அகமுடையார் அவர்களுக்கும் நன்றி,
கோவில் திருவிழா குறித்த வேறு ஏதேனும் படங்கள், செய்திகள் உள்ளவர்கள் இப்பதிவில் கமேண்ட் வடிவிலோ அல்லது 9200507629 என்ற அகமுடையார் ஒற்றுமை வாட்ஸ் அப் எண்ணிலோ அனுப்பலாம். மற்ற ஊர்களில் நடைபெறும் அகமுடையார் திருவிழாக்கள் சம்பந்தமான படங்கள் மற்றும் வீடியோக்களையும் எங்களுக்கு அனுப்பலாம் அதை நீங்கள் விரும்பினால் உங்கள் பெயருடன் பதிவு செய்து அகமுடையார் வரலாற்றை உலகறிய செய்வோம்!
மேலதிக தகவல்கள்
—————–
இன்னும் சொல்லப்போனால் 100-150 வருடங்களுக்கு முன் அகமுடையார் என்ற ஓர் சாதியே கிடையாது. தமிழகம் ,கேரளா,ஆந்திரா,கர்நாடகா, இலங்கை என உலகமெங்கும் சென்றாலும் கல்வெட்டுக்களில் காணப்படுவது அகம்படி ,அகம்படியர் என்ற பெயரும் அகம்படி முதலி,அகம்படி தேவன் ,அகம்படி பிள்ளை என்ற பட்டங்களுடன் உள்ள சாதி பெயர்கள் மட்டுமே.
பின்னர் கல்வெட்டுக்களில் அகமுடையார் என்ற பெயரே இல்லையா? என்று கேள்வி எழுப்பினால்
இருக்கிறது.ஆனால் அது சாதிப்பெயராக அல்ல ! அகமுடையான் என்பது கணவன் என்ற பொருளிலும் அகமுடையாள் என்பது மனைவி என்ற பொருளிலுமே வழங்கப்படுகின்றது அன்றி அது சாதிப்பெயராக வழங்கப்படவில்லை.
அகராதிகளும் இதே கருத்தை வெளிப்படுத்துகின்றன. ஆகவே கல்வெட்டு, அகராதிகள் இரண்டிலுமே அகமுடையார்,அகமுடையார் என்பது கணவன் மனைவி என்ற பொருளிலேயே வருகின்றன. ஏனென்றால் சில நேரங்களில் கல்வெட்டுக்கள் காலத்தில்(1000 வருடம் முன்பு) ஒரு பொருள் இருந்திருக்கும் பின்னர் வந்த காலத்தில் 100 அல்லது 200 வருடங்களில் ஏற்பட்ட சமூக,பொருளாதார மாற்றங்களில் குறிப்பிட்டவற்றின் பொருள் மாறியிருக்கும் அக்காலகட்டத்தில் எழுதப்பட்ட அகராதிகளில் அதன் பொருள் வேறொன்றதாக மாறும் வாய்ப்புள்ளது என்பதால் இதை இரண்டையும் ஒப்பிட்ட்டுப்பார்த்தால் தான் உண்மையை கண்டறிய முடியும். ஆனால் கல்வெட்டு மற்றும் அகராதிகள் இரண்டிலும் அகமுடையார் என்பது கணவன் என்ற பொருளிலும் ,அகமுடையாள் என்பது மனைவி என்ற பொருளிலுமே வழங்கி வருகின்றது.
உதாரணத்திற்கு
“பிராமணி அல்லியங்கோதைச்சானி என் மகள் அகமுடையான் கோதிலா போசன் சிவதவனவாசி பட்டன்”
பொருள்: அல்லியங்கோதைச்சானி என்ற பிராமணப்பெண்ணின் மகளின் கணவன்(அகமுடையான்) கோதிலா போசன் சிவதவனவாசி பட்டன்
ஆதாரம்: திருவலஞ்சுழி கல்வெட்டுகள், பக்கம் எண் : 59, 60.
தமிழ்நாடு பாடநூல் கமிட்டியால் வெளியிட்டப்பட்ட அகராதியின் 5ம் பக்கத்தில் அகமுடையான் என்பதற்கு வீட்டுக்காரன் அல்லது கணவன் அல்லது நில உடமையாளன் என்ற பொருள் உள்ளதே தவிர சாதியாக குறிப்பிடவில்லை. பிற்காலத்தில் வந்த அகராதிகள் கூட அகமுடையார் என்பதை சாதியாக குறிக்கவில்லை என்பது இங்கு முக்கியமாக குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்: தமிழ் – தமிழ் அகரமுதலி, பக்கம் எண் : 5, முதல் பதிப்பு :1985,
வெளியீடு : தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.
இது போல் நூற்றுக்கணக்காண கல்வெட்டு மற்றும் அகராதி ஆதாரங்கள் இதற்கு உள்ளன. ஆனால் எல்லாவற்றையும் பார்த்தால் நேரமாகிவிடும் என்பதால் ஒன்றிரன்டு எடுத்துக்காட்டினோம்.
ஆகவே இன்றைய அகமுடையார் இனத்தவர்கள் தங்கள் சாதிக்கான வரலாற்றை 100 வருடங்கள் முன்பு தேட விரும்பினால் அகம்படி ,அகம்படியர் என்று தேடினால் தான் விடை கிடைக்குமே தவிர அகமுடையார் என்று தேடினால் கிடைக்கவே கிடைக்காது ஏனென்றால் அகம்படி, அகம்படியர் என்பது தான் சாதியே தவிர அகமுடையார் என்பது சாதியாக இல்லை.
பின்னர் உங்கள் மனதில் ஓர் கேள்வி எழலாம். அப்படி என்றால் இன்றைய அகமுடையார் என்ற இப்பெயரை நாம் சம்பந்தமே இல்லாமல் வைத்துக் கொண்டு விட்டோமா என்பதாக இருக்கலாம். இல்லை சம்பந்தமே இல்லாத பெயரை நாம் வைத்துக்கொள்ளவில்லை.
கி.பி 7ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் தண்டிவர்மனின் உத்திரமேரூர் கல்வெட்டில் அகம்படி இனத்தவர்கள் உடையார் பட்டத்துடன் காணப்படுகின்றனர்.
ஆதாரம்: Studies in the History of India-With special Reference to tamilnadu,
பக்கம் எண் : 323
1300 ஆண்டுகளுக்கு முன்பான கல்வெட்டு மட்டுமல்ல தொடர்ந்து பல்வேறு கல்வெட்டுக்களில் அகம்படி இனத்தவர்கள் உடையார் பட்டத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தென்மாவட்டத்தில் பிறந்த மாமன்னர்களின் மருதுபாண்டியர்களின் தந்தை உடையார் என்ற பட்டத்துடனே குறிப்பிடப்படுகிறார்.
ஆதாரம்: நூல்: மருதிருவர் (1780-1801) ஆசிரியர்: ந.சஞ்சீவி
பக்கம் எண் : 42,
மருதுபாண்டியர் தனது தாய், தந்தையார் பெயரில் சிவகங்கையில் பொன்னாத்தாள் குளம் மற்றும் உடையார் சேர்வை ஊரணியை உருவாக்கினார்
ஆதாரம்: நூல்: மானங் காத்த மருதுபாண்டியர், ஆசிரியர்: ந.சஞ்சீவி, பக்கம் எண் : 117,
இவ்வாறு அகம்படி என்ற சாதிப்பெயருடன் உடையார் என்ற பட்டமும் இணைந்தே பின்னாட்களில் அகமுடையார் என்ற சாதிப்பெயர் உருவாக காரணமாகியது.
நிறைவாக சொல்ல விரும்புவது என்னவென்றால் வடதமிழகமோ, தென் தமிழகமோ இன்றைய அகமுடையார் சாதியினரின் முன்னர் பெயர் அகம்படி அல்லது அகம்படியர் என்பதேயாகும். அகமுடையார் என்பது 100 – 200 ஆண்டுகளுக்குள் உருவான பெயர் மாற்றமாகும்.
வடதமிழகத்தில் அகம்படி எனும் அடையாளத்தோடு காணப்படும் அத்துணை கல்வெட்டுக்களையும் தொகுத்து வேறு ஓர் பதிவில் முழுமையாக வழங்கப்படும்.
ஆய்வு மற்றும் கட்டுரையாக்கம்
மு.சக்திகணேஷ் அகமுடையார்,
அகமுடையார் ஒற்றுமை – AgamudayarOtrumai.com
மதுரை- திருமங்கலம்
————————————
செய்தி பகிர்வு,
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்.
கைப்பேசி : 94429 38890.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்