கங்க இளவரசியை பெண் கொண்ட அகம்படிய வாணாதிராயர்கள் -கங்கர் அகமுடையார் திருமண உறவு…

Spread the love

First
கங்க இளவரசியை பெண் கொண்ட அகம்படிய வாணாதிராயர்கள் -கங்கர் அகமுடையார் திருமண உறவு
——————
அகமுடையார் ஒற்றுமையை பொறுத்தவரை
நாம் சொல்லும் கருத்துக்களுக்கு கல்வெட்டு போன்ற முதன்மை வரலாற்று ஆதாரங்களையே தரவுகளாக காட்டுவோம்.
அதே நேரம் அறிஞர்களின் கருத்துக்களை முதன்மை வரலாற்று ஆதாரங்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கவே காட்டுவோம் (ஏனென்றால் கல்வெட்டு செய்திகளுக்கு நாம் ஏதோ இல்லாத ஓர் பொருளை தருகிறோம் என்று பார்ப்பவர்கள் நினைக்க கூடாது அல்லவா!

அவ்வகையில்
கங்க அரசவம்சத்துடன் அகம்படியர்கள் கொண்ட திருமண உறவு பற்றி கல்வெட்டு அறிஞர் எஸ்.இராமச்சந்திரன் தமிழினி இதழில் தனது கட்டுரையில் குறிப்பிட்டுருப்பார்.

ஆதாரம்: தமிழினி இதழ் ஜீன் 2011, பக்கம் 27
பார்க்க இணைப்பு: 1

இதை ஏற்கனவே பகிர்ந்து கொண்டுள்ளோம். இது மேற்சொன்ன அறிஞர் கருத்துக்கு முதன்மை வரலாற்று ஆதாரத்தை காட்ட வேண்டிய நேரம்/பதிவு.

இன்றைய வட ஆற்காடு மாவட்டம் திருவல்லம் பில்வநாதீஸ்வரர் கோவிலின் மேற்கு சுவற்றில் கிடைக்கும் கி.பி 9ம் நூற்றாண்டு காலத்திய கல்வெட்டு செய்தியில் வாணராயர் மஹாதேவியார் கோவிலில் விளக்கு ஏற்றுவதற்கு திக்காலி வல்லம் சபையாரிடம் இருபது கழஞ்சு பொன் கொடுத்துள்ளார். அக்கல்வெட்டு செய்தியில் கீழ்கண்ட வரிகளுடன் தொடங்குகின்றது.

“பரமேஸ்வர ப்ரதிஹாரீ க்ருத வாணராயர் மஹாதேவியார் கொங்குணி தர்ம மஹாராஜா பெருமானடிகள் மகளார் ப்ரதிபதி அரையர் மகளார் வாண மஹாதேவியார் ”

ஆதாரம் 1 : தென் இந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 8, பாகம் 1, கல்வெட்டு எண் 46,பக்கம் எண் 97,98

பார்க்க இணைப்புகள்: 2,3

ஆதாரம் 2 : கல்வெட்டு விளக்கவுரை ,பக்கம் எண்கள் 110,111,112 ,ஆசிரியர் :சுந்தரேச வாண்டையார்
பார்க்க இணைப்புகள்: 4,5,6

பொருள்: பரமேஸ்வரனின் ( சிவனின்) கணமாக வாயிற்காக்கும் (வாயிற்காவலானாக ) பணிபுரியும் குலத்தில் வந்த மஹாபலி வாணராயரின் மனைவியும் , கங்க மன்னர் பிரிதிவிபதியின் மகளுமாகிய வாண மஹாதேவியார்

ஆகவே இக்கல்வெட்டு செய்தியின் மூலமாகவும் மஹாபலி வாணாதிராயர் குலத்தவர்கள் சிவனுக்கு அகம்படி பணி செய்யும் கணத்தவராக ( கணத்ததோர் அகம்படியர்களாக) காட்டப்படுகின்றனர் .

இதில் மஹாபலி வாணாதிராயரின் மனைவியாக காட்டப்படுபவர் குவலாளபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்ட மேற்கு கங்க நாட்டை ஆண்ட மன்னர் பிரிதிவிபதி ஆவார். இந்த கங்க மன்னர்களின் மகளையே அகம்படிய வாணாதிராயர்கள் திருமணம் செய்துள்ளனர் என்பதும் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அகம்படியர் ,கங்கர் குலத்தவரின் திருமண உறவை நிரூபிக்கும் சான்றாக உள்ளது.

இதுவரை கிடைத்த 4 கல்வெட்டுக்களில் வாணாதிராயர்கள் தாங்கள் சிவனுக்கு அகம்படி தொழில் செய்யும் குலத்தவர்களாகிய அகம்படியர்கள் என்று தெளிவாக குறித்து வைத்திருக்கின்றனர் இல்லையென்றால் இதையும் தங்களுடையது என்று சொல்லி வரலாற்றை திருடவும் ஓர் கூட்டம் முயலும்.

இந்த மரபு சமீபத்திய காலம் வரை தொடர்ந்துள்ளது என்பதை கோட்டார்பாளையம் பகுதியில் கிடைத்த கல்வெட்டு சான்றாக அமைகின்றது.

400-500 ஆண்டுகளுக்கு முன் கொங்கு பகுதியில் குடியேறிய அகம்படியர்கள் இன்றைய திருப்பூர் மாவட்டம் கோட்டார்பாளையம்(கோட்டபாளையம்) பகுதியில் முருகன் கோவில் மகாமண்டபத்தை கட்டியுள்ளனர். இந்த கோவில்ன் கருவறை நுழைவுவாயிலில் உள்ள கல்வெட்டு செய்தியில்

“கெங்கைகுலத்தாருமாகிய அகம்படிய ஜாதியார்கள் தேவனமார்கள் யாவரும் மகாமண்டபம் திருப்பணி வேலை செய்து முடித்தது”

பார்க்க இணைப்பு: 7

என்று கூறியதன் மூலம் அகம்படிய தேவர்கள் (அகமுடையார்களில் தேவர் பட்டம் கொண்டவர்கள்) கங்கை குலத்தவருடன் கொண்ட திருமண உறவு காரணமாக தங்களை கங்கா குலத்தவர் என்று கூறிக்கொள்வது 20ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை கூட தொடர்ந்துள்ளது தெரிகின்றது.

இதுமட்டுமல்ல பல்வேறு கல்வெட்டுக்களில் அகம்படியர்கள் கங்கர் பகுதிகளில் சோழர் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர்களாக பல்வேறு கல்வெட்டுக்களில் வருகின்றனர் என்பதற்கு பல்வேறு கல்வெட்டுக்கள் உதாரணமாக வருகின்றன (இதை ஏற்கனவே விளக்கியிருப்பதால் இங்கு விடுகின்றோம் மற்றொரு பதிவில் இதையே விரிவாக பேசுவோம்)

உ.ம் (சில)
அகம்படியாரில் சிங்காந்தி சோழகங்க தேவன்
ஆதாரம்: திருவண்ணாமலை கல்வெட்டுக்கள் , கல்வெட்டு எண் 330/2018

பார்க்க இணைப்பு: 8

அகம்படி முதலிகளில் நாயகன் எல்லாந்தருவானான தென்ன கங்க தேவன்
ஆதாரம்: தென் இந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 3, கல்வெட்டு எண் 412
பார்க்க இணைப்பு: 9

வாணாதிராயர்கள் அகமுடையார்கள் என்பதை நிரூபிக்கும் மேலும் பல சான்றுகள் உள்ளன அவற்றையெல்லாம் தொகுத்து விரிவான சான்றுகளுடன் காணொளி மற்றும் மின் -நூல் விரைவில் அகமுடையார் ஒற்றுமையால் வெளியிடப்படும்.

மேலதிக செய்திகள்
திருவல்லம் எனும் இவ்வூர் இன்றும் அகமுடையார்கள் பெரும்பான்மையாக வாழும் ஊராகும்.

இந்த ஒரு கல்வெட்டு மட்டுமல்ல 10 வெவ்வேறு காலத்திய கல்வெட்டு மற்றும் நடுகல் செய்திகளில் வாணாதிராயர்கள் தங்களை அகம்படி குலத்தவர் என்பதை தெளிவாக பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே 2 கல்வெட்டுக்களை வெளியிட்டு விட்டோம். மீதமுள்ளதையும் வெளியிடுவோம்.

எப்போதுமே அறிஞர் கருத்தை அப்படியே ஏற்பதில்லை அப்படி ஏற்பதானால் அவர்கள் சொல்லும் எல்லா கருத்தையும் ஏற்க வேண்டி வரும் . அப்படி செய்வது பெரும் பிழையாக முடியும்.
நமது வழக்கமே ஓர் முதன்மை வரலாற்றை ஆதாரத்தை காட்டி அதை விளக்கவே அல்லது ஒப்பிட்டு பார்க்கவே அறிஞர்களின் மேற்கோள்களை பயன்படுத்துகின்றோம்.இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

 

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?