First
சாதனை வெற்றி- குருப் 4 தேர்வில் 13 மாணவ மாணவியர் வெற்றி
————————————————
மதுரை திருப்பரங்குன்றம் மேலமண்டு இராஜகுல அகமுடையார் மடத்தில் மருதிருவர் கல்வி மையம் செயல்பட்டு வருவதும் அதில் அகமுடையார் மாண மாணவியருக்கு இலவச அரசு போட்டி தேர்வு பயிற்சி வகுப்புகள் சிறப்பாக செயல்பட்டு வருவது நீங்கள் அறிந்ததே.
இங்கு படித்த மாணவ மாணவியர் தொடர்ந்து அரசு பணிகளில் இணைந்து வருகின்றனர். அவ்வகையில் நேற்று (25-033-2023) வெளிவந்த டிஎன்பிஎஸ்சி குருப்-4 தேர்வு முடிவுகளின் அடிப்படையில் திருப்பரங்குன்றன், காரியாபட்டி மருதிருவர் கல்விமையத்தில் 13 மாணவ மாணவியர் அரசுப்பணிக்கு தேர்வாகியுள்ளனர் (அவர்கள் பெயர் பட்டியல் இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ளது)
இதற்கு முன் சர்வேயர் தேர்வில் 1, நீதிமன்ற பணி தேர்வில் 2 ,ரயில்வே 1 என இம்மாதம் மட்டும் மருதிருவர் கல்விமையத்தில் படித்த 17 பேர் அரசுப்பணிக்கு தேர்வாகியுள்ளனர் என்பது கூடுதல் செய்தி!
தேர்வாகியுள்ள அனைத்து மாணவ மாணவியருக்கு அகமுடையார் ஒற்றுமை தளத்தின் சார்பாக நல்வாழ்த்துக்கள் . கல்வி மையத்தில் பயின்று வரும் மற்ற மாணவ மாணவியர் இவர்களை உதாரணமாக கொண்டு தேர்வில் வெற்றியடைய பெருமுயற்சியை மேற்கொள்ள வேண்டும் .வாய்ப்புள்ளவர்கள் இக்கல்வி மையத்தில் இணைந்து அதன் சேனையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த வெற்றிக்கு உறுதுணையாக கல்விமையத்தை நல்லமுறையில் செயல்படுத்தி வரும் சகோதர் திரு. மருதமுத்து அவர்களுக்கும் ,மருதிருவர் கல்விமையத்தில் உற்சாகமாக பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணியையும் மனமார பாராட்டுகின்றோம்.
தற்போது காவல் ஆய்வாளர் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இப்பயிற்சியில் இணைய விரும்பும் அகமுடையார் சமுக மாணவ மாணவியர் கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.
தொலைபேசி எண்கள் : 85248 41626, 96005 93281
அதேபோல் வெளியில் பயிற்சிக்கு தயாராகி வரும் அகமுடையார் சமுதாய மாணவ மாணவியர் வெற்றி பெறுவது ஒன்றே தங்கள் இலட்சியம் நினைத்து வைராக்கியம் கொண்டு திறமையாக படிப்பதையும் , கடுமையான பயிற்சியையும் மேற்கொண்டால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்!
அறிவிப்பு:
அகமுடையார் ஒற்றுமை வாட்ஸ் அப் எண்: 7200 50 7629
அகமுடையார் சமுதாய தகவல்கள் ,நிகழ்வுகள், அகமுடையார் திருவிழாக்கள், அகமுடையார் தலைவர்கள் , சமுதாய பெரியோர்கள் போன்ற அகமுடையார் சம்பந்தமான எந்தவிதமான தகவல்களையும் அகமுடையார் ஒற்றுமை தளத்துடன் பகிர்ந்து கொள்ள அனுப்ப வேண்டிய வாட்ஸ் அப் எண்: 072005 07629
இச்செய்தியை உங்களுக்கு தெரிந்த பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குருப்களில் பகிர்ந்துகொள்ளவும்.நன்றி!
அகமுடையார் சமுதாய செய்திகள், வரலாற்று பதிவுகளை விரைந்து உங்கள் மொபலில் பெற்றிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அகமுடையார் ஒற்றுமை அப்ளிகேசனை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள் .
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarotrumai.community
லிங்க் ஒர்க் ஆகவில்லை என்றால் உங்கள் மொபலில் கூகிள் பிளே ஸ்டோர் சென்று agamudayarotrumai என்று ஆங்கிலத்தில் இடைவெளி இல்லாமல் டைப் செய்து அப்ளிகேசனை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்!
நமது அப்ளிகேசன் பற்றிய தகவல்களை உங்களுக்கு தெரிந்த பேஸ்புக்,வாட்ஸ்அப் ,டெலிகிராம் குருப்களில் மறக்காமல் பகிர்ந்துகொள்ளுங்கள்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்