First
வேள் மரபினராகிய ஆய் அண்டிரன் எனும் கோனார் இனத்தவன்
————————————————-
ஆநிரை எனும் மாடுகளை மேய்த்தவர்களாகிய ஆய் குலத்தில் தோன்றிய ஆய் அண்டிரனும் ஓர் வேளிர் குலத்தலைவன் ஆவன் .
அண்டர் என்பது இன்றைய கோனார்களை பழங்காலத்தில் குறிக்க பயன்படுத்திய வார்த்தையாகும்.
சூடாமணி நிகண்டு முல்லையர்,பொதுவர்,அண்டர்,இடையர் என்பதெல்லாம் முல்லை நிலத்து மாக்கள் என்றும் இவர்கள் அனைவரும் ஒன்று என்று குறிப்பிடுகின்றது.
வேளிர் தலைவானாகிய இந்த ஆய் அண்டிரன் , மாடுகளை மேய்த்தவர்களாகிய அண்டர் மற்றும் ஆயர் என்று இரு பெயர்களை குறிக்கும் பெயரையே தன் பெயராக கொண்டிருப்பது வேளிர் குலத்தவருள் இன்றைய கோனார் இனத்தவரும் இருந்துள்ளனர் என்பதை உறுதி செய்யும் மற்றொருமொரு சான்றாகும்(ஏற்கனவே துவராபதி வேளான் என்ற கோனார் இனத்தவர் பற்றி பதிவிட்டிருந்தோம்.
ஆகவே வேளிர்,வேள் என்பவர்கள் குறிப்பிட்ட சாதியினர் அல்ல. அவர்களில் குறிஞ்சி நில வேட்டுவர், முல்லை நிலத்து மக்கள், நெய்தல் நில பரதவ மீனவர் போன்ற பல்வேறு நிலமாக்களும் அவ்வழியின் இன்றைய அகமுடையார்,கோனார், பார்க்கவ குல உடையார், வேட்டுவர் , பரதவர் போன்ற பல்வேறு சாதியினரும் இருந்துள்ளனர் .இது குறித்து பின்வரும் நாட்களில் பதிவிடப்படும்.
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் சம்பந்தமில்லாத கோனார்களை பற்றி தொடர்ந்து பேசுவதன் காரணம். வேளிர் ,வேள் என்பவர்கள் குறிப்பிட்ட சாதியினர் என்று சில பைத்தியங்கள் பேசுவதினாலும் ஆதன் ஊடாய் தமிழக வரலாற்றிலும் அகமுடையார் வரலாற்றிலும் குழப்பம் ஏற்படுவத்துவதை கண்டிப்பதற்காகவும் தான்.
மேலும் இந்த வரலாற்று உண்மைகளை நீங்களும் தெரிந்துகொள்ள முடியும் அப்போது தான் இந்த குழப்பவாதிகளுக்கு எதிராக ஒவ்வொருவரும் எதிர் வினை ஆற்ற முடியும்.
மேலும் அரிய முயற்சி செய்து அகமுடையார் கல்வெட்டு பற்றிய பதிவு போட்டால் 10 லைக்குகள் கூட வருவதில்லை. நம்முடைய வரலாற்று பதிவு தமிழ்நாட்டு வரலாற்றை குழப்பங்களை சரி செய்யும் முயற்சிக்காவது உதவட்டுமே.
இணைப்புகள்
1- வேளிர் வரலாறு நூல் ,பக்கம் 32, ஆசிரியர் மு.ராகவ அய்யங்கார்.
2- சூடாமணி நிகண்டு பாடல்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்