First
இன்றைய நிகழ்விற்கு வரவேற்கின்றோம்
———————-
இன்று (20-03-2023) மன்னார்குடி இராஜகோபால சுவாமி கோவில் நடைபெறும் அகமுடையார்களின் சூரியபிரபை நிகழ்விற்கு அனைத்து அகமுடையார் உறவுகளையும் வரவேற்கின்றோம்!
இன்றைய நிகழ்வில் பாரம்பரிய சூரியபிரபை நிகழ்வுடன் மன்னார்குடி மாமன்னர் மருதுபாண்டியர் திருமண வளாகத்தில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் சிலையும் திறக்கப்பட உள்ளது. ஆகவே அனைத்து அகமுடையார் உறவுகளும் இந்த இரட்டை திருவிழா நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புத்து மகிழுமாறு அகமுடையார் ஒற்றுமை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்!
நிகழ்வில் பங்கேற்கும் அகமுடையார் உறவுகள் தவறாமல் அகமுடையார்களின் குலநிறமாகிய சிவப்பு மற்றும் மஞ்சள் கொடியை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். இதே நிறத்தையே அகமுடையார்களான சோழர்கள், வாணாதிராயர்கள், இலங்கையின் கண்டி, கம்பளை போன்ற அரசர்கள் தங்களில் கொடிகளில் பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே மறக்காமல் இக்கொடியை பயன்டுத்துங்கள்.
குறிப்பு:
மன்னார்குடியில் அமையும் மருதுபாண்டியர் சிலையும் மஞ்சள் நிறத்தில் சிவப்பு பின்புலத்தில் அமைந்துள்ளது. ( யாரும் இந்த நிறத்தை பற்றி வலியுறுத்தி கூறாமலேயே இது நடந்துள்ள்ளது என்பது ஆச்சர்யம் தான் ) ஆகவே இந்த நிறம் நம்முடைன் தொடர்ந்து வந்துள்ளது தெரிகிறது.
இணைப்புகள்
1- சோழ அரச கொடி
2- கண்டி அரச கொடி
3- கம்பளை அரச கொடி
4- சிவப்பு மஞ்சள் நிற வர்ணத்தில் பதவியேற்கும் வாணர் வழிவந்த தாய்லாந்து அரசர்
5- சூரியபிரபை வாகனத்தில் இராஜகோபால சுவாமி
6- மன்னார்குடியில் இன்று திறக்கப்படும் மருதுபாண்டியர் சிலை
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்