First
இன்றும் பல்லவராயர் பட்டம் கொண்ட அகமுடையார்கள்
————————————
பல்லவராயர் பட்டத்தினை பலர் சொந்தம் கொண்டாடினாலும்தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தஞ்சை ,புதுக்கோட்டை, மதுரை ,இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கிடைத்த 10க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களில் அகமுடையார்களே பல்லவராயர்களாக சுட்டப்படுகின்றனர்.
என்னதான் முதன்மை வரலாற்று ஆதாரங்களான கல்வெட்டுக்களில் குறிப்பிட்ட பகுதியில் பல்லவராயர் பட்டங்களில் அகமுடையார்கள் காணப்பட்டாலும் இப்போதும் கூட சிலருக்கு சந்தேகம் வரலாம்.
அவர்கள் குழப்பத்தை நீக்கும் வகையில் இன்றும் பல்லவராயர் பட்டம் கொண்ட அகமுடையார்கள் வாழ்ந்துவருகிறார்கள்.
குறிப்பாக தற்போதைய திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையிலும் திருச்சி பெல் கம்பெனியை சுற்றி சுமார் கோட்டரபட்டி,மாறநேரி,பொன்விலங்கான்பட்டி( பொன் விளைந்தான்பட்டி) உள்ளிட்ட 10 கிராமங்களில் பல்லவராயர் பட்டத்துடன் அகமுடையார்கள் வாழ்ந்து வருகின்றனர்.
ஆதாரம்:
இச்செய்தியை உறுதி செய்துகொள்ள விரும்புவர்கள் மேலே குறிப்பிட்ட ஊர்களுக்கு நேரில் சென்று உறுதி செய்துகொள்ளலாம்.
அவ்வாறு எல்லோரும் சென்று உறுதி செய்துகொள்ள முடியாது அல்லவா? அவர்களுக்காக ஒர் திருமண பத்திரிக்கையை இங்கே இணைக்கின்றோம்.
இப்பதிவில் உள்ள பத்திரிக்கையில் இராமநாதபுரத்தில் சேர்வை பட்டம் கொண்ட அகமுடையார் மணமகளுக்கும் , பொன்விளைந்தான் பட்டி பல்லவராயர் பட்டம் கொண்ட அகமுடையார் மணமகனுக்கும் நடந்த திருமண அழைப்பிதழை நீங்கள் பார்க்கலாம்.
குறிப்பு:
இப்பத்திரிக்கையை வெளியிடுவதற்கு முன் இன்று குறிப்பிட்ட பல்லவரயர் பட்டம் உள்ள குடும்ப உறுப்பினருக்கு போன் செய்து அனுமதி பெற்றுக்கொண்டும் பல்வேறு தகவல்களை உறுதி செய்துகொண்டோம்.
பத்திரிக்கையில் உள்ள செல்போன் எண்ணை மறைத்து வெளியிடுகின்றோம் .ஏனென்றால் பொதுவெளியில் வெளியிடுவதால் குறிப்பிட்டவர்களுக்கு எந்த தொந்தரவும் வரக்கூடாது என்பதால்.
இன்னும் உறுதி செய்திகொள்ள விரும்புவோர் மேர்குறிப்பிட்ட ஊர்களுக்கு சென்று நேரடியாக கேட்டுத்தெரிந்துகொள்ளலாம்.
மேலும் முடியுமானால் குறிப்பிட்ட ஊர்களுக்கு சென்று அங்குள்ளவர்களை நேரில் நேர்காணல் செய்து காணியாக நமது அகம்முடையார் ஒற்றுமை யூடிப் சேனலில் வெளியிடுவோம்.
மேலதிக தகவல்கள்
————-
மேற்குறிப்பிட்ட குடும்பத்தினருடன் போனில் பேசும் போது அவர் ஒரு தகவலை குறிப்பிட்டார்.
அதாவது வேறு ஒரு திருமணம் சம்பந்தமாக தஞ்சாவூரில் உள்ள அகமுடையார் குடும்பத்தினரிடம் அவர் பேசிய போது அவர்கள் இவர்களது பல்லவராயர் பட்டத்தை பார்த்து நீங்கள் கள்ளர் சாதியா என்று கேட்டனராம்?
இல்லை.நாங்கள் அகமுடையார் சாதியினர் என்று சொல்லி புரிய வைத்த போதும் தஞ்சாவூர்
குடும்பத்தார் தங்கள் பத்திரிக்கையில் பல்லவராயர் பட்டத்தை தவிர்த்து விட்டனர்.ஏனென்றால் பல்லவராயர் பட்டத்தை பார்த்தால் தஞ்சையில் உள்ள தங்கள் உறவினர்கள் ,இவர்கள் பல்லவராயர் பட்டம் கொண்ட கள்ளர்களுடன் சம்பந்தம் வைத்துக்கொண்டுள்ளனர் என்று தவறாக நினைத்துக்கொள்வார்களென்று.
பட்டம் வேறுபட்டாலும் சாதி ஒன்று தானா என்பதை அனைவரும் உறுதி செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அகமுடையார் சாதியிலேயே பட்டங்களுக்கு நடுவில் நடக்கும் திருமணங்களின் போது பெயர்களுக்கு பின்னால் பட்டத்தை போட்டு அதற்கு பக்கத்தில் அடைப்பில் அகமுடையார் என்று குறிப்பிடவேண்டும்.
உதாரணத்திற்கு: சக்திகணேஷ் சேர்வை(அகமுடையார்)
என்பதைப்போல் குறிப்பிட்டால் பத்திரிக்கையை பார்ப்பவர்கள் குழப்பம் அடையமாட்டார்கள் என்பதோடு அகமுடையார் பட்டங்களை ஒருவருக்கொருவர் தெரிந்துகொள்ளவும் ஏதுவாகும்.
மேற்குறிப்பிட்ட பகுதியில் வாழும் பல்லவராயர் பட்டம் கொண்ட அகமுடையார்கள், உண்மையில் புதுக்கோட்டையை பூர்விகமாக கொண்டவர்கள் என்றும் தற்போதைய புதுக்கோட்டை தொண்டைமான்கள் புதுக்கோட்டைக்கு வந்தபோது தற்போது வாழும் பகுதிக்கும் இவர்கள் குடிபெயர்ந்ததும் தெரிகின்றது.
இன்று பல்லவராயர் பட்டம் போடும் சில சமுதாயங்கள் ,தங்கள் பெயருக்கு பின்னால் மட்டுமே இந்த பட்டங்களை கொண்டிருப்பார்கள். 600-1000 வருடம் ம்முன்பான கல்வெட்டுக்களில் அவர்கள் சாதி பெயருடன் பல்லவராயர் பட்டம் இணைந்து வராது.
ஆனால் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டிருப்பதோடு , வாழ்வியல் நடைமுறையிலும் இப்பட்டங்களை கொண்டிருப்பவர்கள் அகமுடையார் சமுதாயத்தினரே.
சில வருடங்கள் முன்பே இப்பத்திரிக்கையுடன் திருமண வாழ்த்து பிளஸ் புகைப்படங்களையும் இப்பகுதியை சேர்ந்த சகோதரர் ஒருவர் அனுப்பியிருந்தார் .நாமும் முகநூலில் வெளியிட்டிருந்தோம். பின்னர் அவர் ,அண்ணே நான் அவர்களை கேட்காமல் உங்களுக்கு அனுப்பி விட்டேன் ஆகவே பதிவை டெலிட் செய்துவிடுங்கள் என்றார் .டெலிட் செய்துவிட்டோம்.
சில வருடங்கள் இப்படியே கடந்துவிட்டன. சற்று முன் யாரோ ஒருவர் பல்லவராயர் பட்டம் கொண்ட அகமுடையார்கள் இன்றும் வாழ்வதாக உங்கள் நேரலையில் சொன்னீர்களே அவர்கள் எந்ததெந்த ஊர்களில் உள்ளார்கள் என்று கேட்டார்.அப்போது தான் இப்பதிவை வெளியிட வேண்டும் என்ற எண்ணம் நமக்கு தோன்றியது.
உடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு போன் செய்து ,செய்திகளை உறுதிப்படுத்திக்கொண்டு பத்திரிக்கையை வெளியிட அனுமதி பெற்றுக்கொண்டோம்.
இதே போல் அகமுடையார்களில் பல்வேறு பட்டம் கொண்டவர்களும் தங்கள் பத்திரிக்கையை முகநூலில் வெளியிட்டு அப்பதிவில் அகமுடையார் என்று உங்கள் சாதியை குறிப்பிட வேண்டுகிறோம். அவ்வாறு செய்வதால் அகமுடையார் பட்டங்களை எல்லோரும் தெரிந்துகொள்ள ஏதுவாகும்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்