First
“வரலாற்று தரவுகளில் அகமுடையார்கள்” என்ற ஓர் புதிய நூல் நம் பார்வைக்கு கிடைத்தது. ஆசிரியர் அவர்கள் நம் பார்வைக்கு அனுப்பி வைத்தார். அவருக்கு நம் நன்றிகள்.
இந்நூலை முழுவதுமாக படித்தோம்.
இது ஓர் அரிதிலும் அரிதான முயற்சி.
அகமுடையார் சமுதாயம் பற்றி நூற்றுக்கணக்கான நூல்களில் வெளிவந்த செய்திகளை சேகரித்து அதன் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அகமுடையார்கள் பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் செய்திகளை எல்லாம் திரட்டி ஒரு நூலில் குறிப்புகளாக அளித்துள்ளார். எல்லோராலும் அந்த 100 நூல்களை வாங்கி படிப்பது என்பது இயலாதது ஆனால் இந்த ஒரு புத்தகம் அந்த எல்லா பணிகளையும் செய்கிறது.
அகமுடையார் பிரிவுகள் விளக்கம்,பட்டங்கள், அகமுடையார் சமுதாய பல்வேறு பெயர்கள் அதன் விளக்கம் , குலதெய்வங்கள்,பண்பாட்டு அடையாளங்கள் போன்ற பல விசயங்கள் காட்டப்பட்டுள்ளன.
அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்தவர் எழுதியுள்ள இப்புத்தகம் அகமுடையார் சமுதாயத்தின் என்சைக்ளோபிடியா என்று கூறினால் அது மிகையில்லை.
அகமுடையார் சமுதாயத்தை புதிதாக அறிய விரும்புவர்கள் முதல், ஆராய்ச்சி மாணவர் வரை அனைவருக்கும் பெரிதும் பயன்படும் நூல்.
விரைவில் காணொளியில் இந்நூல் பற்றி “நூல் அறிமுகம்” செய்யப்படும்.
இந்நூல் ஒன்றின் விலை 350 முதல் 375 வரை இருக்கலாம்.
“வரலாற்று தரவுகளில் அகம்படியர்கள்” நூலை வாங்க
விரும்புவர்கள் கீழ்கண்ட லிங்கில் சென்று உங்கள் தகவலை பதிவு செய்துகொள்ளவும்! நன்றி!
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSec4hF0-9K2ZjRWK4uSGu4IBUTL7S2dR4aa3LtTwy2nAl6f2A/viewform
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்