First
கோவையில் அகமுடையார் கட்டிய
ஸ்ரீ சித்திர புத்திர எமதர்ம ராஜா கோவில், வெள்ளலூர், கோவை
=====================================
கோயம்புத்தூரில் எமதர்மராஜா கோயிலை வெள்ளளூரில் அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்தவர் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டிய பின்பே அதன் தோற்றம் தொடங்கியது.
நஞ்சப்ப தேவர் என்ற அகமுடையார் தலைமையிலான படைகளை அனுப்பி கொங்கு மண்டத்தை திருமலை நாயக்கர் கைப்பற்றினார், அந்த பகுதியை நிர்வகிக்க தன் படையில் சிறப்பாக வீரம் செறிந்த போர் செய்த நஞ்சப்ப தேவரிடம் அந்த பகுதியை நிர்வகிக்கும் ஆளுநர் பொறுப்பை கொடுத்தார்,ஆகையால் பெருமளவு அகமுடையர் இன மக்கள் சூளூர், இருகூர், கோவை இராமநாதபுரம், குறிச்சி, வெள்ளளூர், பொளுவம்பட்டி, பேரூர் போன்ற இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.
(கோவை மருதமலையை சீரமைத்த வள்ளல் சாண்டோ சின்னப்ப தேவர் போன்ற அகமுடைய தேவர்கள் கோவையை சேர்ந்தவர்கள் தான், இன்றும் கோவை ராமாநாதபுரம் தேவர் இன மக்கள் பெருன்பான்மையாக வாழ்கிறார்கள் அதன் ரகசியம் இந்த நச்சப்ப தேவர் படையே – மேலும் கொங்கு தீரன் சின்னமலைக்கு போர்ப்பயிற்சி கொடுத்து அவரின் தளபதியாக இருந்த கருப்ப சேர்வை இந்த நஞ்சப்ப தேவர் வம்சமே )
ஒரு நாள் எமதர்மன் நஞ்சப்ப தேவரின் கனவில்தோன்றி தனக்கு நொய்யல் ஆற்றின் அருகே கோயில் கட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்,
அதன்பிறகு வெள்ளளூரில் அந்த இடத்தை கண்ட நஞ்சப்ப தேவர் அது ஒரு விவசாய நிலம் என்றும் அதன் உரிமையாளர் அந்தணர் என்பதையும் அறிந்து கொண்டார் பின்னர் ஆட்களை அனுப்பி நடந்தவற்றை விளக்கி கூறி அந்த இடத்தை தன் பொறுப்பில் எடுத்து .பின்னர் அந்த இடத்தில் நஞ்சப்ப தேவர் எமனுக்கு கோயில் கட்டினார்.
மற்ற கடவுளை போல நல்ல நேரத்தில் பூஜைகள் நடைபெறுவது இல்லை ஞாயிறுதோறும் 12.30 மணிக்கு எம கண்ட நேரத்தில் தான் இங்கே பூஜைகள் நடைபெறுகின்றன.தெற்கு நோக்கி அவருக்கு பிடித்த திசையில் கையில் பாசக்கயிரோடு எருமை மாட்டின் மீது அமர்ந்த படி சிலை உள்ளது.
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்