First
“வரலாற்று தரவுகளில் அகம்படியர்கள்” என்ற நூலை பணம் செழுத்தி பெற விரும்புவோர் தங்கள் தகவலை நிரப்ப சொல்லி கேட்டிருந்தோம்.
இதுவரை மொத்தம் 17 பேர் மட்டுமே தங்கள் தகவலை கொடுத்திருந்தார்கள்.
2 பேர் ,1 டெல்டா பகுதியை சேர்ந்தவர்.
மீதியுள்ள 14 பேரும் வட தமிழக பகுதியை சேர்ந்தவர்கள்.
இதிலிருந்தே உங்களுக்கு பல விசயம் தெரிய வந்திருக்கும்.
சரி! இதெல்லாம் எங்களுக்கு பல காலத்திற்கு முன்பே தெரிந்த உண்மை! அதனால் தான் அகமுடையார் ஒற்றுமை வெப்சைட்டை 4 வருடம் சொந்த பணம் செழுத்தி நடத்தி 3 வருடங்கள் முன் விட்டிருந்தோம் .ஆனால் மேற்குறிப்பிட்ட நூல் ஆசிரியர் தனது நூலில் நமது வெப்சைட்டை குறிப்பிட்டிருந்ததால்
agamudayarotrumai.com
டொமனை மறுபடி வாங்கி ,ஹோஸ்டிங் செய்து மறுபடி இயங்க செய்துவிட்டோம்.
ஆம் . நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்(டு) எல்லார்க்கும் பெய்யும் மழை என்ற வள்ளுவர் வாக்கைப்போல இந்த ஒருவருக்காகவே மறுபடி செலவும் ,முயற்சியும் செய்து agamudayarotrumai.com வெப்சைட்டை இயங்க செய்துவிட்டோம்.
ஆனால் இங்கே பல்வேறு நூல்களை பார்த்து ,ஆராய்ந்து,அந்த நூல் கருத்துக்களை சுருக்கி , டைப் செய்து ,டிசைன் செய்து நூல் உருவாக்கினால் நூல் வாங்குவதற்கு ஆள் இருப்பதில்லை.
இங்கே இலவசமாய் அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் வெளியிடும் செய்திகளை பார்ப்பதற்கே ஆள் இல்லை எனும் போது பணம் செழுத்தி நூல் வாங்கியா படிக்க போகிறார்கள்…
அதுவும் தென் மாவட்ட அகமுடையார்களை பற்றி சொல்லவே வேண்டியதில்லை… சக தென் மாவட்ட அகமுடையானாக உங்கள் சமுதாய உணர்வை பல வருடங்களில் பல விசயங்களில் நான் பார்த்தாகி விட்டது.
அகமுடையார்களுக்கு வரலாற்று நூலே இல்லை ,இப்போது எந்த நூலும் படிக்க கிடைக்கவில்லை என்பது ஆனால் கடும் உழைப்பில் நூல் உருவாக்கினால் அதை திரும்பி கூட பார்ப்பதில்லை.
தமிழ்நாட்டில் பல்வேறு பட்டங்களில் 65 இலட்சத்திற்கும் மேல் அகமுடையார்கள் இருக்கின்றோம் .என்ன புண்ணியம் நூல் வாங்க பெயர் கொடுத்தவர்கள் மொத்தம் 17 பேர் தான் . அதிலும் எத்தனை பேர் சரியான முகவரி கொடுத்திருப்பார்கள் ,உண்மையில் நூல் வாங்குவார்கள் என்று தெரியவில்லை.
இருந்தாலும் அந்த 17 உணர்வாளர்களுக்கு நம் நன்றிகள்!
நிறைய சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.ஆனால் பொதுவெளியில் என்னால் திட்ட முடியாது.
ஏதோ பண்ணுங்கள்!
அகமுடையார் ஒற்றுமை யூடிப் சேனலை , Tamil History Channel என்று பெயர் மாற்ற எண்ணியது மிகவும் சரிதான் என்றே தோன்றுகிறது. வாழ்க! வளர்க!
யாரும் உங்கள் முகவரியை எல்லோரும் பார்க்கும்வகையில் பொதுவெளியில் அளிக்க வேண்டாம்.
நூலை ரூ350 பணம் செழுத்தி நூலை பெற விருபுவர்கள் கீழ்கண்ட லிங்கில் சென்று பதிந்து வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSec4hF0-9K2ZjRWK4uSGu4IBUTL7S2dR4aa3LtTwy2nAl6f2A/viewform
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்