• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

குருபூஜை செய்திகளுக்கு நடுவே ஓர் பிரேக்! —————————————…

October 21, 2017 by administrator

குருபூஜை செய்திகளுக்கு நடுவே ஓர் பிரேக்!
—————————————
நடிகரும் முன்னாள் முதல்வருமான மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் எனும் எம்.ஜி.ஆர் அவர்களின் குலதெய்வம் மருதூர் ஐய்யனார்.
திரு. எம்ஜிஆர் -மேனன் பட்டம் கொண்ட அகம்படியர் .இவர்களின் குலதெய்வம் இவர் பிறந்த மருதூர் எனும் ஊரில் உள்ள அய்யனார் ஆகும். .அகம்படிய நாயர்களின் பட்டங்களில் மேனன் பட்டமும் உண்டு! நாயர் சாதியில் அகம்படிய நாயர்கள் அகம்படிய சாதிய மூலத்தைக் கொண்டவர்கள் . மகாபலி காலம் முதற்கொண்டு கேரளாவை ஆண்டு வந்தவர்கள்.வந்தேரிகளான நம்பூதரிகளால் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டவர்கள்.

எம்ஜிஆர் மலையாளி எனப் பேசப்பட்டபோது அவரை கொங்கு வேளாளர் என்று கூறி கதைகள் புனையப்பட்டது.அன்றைய அரசியலுக்கு எம்ஜிஆருக்கு அது தவிர்க்க இயலாமல் தேவைப்பட்டது.ஆனால் வரலாற்றிஞர்களும்,எம்ஜிஆர் பிறந்த ஊரில் இருந்து வரும் செய்திகள் பட்டங்கள் ,களத்த்தில் இன்றும் எஞ்சி இருக்கும் செய்திகள் என பலவும் எம்ஜிஆரின் மூலத்தை திரும்பிப் பார்க்கும்படி செய்கின்றன.அகமுடையார்கள் வரலாற்று ஆர்வத்தோடு அல்லது வரலாற்றி மீட்பில் கொஞ்சமேனும் அக்கறை கொண்டிருந்தால் அன்றே இச்செய்திகள் அவர் அறியும்படி செய்திருக்கலாம்.ஆனால் எப்போதும் போல் இச்சமூகம் தூங்கவே செய்யும் ஏனென்றால் நமக்குத் தான் வரலாற்றுப் பெருமை தேவையில்லையே,நமக்கு பொருளாதாரத்தை நோக்கி மட்டும் தானே இலக்கு என்று எண்ணி ஓடியதாலேயே நம் வரலாற்று மாற்ற்றார் வரலாறாய் இன்று! இருப்பின் முன்னோர் செய்த தவப்பயனாய் பல்வேறு தரவுகளின் எச்சங்களும் இன்றும் நமக்காக உள்ளன.

தகவல் உதவி: எஸ்.ராமசந்திரன் -வரலாற்றிஞர்(அகமுடையார் அரண் நிறுவனர் -திரு.பாலமுருகன் அவர்களிடம் தெரிவித்த செய்திகள் வழியே )
புகைப்படம் 1 : திரு.எம்.ஜி.ராமச்சந்திரன்
புகைப்படம் 2: கேரளாவை பூர்விகமாகக் கொண்ட விருதுநகர் இராஜகுல அகம்படியர்களுக்கு பாத்தியப்பட்ட மருதூர் அய்யனார் கோவில்
புகைப்படம் 3: கோவில் திருவிழா அழைப்பிதழ்-தலைக்கட்டு வரி
மேலும் பல கோவில் திருவிழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

புகைப்படங்கள் உதவி: ஸ்ரீ மருதூர் அய்யனார் கோவில் பங்காளிகள். மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு மருது என்ற பெயர் வருவதற்கு எதெய்ட்சையானது அல்ல.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழங்கி வரும் பாரம்பரியத்தின் நீட்சியே இதுவாகும். மருதுபாண்டியர் பிறந்த இன்றைய விருதுநகர் மாவட்டத்தில் மருதூர் அய்யனார் போன்ற குலதெய்வங்களும் விருதுநகர் அருகில் உள்ள அகமுடையார்கள் மிகப் பெரும்பான்மையாக வாழும் மருதங்குடி என்ற ஊர் பெயர்களும் இன்றும் இவற்றை களசாட்சிகளாக இருக்கின்றன.
நன்றி: அடிப்படை தகவல்கள் உதவி திரு.எஸ்.ராமசந்திரன் -வரலாற்றறிஞர்( மேலும் திரு.பாலமுருகன் அகமுடையார்-நிறுவனர்-அகமுடையார் அரண் இயக்கம் -அடிப்படைத் தகவலைப் பெற்றுத் தந்தமைக்காக )

அகமுடையார்களின் கேரள பூர்விகம் பற்றி ஏற்கனவே பலமுறை பேசியுள்ளேன்.இது புதிதல்ல.தொடர்ந்தும் வரும்!
மேலும் விரிவான தகவல்கள் மருதுபாண்டியர் குருபூஜை நிறைவுற்றவுடன் வெளிவரும்!
கூடுதல் செய்தி:
மகாபலி அகம்படியர்களின் கேரள பூர்விகம் பற்றி வராற்றறிஞர்கள் தங்கள் ஆய்வேடுகளை சமர்பிக்க இருக்கிறார்கள்.நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது!






Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

கருணாஸ் Vs DMK MLAs... Karunas Speech | TN Assembly 2020 | DMK
திருமங்கலம் சட்டமன்ற தேர்தலில் ஆதி நாரயணத்தேவர் அவர்களுக்கு குக்கர் சின்னத்தில் ...
#வேலூர் மாவட்டம் அகமுடையாரின் கோட்டையான #சேவூரில் பிரம்மாண்ட திருவிழா #மருதுபா...
வெவ்வேறு அமைப்புகளாக இருந்தாலும் பொது நிகழ்வு என்றால் அகமுடையார் அமைப்பு தலைவ...
-இருளாயி-சூராயி அம்மந்அகமுடையார் குலதெய்வங்களும் அசுர சம்பந்தமும் --------------...
ஓணம் எனும் தமிழர் விழா- தமிழ்நாட்டு அடையாளங்கள் -காஞ்சிபுரம் ஓணேஸ்வரர் திருக்கோவ...
வரும் 12ம் தேதி (12-11-2017) மும்பையில் நடைபெற உள்ள மும்பை வாழ் அகமுடையார் துளுவ...

Filed Under: Uncategorized

Primary Sidebar

Recent Posts

  • மருது சேனை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
  • #கரூர் மாவட்டம், கல்லடை கிராம #அகமுடையார்கள் நடத்தும் திருவிழா
  • விழுப்புரம் மாவட்டம் #திண்டிவனத்தில் தனியார் மண்டபத்தில் #அகமுடையார்_சமுதாய_விழி…
  • #சிம்ம_குறலோன் வேலூரில் சுதந்திர போராட்ட தியாகிகளின் முன்னோடி…. அகமுடையார்…
  • #India_Trending 1801ஜம்புத்தீவுபிரகடனம் எங்களை யாரும் கண்டுக்கொள்ளவில்லையாம்……