First
அனைத்து அகமுடையார் சொந்தங்களின் கவனத்திற்கு!! 🙏
தமிழகத்தின் கலாச்சாரத்தில் இருந்தும் இளைஞர்களின் இதயங்களில் இருந்தும் பிரிக்க முடியாத சக்தியாக விளங்குவது நம் பாரம்பரிய விழாக்களான
வட மாவட்டங்களில் எருது விடும் விழா, தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு விழாக்கள் வரும் பொங்கல் திருநாள் முதல் குறைந்தது மூன்று மாதங்களுக்கு மேல் பல்வேறு கிராமங்களில் வெகு விமர்சையாக நடைபெறும்!!
அந்த விழாக்களில் வரவேற்பு பதாகைகளில் (பேனர்,நோட்டீஸ் போன்றவற்றில்) நமது குல தெய்வங்களான மாமன்னர் மருதுபாண்டியர்கள் மற்றும் அகமுடையார் வழித்தோன்றல்கள் புகைப்படங்களை இடம் பெற வைக்க வேண்டும்!
அப்போது தான் அந்தந்த ஊர்களில் நம் சமுதாயம் வாழ்ந்து வருகிறது என்பதாவது வெளியில் தெரியும்!
ஏனெனில் குறைந்த பட்சம் ஒரு எருது விடும் விழாவில் 25 லிருந்து 50 ஆயிரம் பேர் கலந்து கொள்வர்.
இதன்மூலம் என்ன நடந்துவிடும் என்று ஏளனமாக நினைக்க வேண்டாம்! இன்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சமூகங்கள் தான் தனது பெரும்பான்மையை நிரூபித்து இட ஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளை பெற்று விட்டனர்.
இதை சாதாரணமாக கடந்து செல்லாமல் அந்தந்த ஊரில் நம் சமுதாய இளைஞர்கள் 10 பேர் சேர்ந்தாலே ஒரு பேனர் வைக்கலாம். எவ்வளவு செலவாகி விடும்?
சிந்தித்து செயல்படுங்கள் பெரியோர்களே! இளைஞர்களே!
அடையாளம் தான் ஒரு சமூகத்திற்கு அத்தியாவசியம்!!
நன்றி!!
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்