First
#அகக்குடியில் பிறந்த உலகப் புகழ் பெற்ற ஆற்காடு இரட்டை சகோதரர்கள்!
#கால்நூற்றாண்டுக்கு மேல் பல்கலைக்கழக துணைவேந்தராக பதவி வகித்த ஒரே ஒருவர் என்ற பெருமை கொண்ட இலட்சுமணசாமி முதலியார்
ஆற்காடு இலட்சுமணசுவாமி முதலியார் மற்றும் இராமசாமி முதலியார் எனப்படும் ஆற்காடு இரட்டையர்கள் கர்னூலில், அகமுடையார் பேரினத்தில் குடும்பத்தில் ஆற்காடு குப்புசாமி, சிதம்மா தம்பதியருக்கு 14.10.1887 அன்று மகனாகப் பிறந்த இரட்டையர்கள்.
மூத்தவர் , இலட்சுமணசாமி முதலியார் இளையவர். இளையவர் ராமசாமி முதலியார்.
ஆற்காடு இலட்சுமணசுவாமி முதலியார் சிறந்த மருத்துவர் , கல்வியாளர்.
இவர் எழுதிய மகப்பேறு மருத்துவப் புத்தகம் இன்றளவும் தமிழ்நாட்டு மருத்துவ மாணவர்களால் பயிலப்பட்டும் பின்பற்றப்பட்டும் வருகிறது. .
இலட்சுமணசாமி முதலியார் அந்நாளில் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் (Madras University) என அழைக்கப்பெற்ற சென்னைப் பல்கலைக்கழகத்தில் நீண்டகாலம் (27 ஆண்டுகள்) துணைவேந்தராகப் பணிபுரிந்தவர் .
இவர் காலத்தில் இந்தப் பல்கலைக்கழகம் உன்னத நிலையில் இருந்தது.Madras University என்கிற
முதல் இரண்டு எழுத்துக்களை ( MU ) Mudaliar University என்றும் விரிவுபடுத்தி அழைப்பார்கள்.
27ஆண்டுகள் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் (இன்றைய ராஜிவ்காந்தி பொது மருத்துவமனை) முதல்வராகவும் பணியாற்றியவர்.
உலக நலவாழ்வு மையத்தின் (WHO)செயற்குழுத் தலைவராக இவர் 1949 மற்றும் 1950 ஆம் ஆண்டுகளில் செயல்பட்டார்.
இங்கிலாந்து மகாராணி எலிசபெத் அம்மையாருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் இவரே!
எட்டாவது உலக நலவாழ்வு மாநாட்டின் துணைத் தலைவராக 1955 ஆம் ஆண்டிலும் 14 ஆவது அம்மாநாட்டின் “தலைவராக ” 1955 ஆம் ஆண்டிலும் செயல்பட்டார்.
எட்டாவது உலக நலவாழ்வு மாநாட்டின் துணைத் தலைவராக 1955 ஆம் ஆண்டிலும் 14 ஆவது அம்மாநாட்டின் “தலைவராக ” 1955 ஆம் ஆண்டிலும் செயல்பட்டார்.
சிறறூர்(கிராம)ப்புற மருத்துவ சேவை வரலாற்றில் 1959 ஆம் ஆண்டில் முதலியார் தலைமையிலான கமிட்டி அளித்த பரிந்துரைகள் குறிப்பிடத்தக்கவை.
சென்னை சட்ட மேலவை உறுப்பினராகவும் சிறப்பாகப் பணியாற்றினார்.
இந்திய அரசு இவருக்கு, 1963 ஆம் ஆண்டு தாமரை நன்மணி (பத்மவிபூஷண்) பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.
மூத்தவரை போல் இளையவரும் பொது வாழ்வில் உயர்ந்த பணிகளை மேற்கொண்டிருந்தார்.
இராமசாமி முதலியார் நீதிக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே (1917) கட்சியில் இருந்தவர். நீதிக்கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பும் வகித்தார். அப்போது வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்க்கும் பிராமணர் அல்லாதோரது ஒருங்கிணைப்பிற்கும் பாடுபட்டார்.
1939இல் இரண்டாம் உலகப்போர் மூண்டபோது இராமசாமி முதலியார், வைசிராயின் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
ஜுலை 1942இல் பிரிட்டிஷ் பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சிலின் போர்க்கால அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்ட இரு இந்தியரில் இவரும் ஒருவர்.
இரண்டாம் உலகப்போர் காலத்தில் இவர் ஆற்றிய தொண்டினைப் பாராட்டி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இவருக்கு “டாக்டர் ஆப் சிவில் லா” (Doctor or Civil Law) என்னும் பட்டத்தை 1945ஆம் ஆண்டில் வழங்கியது
1945இல் ஏப்ரல் 25 முதல் ஜுன் 26 வரை சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் இந்தியப் பிரதிநிதியாக முதலியார் கலந்து கொண்டார்.
இந்தியாவுக்குத் திரும்பி மைசூரின் முதலமைச்சராகப் (திவான்) பதவியேற்றார்.மைசூர் மகாராஜா ஜெயச்சாமராஜ வாடியாருக்கு சுதந்திர இந்தியாவுடன் இணைய ஆலோசனை வழங்கினார்.
வையத்து வான்புகழ் கொண்ட அகமுடையார் பேரினம் என்பதில் பெருமை கொள்வோம்!
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்