#இன்று முத்தமிழில் ஒன்றான நாடகத் தமிழின் தந்தை ஐயா பம்மல் சம்பந்த முதலியார் அவர்…

Spread the love

First
#இன்று முத்தமிழில் ஒன்றான நாடகத் தமிழின் தந்தை ஐயா பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் பிறந்த தினம் 🙏 போற்றி வணங்குகிறோம்!

#அகமுடையார் பேரினத்தில் பிறந்த தமிழ் நாடக தந்தையான பம்மல் சம்பந்த முதலியார் தமிழ் நாடகங்களை முதன் முதலில் உரைநடையில் எழுதியவர் வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர்!

#சென்னையில் பம்மல் விஜயரங்க முதலியாருக்கும் மாணிக்கவேலு அம்மாளுக்கும் பிப்ரவரி 01 1873 அன்று பிறந்தார் விஜயரங்க முதலியார் முதலில் தமிழ் ஆசிரியராகவும் பின்னர் பள்ளிக் கல்வித் துறையில் ஆய்வாளராகவும் இருந்தவர்.

#அவர் தானே தமிழ் நூல்களை வெளியிட்டு வந்தார் இதன் காரணமாக அவர்கள் வீட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன.

#படிக்கத் தெரிந்த நாள் முதல் சம்பந்த முதலியார் இந்த புத்தகங்களை ஒன்றொன்றாக ஆர்வமுடன் படித்து வந்தார். பின்னர் சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞரான இவர் 1924 முதல் 1928 வரை நீதிமன்றத் தலைவராகவும் பணி செய்தார்…!!!

நாடக எழுத்துப்பணி :

#சிறு வயதிலேயே ஆங்கில, தமிழ் நாடகங்களைப் பார்த்தவர் காலப்போக்கில் தமிழ் நாடகத்தின் இழி நிலையைக் கண்டு அதில் வெறுப்புற்றிருந்தார் 1891 இல் பெல்லாரியிலிருந்து வந்த கிருஷ்ணமாச்சார்லு என்ற ஆந்திர நடிகர் நடித்த நாடகங்கள் இவருக்கு தமிழ் நாடகங்கள் மேல் பற்றினை உண்டு பண்ணின.

#அவரது நாடகக் குழுவில் வழக்கறிஞர்களும், மருத்துவர்களும், பட்டப்படிப்பு முடித்தவர்களும் சேர்ந்திருப்பதைக் கண்ட சம்பந்த முதலியார் தாமும் அது போல ஒரு நாடகக் குழு அமைக்கத் திட்டமிட்டார் சீரழிந்த நிலையில் அவதிப்படும் தமிழ் நாடகத்தை சீர்படுத்திட வேண்டும் என்ற இவரது ஆவலும் இவரை நாடக உலகிற்குள் புகுத்தியது நண்பர்கள் சிலருடன் சென்னை ஜார்ஜ் டவுனில் 1891 ஜூலை 1 ஆம் நாள் “சுகுண விலாச சபை” என்ற நாடகக் குழுவை உருவாக்கினார்…!!!

#தற்பொழுது அந்த சுகுண விலாச சபையில் ஐயா பம்மல் சம்பந்த முதலியார் திருவுருவசிலை அமைந்துள்ளது…!!!

#நாடகம் என்றால் தெருக்கூத்து என்றும் சிற்றூர் மக்கள் மட்டுமே காண்பவர்கள் என்ற நிலையை மாற்றி நகரங்களிலே நல்ல மேடையமைத்து பல வகை நாடகங்களை நடத்திக் காட்டினார் உயர்குடியில் பிறந்தவர்களையும் கற்றவர்களையும், அறிஞர்களையும், சம்பந்தம் தம்முடைய நாடகங்களில் நடிக்கச் செய்தார்.

#இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் சர். சி.பி.ராமஸ்வாமி அய்யர், எஸ்.சத்தியமூர்த்தி, எம்.கந்தசாமி முதலியார் (எம். கே. ராதாவின் தந்தை), சர். ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார், வி.சி.கோபாலரத்தினம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்…!!!

பம்மல் சம்பந்த முதலியார் நாடகக் கலைக்கு தம் 81வது வயது வரை பெரும்பணி ஆற்றினார் கண்பார்வை மங்கிய நிலையிலும் தாம் சொல்லியே பிறரை எழுத வைத்தார்…!!!

விருதுகளும் சிறப்புகளும் :

22வது வயதில் அவருடைய முதல் நாடகம் ‘லீலாவதி-சுலோசனா’ என்ற பெயருடன் அரங்கேறியது மொத்தம் 80 நாடகங்கள் எழுதினார்

1959 இல் சங்கீத நாடக அகாதமி விருது

1916 இல் நாடகப் பேராசிரியர் என்ற விருது பெற்றார்

1963 இல் பத்மபூஷண் என்ற பட்டத்தையும் பெற்றார்

தன் நாடகங்களில் சிலவற்றில் செய்யுள்,கீர்த்தனை முதலியவற்றையும் அறிமுகப்படுத்தினார் தமிழ் நாடகம் மக்களின் பார்வையில் உயர்ந்த மதிப்புக்குரியதாகத் திகழ்வதற்கு முதற்காரணமானார்…!!!

தமிழில் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் :

ஷேக்ஸ்பியரின் Hamlet, As You like it, Macbeth, Cymbeline, Merchant of Venice என்ற நாடகங்களை அவைகளின் சுவையோ நயமோ குறையாமல் ‘அமலாதித்யன்’, ‘நீ விரும்பியபடியே’, ‘மகபதி’, ‘சிம்மளநாதன்’, ‘வணிபுர வானிகன்’ என்ற பெயர்களில் தமிழ் நாடகங்களாக மொழிபெயர்த்தார்…!!!

பம்மல் சம்பந்த முதலியாரின் பல நாடகங்கள் திரைப்படங்களாக்கப்பட்டுள்ளன அவற்றில் சில…!!!

காலவா ரிஷி (1932)
சதி சுலோச்சனா (1934, கதை, வசனம், இயக்கம், நடிப்பு)
மனோகரா (1936, கதை, வசனம், இயக்கம், நடிப்பு)
ரத்னாவளி (1935)
யயாதி (1938)
ராமலிங்க சுவாமிகள் (1939)
சந்திரஹரி (1941)
ஊர்வசி சாகசம் (1940)
தாசிப் பெண் (1943)
சபாபதி (1941)
வேதாள உலகம் (1948)

பம்மல் சம்பந்த முதலியார் இயற்றிய பல நூல்களை தமிழ் நாடு அரசு நாட்டுடமையாக்கியுள்ளது அதன் பட்டியல்…!!!

இந்தியனும்-ஹிட்லரும்
இல்லறமும் துறவறமும்
என் சுயசரிதை
என் தந்தை தாயர்
ஒன்பது குட்டி நாடகங்கள்
ஓர் விருந்து அல்லது சபாபதி நான்காம் பாகம்
கலையோ-காதலோ? அல்லது நட்சத்திரங்களின் காதல்
கள்வர் தலைவன்
காதலர் கண்கள்
காலக் குறிப்புகள்
சபாபதி
சபாபதி முதலியாரும்-பேசும் படமும்
நான் குற்றவாளி
சாதாரண உணவுப் பொருள்களின் குணங்கள்
தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை (முதல் பாகம்)
தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை (இரண்டாம் பாகம்)
தீபாவளி வரிசை
தீயின் சிறு திவலை
நாடகத் தமிழ்
நான் கண்ட நாடகக் கலைஞர்கள்
நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்
பலவகை பூங்கொத்து
மனை ஆட்சி
மனோகரா
மூன்று நகைச்சுவை நாடகங்கள்
யயாதி
வாணீபுர வணிகன்
விடுதிப் புஷ்பங்கள்

அகமுடையார் வழித்தோன்றல் பம்மல் சம்பந்த முதலியார் நினைவு தினமான இன்று அவரை போற்றி வணங்குவோம் இவரை பெற்றதால் எமது அகமுடையார் இனம் பெருமை கொள்கிறது…!!!இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்

போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?