First
#பைந்தமிழ் சித்தர் பா.வே. மாணிக்க நாயக்கரின் (அகமுடையார்) பிறந்த தினம் இன்று!! போற்றி வணங்குகிறோம் 🙏
மறைக்கபட்ட மாமனிதர் #பாகல்பட்டி_ஜமீன்தார் #அகமுடையார் வழித்தோன்றல் பா.வே.மாணிக்க நாயக்கர் இவர் சேலம் மாவட்டம் பாகல் பட்டியில் வேங்கடசாமி நாயக்கருக்கும் முத்தம்மையாருக்கும் 02.02.1871 ஆம் நாள் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.
அகமுடையார் பேரினத்தில் நாயக்கர் பட்டம் பெற்ற இவர் பள்ளியில் படிக்கும் பொழுதே கவிபாடும் ஆற்றல் கொண்டவராக விளங்கினார் சேலம் கல்லூரியில் சேர்ந்து இளங்கலையில் எப்.ஏ பட்டம் பெற்றார் அவருடைய பொறியியல் நுட்ப ஆர்வத்தை அறிந்த கல்லூரி முதல்வர் சென்னை பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு உதவினார்.
அங்கு முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுப் பல பரிசுகளும் தங்க பதக்கமும் பெற்றார் சென்னை அரசாங்கத்தில் நீலகிரி உதவிப் பொறியாளராக 1896 ஆம் ஆண்டு பணியேற்றார்…!!!
செயற்பொறியாளராக 1906 ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்றார் இங்கிலாந்துக்கு 1912 ஆம் ஆண்டு சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார் வலுவாக்கிய கான்கிரீட் பற்றியும் ஆய்வு செய்தார்.
மேலும் ”கால்குலோகிராப்” என்ற கருவியை உருவாக்கி அதை பொறியியல் உலகத்துக்கு அளித்து சாதனை புரிந்தார்.
தயாகம் திரும்பிய பின்னர் 1915 ஆம் ஆண்டு சென்னை பொறியியல் கல்லூரியில் சிவில் இஞ்சினியரிங் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
கல்லூரி மாணவர்களுக்கு பொறியியல் கல்வியைத் திறம்பட அளித்தார் பொதுப்பணித் துறையில் 1919 ஆம் ஆண்டு செயற்பொறியாளராகப் பதவி ஏற்றார் அத்துறையில் கண்காணிப்புப் பொறியாளராகப் பதவி உயர்வு பெற்றவர் பின்னர் 1927 ஆம் ஆண்டு அரசுப்பணியில் இருந்து ஓய்வுப் பெற்றார்.
பொறியியலைத் தொழிலாகக் கொண்டிருந்த போதும் விலங்கியல், வானவியல்,நிலவியல்,மெய்ப் பொருளியல் முதலிய துறைகளிலும் சிறப்புடன் விளங்கினார்.
தமிழ், தெலுங்கு, வடமொழி ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார் மேலும் தையற்கலை, தச்சுக்கலை, ஓவியக்கலை, இசை முதலிய பல கலைகளிலும் பயிற்சி உடையவராகவும் விளங்கியதால் இவரை ஒர் ”பல்கலைக் கழகம்” என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்…!!!
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்