சகோதரர் அம்பலூர் எழில் இராவணன் அவர்களுக்கு பாராட்டுக்களும்,நன்றிகளும்!——-…

Spread the love
0
(0)

First
சகோதரர் அம்பலூர் எழில் இராவணன் அவர்களுக்கு பாராட்டுக்களும்,நன்றிகளும்!
————————————————————–
இதை தனிப்பதிவில் குறிப்பிட்டேயாக வேண்டும்!

அரிதிலும் அரிதாகவே பாராட்டுவது வழக்கம்.
ஏனென்றால் பாராட்டுவது போல் நடந்துகொள்வதில்லை. வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்யவில்லை. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்!

பொருளாதாரத்தை முன்னேற்றினால் மட்டும் போதும் என்ற எண்ணத்திலேயே செயல்படும் அகமுடையார் சமுதாயத்தில் சமுதாய பணி செய்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

அப்படிப்பட்ட விரல் விட்டு எண்ணக்கூடிய அகமுடையார்களில் ஒருவர் தான் சகோதரர் அம்பலூர் எழில் இராவணன்.

பொதுவாக வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்புவோர் குடும்பத்துடனோ ,நண்பர்களோடு சுற்றுவதையோ தான் செய்வார்கள்.

ஆனால் சகோதர் எழில் இராவணன் சிங்கப்பூரில் இருந்து தான்
20 நாள் விடுமுறையில் வந்திருந்த அத்தனை நாட்களையும் அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் பிரமுகர்கள் , தலைவர்கள்,இளைஞர்களை சந்தித்தும் அவர்களுக்கு அகமுடையார் துளுவ வேளாளர் காலண்டர் வழங்கியுள்ளார்

சாதாரண பாமர மக்களுக்கே காலண்டர்கள் பல்வேறு இடங்களில் இருந்து இன்று இலவசமாக கிடைத்துவிடும் நிலையில் இதை ஏன் பிரமாதமாக பேசுகிறீர்கள் என்று நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் பொருளாதாரத்தை மட்டுமே மையமாக வைத்து ஓடுகின்ற இன்றைய நிலையில் சமுதாய உணர்வு மங்கியும் ,வேற்று சாதியினர் அகமுடையார் துளுவ வேளாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்த முனைந்துவரும் இந்த நிலையில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், சமுதாய தலைவர்களை சந்தித்தும் ,இளைஞர்களை சந்திப்பதும் என சமுதாய உணர்வை உயிர்பித்துள்ளார். ஆகவே முன்னர் சொன்னது போல் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சமுதாய பணியை ஆர்வமாக செய்வர்களில் சகோதரர் அம்பலூர் எழில் இராவணன் இணைந்துள்ளார்.

அகமுடையார் ஒற்றுமையின் சார்பில் அவரது பணியை மனதார பாராட்டுவதோடு அவர் தற்போது செய்துவரும் சமுதாய ஒருங்கிணைப்பு பணியை தொடர்ந்து செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றோம்.

அதுமட்டுமல்ல அவரை முன்னுதாரணமாக கொண்டும், அவரது ஆலோசனையை பெற்றும் மற்ற இளைஞர்களும் அவரவர் ஊர்களில் அகமுடையார்-துளுவ வேளாளர்களை ஒருங்கிணைக்க வேண்டும்! ஏனென்றால் ஒற்றுமையே பலம்! ஒற்றுமையடைந்தால் எதையும் சாதிக்கலாம்!

கூடுதல் அறிவிப்பு:
அகமுடையார் ஒற்றுமை வெப்சைட் தளம் புதுப்பிக்கப்பட்டு புதிய அப்ளிகேசன் உருவாகி வருகின்றது.

இந்த அப்ளிகேசனில் அனைத்து அகமுடையார் இயக்க செய்திகள், நிகழ்வுகள், திருமண தகவல், கல்வி வேலைவாய்ப்பு செய்திள், தொழில் முன்னேற்ற செய்திகள் போன்றவற்றை இந்த ஒரே அப்ளிசனில் பார்த்துக்கொள்ளலாம்.

இதில் அகமுடையார் இயக்கத்தின் பேஸ்புக் பக்கம்,ப்ரோபல்,குருப் தகவல்களை இணைத்து வருகின்றோம். அதே போல் சமுதாய செய்திகளை அடிக்கடி வெளியிடும் தனிப்பட்ட நபர்களின் செய்திகளையும் வெளியிட உள்ளோம்.

ஆகவே உங்களுக்கு தெரிந்த இயக்கம், அல்லது தனிநபர்களின் பேஸ்புக் முகவரியை அந்த அப்ளிகேசனில் இணைக்க இந்த கமேண்டில் அவற்றின் லிங்கை அளியுங்கள். சமுதாய செய்திகள் வருகின்றனவா என கவனித்து அவற்றை இணைப்போம்.
குறிப்பு: ஒருமுறைக்கு இருமுறையாக இப்பதிவிலும் பேஸ்புக் லிங் கொடுக்க கேட்டுள்ளோம். கொடுக்க மறந்துவிட்டு பிறகு நமது செய்திகள் வரவில்லையே என்று கேட்டுவிட வேண்டாம்.

பேஸ்புக் மட்டுமல்ல சமுதாயத்தின் சார்பாக நன்றாக செயல்படும் யூடிப் சேனல்,இன்ஸ்டாகிராம் ஐடி, டிவிட்டர் ஐடியையும் குறிப்பிடலாம்.

அம்பலூர் எழில் இராவணன் பேஸ்புக் பக்கத்தை அகமுடையார் ஒற்றுமை வெப்சைட்டிலும் , அப்ளிகேசனிலும் இணைத்துவிட்டோம். அவரது பதிவுகளை பார்க்க விரும்புவோர் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம்.
https://www.agamudayarotrumai.com/t/ambalurezhilraavanan/


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

 

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?