• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

ஜாலியான் வாலாபாக எனும் படுகொலைக்க்கு 150 ஆண்டுகள் முன்னதாகவே ஆங்கிலேய ஏகாதிபத்த…

October 25, 2017 by administrator

ஜாலியான் வாலாபாக எனும் படுகொலைக்க்கு 150 ஆண்டுகள் முன்னதாகவே ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தியத்திற்கு எதிராக போரிட்ட 250க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் ஒரே இடத்தில் தூக்கிலிடப்பட்ட நிகழ்வு நடந்தது நம் தமிழ்நாட்டில்.

ஆம் 1801 ம் வருடம் அக்டோபர் 24ம் தேதி திருப்பத்தூர் மண்ணில் மருதுபாண்டியர்கள் , அவர்களின் வாரிசுகள் போர்வீரர்கள் என 250 க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்டனர்.

இதனை வடநாட்டவர்கள் வசதியாக மறந்து போகலாம் முதல் சுதந்திரப் போர் 1850ல் வடநாட்டில் தான் நடந்தது என கண்மூடித்தனமாய் பொய் பேசலாம்.
ஆனால் தமிழ்நாடு தியாகங்கள் தான் எத்தனை.மற்றவர்கள் மறக்க நினைத்தாலும் மண்ணின் மைந்தர்களாகிய நாம் என்றும் மறக்கக் கூடாது.

மேற்சொன்ன திருப்பத்தூர் படுகொலையை நினைவுபடுத்தும் வகையில் தம்பி மருது பிரசன்னா உள்ளிட்ட நம் இளைஞர்கள் உறவுகள் இணைந்து செயல்படும் “மருது வரலாற்று மீட்பு குழு” அவர்கள் முயற்சியில் “திருப்பத்தூர் படுகொலை” பற்றிய ஓவியப்படம் நேற்று (24 அக்டோபர் 2017) அன்று திருப்பத்தூரில் மருதுபாண்டியர் நினைவிடத்தில் மருதுபாண்டியர்களின் ஏழாம் தலைமுறை வாரிசு அண்ணன் இராமசாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது!

முழுமையான தகவல்கள் அகமுடையார் ஒற்றுமை தளத்தில் இன்று வெளியிடப்படும்!

குறிப்பு:
கடைசி படம் 16 எம்பி அளவிலானது.முழ தரத்திலானது. ப்ளக்ஸ் மற்றும் பிரிண்டிங் பணிகளில் ஓவியத்தை பயன்படுத்த நினைப்பவர்களுக்கு அவர்கள் விரும்பும் தரத்தில் இருக்கும். அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பதினால் எந்த ஒரு பெயரும் இணைக்கப்படாமல் வருவது ஆகவே இயக்க ,கட்சி பேதமின்றி அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும்!






Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளிவந்தது- அகமுடையார் பேரினத்தார் சார்பாக நல்வாழ்த...
மணமேல்குடியில் அகமுடையர் நல சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாட்டு வண்டி எல்கைப்பந...
பழிக்குப்பழி கொலையில் 7 பேர் கைது
செய்தி: பட்டியலினத்தைச் சேர்ந்த ஏழு உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து, 'தேவேந்திரகுல வே...
செய்யாறு திருவோத்தூர் அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் ஆலயம்!! #பத்த...
அகம்படி நன்னன் கல்வெட்டும்-துளுவ வேளாளரும் -------------------------------------...
#வேளாளர் என்பது ஓர் சாதியல்ல.வேளாண்மையில் ஈடுபட்ட அனைவருமே வேளாளர்கள் தான். வரலா...

Filed Under: Uncategorized

Primary Sidebar

Recent Posts

  • மருது சேனை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
  • #கரூர் மாவட்டம், கல்லடை கிராம #அகமுடையார்கள் நடத்தும் திருவிழா
  • விழுப்புரம் மாவட்டம் #திண்டிவனத்தில் தனியார் மண்டபத்தில் #அகமுடையார்_சமுதாய_விழி…
  • #சிம்ம_குறலோன் வேலூரில் சுதந்திர போராட்ட தியாகிகளின் முன்னோடி…. அகமுடையார்…
  • #India_Trending 1801ஜம்புத்தீவுபிரகடனம் எங்களை யாரும் கண்டுக்கொள்ளவில்லையாம்……