First
பரங்கியரே !
உன்னை சிவகங்கை அரண்மனையில் அமர வைத்து பேசுவது ,
உன் மேல் உள்ள பயத்தால் அல்ல
உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள பழக்கத்தால் ,
வந்தவரை உபசரிக்கும் எங்கள் பண்பால்
அதை வைத்து எங்களிடம் அடைக்கலமாக வந்துள்ள ஊமைத்துரையை
சிவந்த மண்ணாம் இந்த சிவகங்கையில் வைத்து கைது செய்யும் உன் எண்ணம் செயல்பட தொடங்கும் முன்பே,
உன் இரத்தம் இந்த மண்ணில் பட்டு இன்னும் சிவப்பாகும்.
காட்டிக் கொடுக்கும் பரம்பரையான படமாத்தூர் உடையனத்தேவர் போல் என்னையும் நினைத்தாயோ,
பெற்ற தாயையும்,
நாங்கள் ஆளும் இந்த மண்ணையும்,
பெற்ற பெருமையையும்,
எங்கள் மரபையும்,
கொற்ற படையையும்,
சுற்றாத்தாரையும் ,
எங்களை நம்பி வந்தோரையும்,
இந் நாட்டு மக்களையும்,
காக்கும் கடமை எங்களுக்கு இருக்கிறது .
தஞ்சம் என்று வந்தவரை எங்கள் தலை கொடுத்தும் காப்பது எங்கள் மரபு !
ஏய் !
ஐரோப்பியக் கூட்டமே ,என்னை நம்பி வந்த என் நண்பனை என் கண் முன்னயே கைது செய்ய நினைக்கும் உனக்கும் இந்த நாட்டுக்கும் என்ன உறவு,
சோப்பு சீப்பு விற்க வந்த வியாபாரி எங்களை ஆள நினைப்பதா,
அந்நியருடன் சேர்ந்து கொண்டு எங்களை மிரட்டி பார்க்கும் படமாத்தூராரே,
இந் நாட்டின் மீது போர் தொடுக்க சென்னையில் இருந்து படை வருமா ,
வரட்டும் வரும் படை
திருமயத்தில் பாதியாகும்,
வாராப்பூரிலே கால் பகுதியாகும்,
காளையார் கோவிலிலே மொத்தமும் காலியாகும்,
மீறி தப்பிக்கும் எவனாவது சிவகங்கை வரட்டும்,
அப்போது இந்த சின்ன மருது யார் என்று தெரியும்,
என்று வீர முழக்கமிட்டு வெள்ளையனையும்,
துரோகி படமாத்தூர் உடையனத் தேவரையும் புறமுதுகிட்டு ஓடச்செய்தும்,
1801 ம் ஆண்டு தென்னிந்திய அரசர்களை ஒன்றிணைத்து
திருச்சியில் நாவலந்தீவு என்னும் ஜம்பு தீவு முதல் போர்ப் பிரகடனம் வெளியிட்டு,
பரங்கியருக்கு எதிராக நேருக்கு நேராக போரிட்டு, அவர்களை புறமிதுகிட்டு,
பல இடங்களில் ஓடச்செய்தும்,
பின்னர் சூழ்ச்சியாலும் துரோகத்தாலும் தோல்வி நிலைக்கு தள்ளப்பட்டு,
காளையார் கோவில் காட்டில் மறைந்து மிகப்பெரிய போருக்கு தயாராகும் போது,
தாங்கள் சரண் அடைய வில்லை என்றால் தாங்கள் கட்டிய காளையார் கோவில் கோபுரத்தை இடிக்கப் போவதாக் ஆங்கிலேயன் அறிவித்ததால் ,
நான் வணங்கும் சிவனின் கோபுரத்தை விட என் உயிர் பெரிதல்ல என்றும், ஆங்கிலேயரிடம் ஆயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதை விட,
தன்னிடம் தற்போதுள்ள சிறிய படையை வைத்து போரிட்டு வீர மரணம் அடைவதே மேல் என்று எண்ணி வீர போரிட்டார்.
மன்னர் சின்ன மருதுவிடம் சிறிய படையே இருந்தாலும் நேரிடையாக பாராட்டு வீரத்தால் சின்னமருதை வீழ்த்த முடியாது என்றும்,
துரோகத்தால் மட்டுமே வீழ்த்த முடியும் என்று எண்ணிய ஆங்கிலேயர்கள்
அவரது காவலாளி துரோகி கரடிகருத்தான் மூலம் காய் நகர்த்தினார்கள்.
அவனும் அவர்கள் பணத்திற்கு ஆசைபட்டு துரோகியாக மாறி சிவகங்கை சிங்கம் மாமன்னர் சின்னமருதுவை காலில் துப்பாக்கியால் சுட்டான் .
ஆகையால் போரில் ஆங்கிலேயரிடம் பிடிபட்டார் வளரி வேந்தன்.
துரோகத்தால் பிடிபட்ட சிவகங்கை சிங்கத்தை
திருப்பத்தூரிலே 1801 அக்டோபர் 24 ல் தூக்கில் போடும் போது அவர் எப்படியும் கடைசி நேரத்தில் தப்பித்து நம்மை கொன்று விடுவார்.
என்று பயந்து பூட்டிய இரும்பு கூண்டுக்குள் பின்புறம் கையை கட்டி தூக்கில் இடும்போது
முகத்தில் துணியை கட்டியவர்களிடம்
என் முகத்தில் துணியை கட்டி மூட வேண்டாம்
நான் சாகும் போது கூட
என் மண்ணை பார்த்து தான் உயிர் நீப்பேன் என்று கூறி கண்ணில் கூட மரணத்தின் பயத்தை காட்டாது .
வீர மரணம் அடைந்த
மாவீரர் சிவகங்கை சிங்கம்
ஆற்காட்டு நாணயத்தை தன் இரண்டு விரலால் வளைக்கும் திறன் கொண்ட மன்னன்
எம் இனத்தின் மணி மகுடம்
மாமன்னர் சின்ன மருது பிறந்த தினம் ஏப்ரல் 20 இன்று
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்