First
மைசூரில் கிடைத்த அகம்படியர் கல்வெட்டு
———————————
கர்நாடக மாநிலம் மைசூர் அருகில் உள்ள தனகிரி
கெளரீஸ்வரா கோவிலின் கிழக்கே அமைந்துள்ள குளத்தில் உள்ள கல்லில் இரண்டு பக்கங்களிலும் எழுதப்பட்ட தமிழ் மற்றும் கிரந்த எழுத்தில் அமைந்த கல்வெட்டு.
ஆதாரம்:
எபிகிராபிகா கர்நாடிகா, பாகம் 7, கல்வெட்டு எண் 51
தமிழ் மொழியில் அமைந்த கல்வெட்டை கர்நாடகத்தில் இருப்போர் கன்னட எழுத்தில் நூலில் வெளியிட்டுள்ளனர். அதன் கீழே ஆங்கில எழுத்திலும் கல்வெட்டு எழுத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த கல்வெட்டு நமக்கு கிடைத்து பல மாதம் ஆகிவிட்டது, ஆனால் எதற்கும் அசையாத இச்சமூகத்தை சேர்ந்தவர்களுக்காக இக்கல்வெட்டு செய்தியை தொகுத்து சொல்ல விரும்பவில்லை. இருப்பினும் சமூகத்திலும் வரலாற்றிலும் ஆர்வம் கொண்ட ஒரு சிலருக்காக கல்வெட்டின் வரிகளையும் ஆங்கில மொழிபெயர்ப்பு பக்கங்களையும் கொடுத்துள்ளோம். பயன்படுத்திக்கொள்ளவும். கல்வெட்டை விளக்க விரும்புவர்கள் கமேண்டில் தெரிவிக்கலாம்.
நன்றி:
இக்கல்வெட்டு செய்தியை நம் ஆய்வுக்கு அனுப்பிய அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு நன்றி!
தெரிந்துகொள்வதற்கு இது போல் நிறைய கல்வெட்டுக்கள் வரலாற்று செய்திகள் உண்டு. தினமும் 12 முதல் 14 மணி நேரம் அகமுடையார் வரலாற்று தேடலிலேயே நேரம் செலவழிக்கின்றோம். ஆனால் இச்சமூகம் வரலாற்றின் மீது எந்த அக்கறையும் இல்லாது இருக்கின்றது. சரி நாம் மட்டும் எதற்கு மெனக்கட வேண்டும்.
நான் மேற்சொன்ன ஒரு சிலருக்காகவும் , கல்வெட்டு செய்தியை அனுப்பிய இவருக்காகவும் கல்வெட்டில் உள்ள செய்திகள் மற்றொரு நாளில் வெளியிடப்படும்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்