First
அகம்படியர் புதிய கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு
——————————
இரு நாட்கள் முன்பு அகமுடையார் அரண் ஒருங்கிணைப்பாளர் திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்கள்
புதுக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் , கிருஷ்ணகிரியில் கிடைத்த கல்வெட்டு செய்தியை நமது ஆய்வுக்காக அனுப்பி வைத்தார்கள் . அதற்காக அவருக்கு நம்மது நன்றிகள்!
இக்கல்வெட்டு செய்திகளை ஆராய்ந்ததில்
சோழர்கள் அகமுடையார்கள் என்பதை மேலும் உறுதி செய்கின்ற ” அகம்படியாரில் வளத்தார்” என்கின்ற கல்வெட்டு செய்தியும்
பராந்தக சோழர் காலத்து கல்வெட்டில்
அரசனின் உறவினான
” பெருக்கோயிற்றமன் நிலைக்கோட்டை சடையார்” குதிரை வீரனை குத்தி மாண்டதற்காக எழுப்பட்ட நீத்தோர் நடுகல் செய்தி குறிக்கப்படுகின்றது.
மேலும் கிருஷ்ணகிரி, அத்திமுகத்து அழகிய சோழீஸ்வரம் கோவிலிலில்
அகம்படியாரில் தந்திரிபாலன் பற்றிய புதிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் மைசூர் பகுதியில் இதே தந்திரபாலன் அகம்படியாரின் 10க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளது,இங்கு குறிப்பிடத்தக்கது.
அதே போல் ஏற்கனவே நாம் பார்த்த தண்டநாயகன் சாமந்தன் மகனாகிய அகம்படி முதலிகள் மாராண்டான் பற்றிய கல்வெட்டு செய்தியின் முழுவரிகளும் கிடைத்துள்ளது. ஏற்கனவே கல்வெட்டு ஆண்டறிக்கையில் கல்வெட்டு குறிப்பு மட்டும் கண்டோம். இதில் கல்வெட்டு வரிகள் கிடைத்துள்ளது.
விரைவில் நமது அகமுடையார் ஒற்றுமை யூடிப் சேனலில் இக்கல்வெட்டுக்கள் ஒவ்வொன்றாக காணொளியாக வெளியிடப்படும்.
குறிப்பு:
கர்நாடக கல்வெட்டுக்களில் காணப்படும் அகம்படியாரில் பெரியுடையானானதந்திரிபாலன் கிரிஷ்ணகிரி அத்திமுகம் பகுதியில் கிடைத்த கல்வெட்டு குறித்து இருவேறு கல்வெட்டு ஆய்வாளர்கள் இரு வேறு
வகையாக படித்துள்ளார்கள். அவர்கள் ஏற்கனவே கர்நாடாகாவில் கண்டெடுக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களை இக்கல்வெட்டு வரியுடன் ஒப்பீடு செய்திருந்தால் அவர்கள் அதை சரியாக படித்திருக்க முடியும். இருப்பினும் கிருஷ்ணகிரி கல்வெட்டின் மூலப்படி அல்லது தெளிவான புகைப்படம் கிடைத்தால் இக்குறைகளை சரிசெய்ய முடியும்.
இதே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மல்லிகார்ஜுன துர்க்கம் பகுதியில் கிடைத்த கல்வெட்டு முழுவரிகள் பிழையாக வாசிக்கபப்ட்டுளன என்று அறிய முடிகின்றது. இக்கல்கல்வெட்டை இரு வருடங்கள் முன்பு வாசித்திருக்கும் இவர்கள் இதை எழுத்துப்பிழைகளுடன் வாசித்திருப்பதை அறிய முடிகின்றது. பல காலம் நடந்து செல்லும் பாறையாகவும், மழை வெயில் போன்றவற்றின் தாக்க்த்தால் இக்கல்வெட்டு பெரிதும் சிதைவடைந்துள்ளதால் கல்வெட்டை வாசிப்பதில் பிழைகள் ஏற்பட்டிருப்பதை உணர முடிகின்றது.
ஆனால் மத்திய அரசு கல்வெட்டு ஆண்டறிக்கை பல காலம் முன்பே இக்கல்வெட்டை படியெடுத்திருப்பதால் அந்த கல்வெட்டின் வரிகளையோ அல்லது அப்போது எடுக்கபப்ட்ட கல்வெட்டின் புகைப்படத்தையோ நாம் பெற்றால் சரியான தெளிவு கிடைக்கும்.
அகமுடையார்கள் கல்வெட்டுக்களில் மிகச்சிறப்பான இடத்தை பெற்றிருந்தாலும் வரலாற்று மீதான ஆர்வமும் சரி ,ஆய்வாளர்களுக்கு உதவுவதிலும் பெரும் தொய்வு உள்ளதை எப்போதும் போல இப்போதும் அகமுடையார்களுக்கு நினைவூட்ட வேண்டியுள்ளது.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்