அகம்படியர்கள் எழுவித்த விநாயகர்கள் —————————— இன்று விநாயகர்…

Spread the love

First
அகம்படியர்கள் எழுவித்த விநாயகர்கள்
——————————
இன்று விநாயகர் சதுர்த்தி திருநாள்.ஆகவே இந்த விழா நாளில் அகமுடையார்கள் முன்னர் எழுவித்த விநாயகர் பற்றி காண்போம்.

செங்கற்பட்டு உத்திரமேரூர் வழியாக வந்தவாசி செல்லும் சாலையில் இன்று மானம்பதி என்று வழங்கப்படும் என்ற ஊரில் கிடைத்த செய்தியின் மூலம் அகம்படி இனத்தவரான “உடைய நாயன்” என்பவர் பெயரால் “உடைய பிள்ளையார்”
எழுப்ப்பட்டு சன்னதியும் அமைக்கப்பட்ட செய்தி காணப்படுகின்றது. இச்சன்னதியும் இறைவனும் தற்போது மஹா கணபதி என்றழைக்கப்படுகிறது..

சன்னதி மற்றும் சிலையை இப்பதிவின் இணைப்புகள் 1,2,3 காணலாம்.

மூவரைவென்றான் குடவரை விநாயகர் சிற்பம்
————————————-
திருவில்லிப்புத்தூர் நெடுஞ்சாலையில் அழகாபுரிக்கு அருகில் மேற்கு நோக்கிப் பிரியும் பாதையில் ஏறத்தாழ நான்கு கிலோமீட்டர் பயணித்தால் மூவரைவென்றானை அடையலாம். ஊரின் புறத்தே உள்ள குன்றின் நடுப்பகுதியில் கிழக்கு நோக்கிய குடைவரையொன்றும் பிற்காலத் திருப்பணிகளாய் அம்மன் திருமுன், பெருமண்டபம், மடைப்பள்ளி இவையும் உள்ளன

இந்த குடவரையின் நந்திமண்டபத்தின் துணுக்கு கல்வெட்டு செய்தியில்
அகம்படியாகிய தில்லை நாயகன் பன்மன்” எனும் அகம்படி இனத்தவர் குடவரையில் உள்ள பிள்ளையார் சிற்பத்தை எழுந்தருள்வித்த செய்தி காணப்படுகின்றது. (பார்க்க படங்கள் 4,5,6)

அகம்படி விநாயக பிள்ளையார்
———————–
சோழர் காலத்திய (கி.பி 1219) கல்வெட்டு செய்தியின் மூலம் கும்பகோணம் அருகில் உள்ள திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் கோவிலில்
சன்னதியை உருவாக்கி “அகம்படி விநாயக பிள்ளையார்” நிறுவினர். மேலும்
“அகம்படி விநாயக பிள்ளையார்” என்ற பெயரில் திருமுற்றம் (பிரகாரம்), திருநந்தனவனத்தையும் கோவிலுக்கு வழங்கியுள்ளனர். மேலும் அக்கோவிலில் பூசை நிகழ்த்தும் மன்றமுடையான் நெற்றிக்கண் பட்டன் குடியிருப்பதற்கு நிலம் வழங்கினர். முன்னதாக இந்த கொடை வழங்குவதற்கு முன்பதாக தேவைப்பட்ட 100 குழி நிலத்திற்கு 4000 காசும், தென்னை மரம் 8க்கு ஆயிரம் காசும் விலையாக கொடுத்து வாங்கி அதையே பின்னர் தானமாக வழங்கியுள்ளனர்.

ஆதாரம்:
“உடையார் திருமாளிகையில் உடையபிள்ளையாரை ஏறியருளப் பண்ணிநார்(பண்ணினார்) தம்பிராநார்(தம்பிரானார்) அகம்படி முதலிகளில் உடைய நாயன் உ. ”

ஆதாரம்: மத்திய அரசின் கல்வெட்டு ஆண்டறிக்கை ,எண் 380 வருடம் 1923
இக்கோவிலின் படங்கள் உதவி: அகமுடையார் அரண் திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்கள்

அகம்படி விநாயக பிள்ளையார்
தஞ்சாவூர் பாபநாசம் கல்வெட்டுக்கள் ,கல்வெட்டு எண் 36/1995
தமிழக அரசு தொல்லியல் துறை வெளியீடு

அகம்படியாகிய தில்லை நாயகன் பன்மன்
ஆதாரம்: A Social Histoy of Muvaraivenran,பக்கம் 36 M. Phil. Dissertation, Submitted to Kamaraj University, Madurai
மற்றும்
வரலாறு இணையதளம்
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=943

குறிப்பு:

இன்னும் எத்தனையோ சிலைகள் அகம்படிய அரசர்கள் (சோழர்கள்,வாணாதிராயர்கள், மருதுபாண்டியர்கள்
) போன்ற பலராலும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றிய தகவல்களை திரட்டி வருகின்றோம். தற்போது அகம்படி சாதியை நேரடியாக குறிப்பிட்டு சிலைகள் எழுப்பிய செய்திகளையும் சிலைகளை மட்டுமே இங்கு பகிர்ந்துகொண்டுள்ளோம்.

எவ்வளவு இணையத்தில் தேடியும்
திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் க்கோவிலில் எழுந்தருள்வித்த அகம்படி விநாயக பிள்ளையார் உருவப்படம் காணக்கிடைக்கவில்லை. இருப்பவர்கள் பகிரிந்துகொள்ள வேண்டுகிறோம்.
படம் கிடைத்த பிறகு இங்கு கிடைத்த கல்வெட்டு செய்தி குறித்து விரிவாக அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் விரிவாக பேசுவோம்.

இன்று முற்றிலும் ஆரியமாக்கப்பட்ட விநாயகர் வழிபாட்டை நாம் ஏற்கவில்லை என்றாலும் முன்னோர்கள் செய்வித்த பணியை நினைவுகூர வேண்டியதை நம் கடமையாக உணர்கின்றோம். அதை நிறுத்தியே இச்செய்தியை இங்கு பகிர்ந்துக்கொண்டோம்.







இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo