• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

பாண்டிய நாட்டில் சோழர் குடியான அகமுடையார்கள்———————————–…

December 7, 2017 by administrator

பாண்டிய நாட்டில் சோழர் குடியான அகமுடையார்கள்
———————————————-
கமுதி அருகில் வீரசோழன் என்ற ஊர் உள்ளது. இங்கு சோழர்களின் அரண்மனை இருந்துள்ளது சோழர்கள் பாண்டிய நாட்டை வென்று சோழ பாண்டியர் என்ற பெயரில் ஆண்டு வந்தனர். .பாண்டிய நாட்டை சில காலம் சோழர்கள் ஆண்ட போது இவ்வூரில் சோழர்களும் அவர்குடியினரும் அரண்மனை அமைத்து தங்கியிருந்துள்ளனர்.
நூல்: விருதுநகர் மாவட்ட வரலாறு பக்கம் 119-தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு .பார்க்க : படம் 1

பாண்டியர்களை ஒடுக்க சோழர்களால் அனுப்பபட்ட வாணாதிராயர் வழிவந்த அகமுடையார்கள் இன்று இராமநாதபுரம்,சிவகங்கை,மானமதுரை போன்ற இடங்களில் நிலைகொண்டுள்ளனர்.

அவ்வாறு வீரசோழன் (வீரசோழம்) என்றழைக்கப்படும் ஊரில் அன்று முதல் இன்று வரை சோழ அரசின் குடியினராக வந்தவர்கள் அகமுடையார்கள்.
இன்றும் இங்குள்ளவர்களில் முஸ்லீம்களை அடுத்து பெரும்பான்மையானோர் அகமுடையார்களே! என்னுடைய சிறுவயதில் அவ்வுருக்கு சென்றுள்ளேன் ஊர் முழுக்க எனது உறவினர்கள் இருந்தார்கள்.இதுமட்டுமல்ல இவ்வூரைச் சுற்றியுள்ள அனைத்து ஊர்களும் அகமுடையார்களுடையதே!அகமுடையார்களே சோழர்கள் என்பதற்கான இது போல் எண்ணற்ற களச்சான்றுகள் உண்டு! ஆனால் எதையும் நம் ஆட்கள் தேடவும் இல்லை பாதுகாக்கவும் இல்லை.
இதே போல் மதுரை அருகில் உள்ளது சோழவந்தான் (சோழன் வந்தான்) இவ்வூரிலும் சோழர் தம் படை குடியுடன் தங்கியிருந்தான். இன்றும் இச்சோழவந்தான் ஊரில் பெரும்பான்மையினராகவும் ஆளும் வரக்கத்தினராகவும் அகமுடையார்களே உள்ளனர். பாண்டிய நாட்டில் சோழர் அடையாளத்தோடு எந்த ஊர் இருந்தாலும் அங்கு அகமுடையார்களே பெரும்பான்மையினர் ஆளும் மரபினராக இன்றும் உள்ளனர் .

பாண்டிய நாட்டு விருதுநகர் அருகே) சோழபுரத்தில் (அகப்பரிவாரத்தான் (அகம்படியர்) – ஆதாரம் விருதுநகர் மாவட்ட கல்வெட்டுக்கள் தொகுதி 2- கல்வெட்டு எண்: 324/2005 -தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு .பார்க்க :: படம் 2,3

ஆராய்வதற்கு நிறைய இருக்கு . தொடர்ந்து வரும்!




Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

சோழ கங்க தேவனின் அகம்படி படை பற்று--------------------------------------நமது ப...
1939 ஆம் ஆண்டு, கோவை, "சூலூர் அகம்படியர் வாலிபர் சங்கத்தாரால்" வெளியிடப்பட்ட, ...
இராமய்யன் பல்லவராயர் எனும் அகம்படிய வெள்ளாளர் பற்றி வலங்கை சரித்திரம் தரும் செய...
ஆசிரியம் கல்வெட்டு 2- ஞானசம்பந்த அகமுடி ------------------------------------செ...
சோழர் குடியினரான அகம்படியார்கள் காவல்பணி மறுத்த கல்வெட்டு செய்தி- துளுவ வேளாள...
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முகமதியர் ஆக்கிரமிப்பை அகற்றிய மருதுபாண்டியர்--...
தென் மாவட்டம் ,வடமாவட்ட அகமுடையார் இருவரும் ஒருவரே மற்றொருமொரு கல்வெட்டு சான்று ...

Filed Under: வரலாறு

Primary Sidebar

Recent Posts

  • மருது சேனை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
  • #கரூர் மாவட்டம், கல்லடை கிராம #அகமுடையார்கள் நடத்தும் திருவிழா
  • விழுப்புரம் மாவட்டம் #திண்டிவனத்தில் தனியார் மண்டபத்தில் #அகமுடையார்_சமுதாய_விழி…
  • #சிம்ம_குறலோன் வேலூரில் சுதந்திர போராட்ட தியாகிகளின் முன்னோடி…. அகமுடையார்…
  • #India_Trending 1801ஜம்புத்தீவுபிரகடனம் எங்களை யாரும் கண்டுக்கொள்ளவில்லையாம்……