கி.பி. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அகமுடையார் நடுகல் —————————–…

Spread the love

கி.பி. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அகமுடையார் நடுகல்
————————————————–
புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டைக்கு அருகே துணி துவைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த கல் ஒன்றை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டறிந்தனர். இதனை புதுவை பல்கலைக்கழகப் பேராசிரியர் க. ராஜன், இந்திய தொல்லியல் துறை தெற்கு வட்டார இயக்குநர் து. தயாளன் உள்ளிட்டோர் அதைப் பார்வையிட்டனர்.

அதன் பின் அவர்கள் கண்டறிந்ததில் இந்த நடுகல்லில் கி.பி. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி (தமிழி) எழுத்துகள் இடம் பெற்றுள்ளன என்றும் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான தமிழ் பிராமி நடுகல் இதுவென்று கண்டறிந்தனர்.

இந்த நடுகல்லை பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சு. ராசவேலு, ந. அதியமான், வி. செல்வகுமார், ம. பவானி, முன்னாள் பேராசிரியர் எ. சுப்பராயலு, கல்வெட்டு ஆய்வாளர் வெ. வேதாசலம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து ராசவேலு தெரிவித்தது: தலா 2 அடி அகலம், நீளமுடைய இந்த நடுகல் முக்கோண வடிவில் உடைக்கப்பட்டு, எழுதப்பட்டுள்ளது.

இதில்

கோவென் கட்டிற் நெதிர
ணறு பொன்கொங்கர் விண்ணகோன்
ஆ எறிஇத்து ஏவ அதவ்வனரு
அங்கபடைத தாணையன் கணங்
குமரன் கல்
என 5 வரிகள் எழுதப்பட்டுள்ளன.

நடுகல் விளக்கம்
கோவன் கட்டிக்கு அடுத்தாக அரசுப் பதவி ஏற்ற நறு பொன்கொங்கர் விண்ணகோன் என்பவன் ஆநிரையைக் (கால்நடைகளைக் ) கவர அதனை அங்கப்படை தலைவனான( தாணையனான) கணன் குமரன் தடுக்க மேற்கொண்டு வீரமரணமடைந்துள்ளான். அவ்வீரனின் தியாகத்தைப் போற்றியே இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது தெரிகின்றது!

அகம்படி சாதியினரே வரலாற்று நெடுகிலும் அங்கப்படையினராக பல்வேறு கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலிலும் காட்டப்பட்டுள்ளனர் என்பதும் இன்றும் அகமுடையார்களைப் பற்றி பயின்று வரும் கணம் என்ற சொல்லுடன் (கணங்குமரன்) என்று இந்நடுகல் வீரன் குறிப்பிடப்படுவதும் இந்த நடுகல்லில் பேசபப்டும் வீரன் இன்றைய அகமுடையார் இனத்தைச் சேர்ந்தவன் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது!

விரிவான செய்திகள் அகமுடையார் ஒற்றுமை தளத்தில் விரைவில்.



Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

அகமுடையார் கல்வெட்டு-பிள்ளையார் அகப்பரிவாரத்து உலகளந்தான் அழகப்பெருமாளான அவணிநாராயணதேவன
Palapishekam for Maruthu pandiyar Statue Teppakulam Madurai.Maruthu Pandiyar on ...
#மாமன்னர்_மருதுபாண்டியர்கள் வாரிசுதாரர்கள் குழு தலைவர் ஐயா #ராமசாமி_சேர்வைஅவர்க...
ரூம் கிடையாது என விரட்டிய ஹோட்டல் முதலாளியை தன் பாணியில் மிரட்டிய சாண்டோ சின்னப்...
அகம்படியர் போர்குடி என்பதற்கு எண்ணற்ற கல்வெட்டுச் சான்றுகள் பதிவிட்டாயிற்று.இன்ன...
இந்த ஒரு அறிவிப்புக்காக தான் பல லட்ச அகமுடையார் இளைஞர்கள் காத்திருந்தோம் தலைவா ம...
புதுச்சேரி அகமுடையார்-துளுவ வெள்ளாள மாணவச் செல்வங்களுக்கு தங்கக்காசு பரிசளிப்பு விழா-ஏ
மதுரைப் புத்தகத் திருவிழாவும் அகமுடையார் பற்றிய புத்தகங்களும் Agamudayar Books in Madurai Book...
அகம்படியர் என்பதற்கு பாதுகாவலர்,இராணுவ வீரர் என்பதே பொருள்-ஏராளமான வரலாற்று ஆதாரங்கள்
இன்றைய தினகரனில் வெளிவந்த செய்தி: அதிமுக உறுப்பினர் கார்டுகளை எரித்து அகமுடையார்...
பாண்டியனுக்கும் முன்னோன் எம் பாட்டன் மாவெலி ------------------------------------...
சேர்வாரன்(செறவாரன்) நாடு!சேரர் அல்லது அவர்கள் வழியினரை குறித்து நிற்கும் நாடாக...
சில நேரம் பதிவுகளில் படங்கள் சரிவர தெரியாமல் இருக்கலாம். அதுபோன்ற சந்தர்பங்களில் மேலே உள்ள Source பட்டனை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் நாங்கள் செய்த பதிவிற்கு செல்லும் படங்களை சரியாக பார்க்கலாம்.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar
Logo