First
👉களத்தில் அகமுடையார் வழக்கறிஞர்கள் 🙏
#JusticeForSrimathi
#கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகில் உள்ள கணியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்த பிளஸ் டூ மாணவி #ஸ்ரீமதி என்ற அகமுடையார் சமுதாய மாணவி நேற்று அதிகாலை மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று பள்ளி நிர்வாகம் சொல்கின்றது. இதை ஆய்வு செய்வதற்காக வழக்கறிஞர் #தனஞ்செயன் (சென்னை உயர் நீதிமன்றம்) மற்றும் வழக்கறிஞர் #கோமளவள்ளி அவர்களும் இன்று கள்ளக்குறிச்சி சென்று காவல்துறை அதிகாரிகளை சந்தித்து நடந்ததை தீர விசாரித்து ஆய்வு செய்தனர். அதில் நடந்தது தற்கொலை அல்ல கொலை என்று ஒரு பக்கம் உறுதியாகி உள்ளது. அதிகாரிகளை சந்தித்து விட்டு அந்த மாணவியின் பெற்றோர்களை சந்திக்கும் போது இந்த மாணவியின் தந்தை கூறியதாவது பிரேத பரிசோதனைக்கு முன் நாங்கள் என் மகளை பார்க்கும் பொழுது அவளது மூக்கின் ஒரு பகுதியில் கீரலும் மார்பக பகுதியில் சிறு சிறு கீறல்களும் இருந்ததை பார்க்க முடிந்தது எனவே இது தற்கொலை அல்ல என்று அந்த மாணவியின் தந்தை கூறியுள்ளார். எனவே நானும் என் உடன் இருந்த வழக்கறிஞரும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து நடந்ததை எடுத்துக் கூறி எங்களுக்கு மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் இதற்காக நாங்கள் உயர்நீதிமன்றத்தை அணுகவும் தயாராக உள்ளோம். எனவே மறு பிரேத பரிசோதனைக்கு பிறகு பிரேதத்தை நாங்கள் கையில் வாங்குவோம் என்பதை தெளிவாக மாவட்ட ஆட்சியருக்கு எடுத்துக் கூறி சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பள்ளியில் இதுபோல பல கொலைகள் நடந்ததை எடுத்துக் கூறி பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் பள்ளி நிர்வாகி ரவிசங்கர் அவர்களை முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளோம். வழக்கறிஞர் கோமளவல்லி போல சமுதாய உணர்வோடு அனைத்து வழக்கறிஞர்களும் முன்வந்து கைகோர்க்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
வழக்கறிஞர் ப.ப.கி.தனஞ்செயன்
சென்னை உயர்நீதிமன்றம்….
#JusticeForSrimathi
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்