First
எல்லாச் சாலைகளும் திருப்பத்தூர் நோக்கி! வேளிர் வழிவந்த தொல் பழம் தமிழ் அரச மரபினரான அகமுடையார்கள் தங்கள் முந்தைய பெருமையை இழந்து,சேரக்கூடாத இடம் சேர்ந்து தாழ்வுற்று இருந்த நேரத்தில் வாராது வந்த மாமணியாய் மீண்டும் ஒருமுறை அகமுடையார்களை தங்கள் பழம் பெருமையை மீட்டெடுத்து மானத்தோடு வாழ வழி செய்த எங்கள் அகமுடையார் எழுச்சி நாயகர்கள் மாமன்னர் மருதுபாண்டியர்களின் தியாகத்தை ,நினைவுகூரும் விதமாய் நாளை திருப்பத்தூரில் நடைபெறும் அரசு விழாவிற்கு அனைத்து அகமுடையார் சொந்தங்களையும் அழைக்கின்றோம்.நாளை திருப்பத்தூரில் சந்திப்போம் எனதருமை அகமுடையார் உறவுகளே! மருதுபாண்டியரே நீங்கள் வாராது இருந்திருந்தால் நாங்கள் இன்று நாங்கள் எங்கள் இனத்திலேயே நீடித்திருபோமா என்று கூடத் தெரியாது
வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் அகமுடையார் இனம் தன்னை
வாழ்விக்க வந்த மருதுபாண்டியர் நீ வாழ்க, வாழ்க!
அடிமை வாழ்வ கன்றிந் நாட்டார் விடுதலை யார்ந்து, செல்வம்
குடிமையி லுயர்வு, கல்வி ஞானமும் கூடி யோங்கிப்
படிமிசைத் தலைமை யெய்தும் படிக்கொரு சூழ்ச்சி செய்தாய்!
முடிவிலாக் கீர்த்தி பெற்றாய, புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்!
“மருது பாண்டியரே “ஒரு நாள் உங்களை நாங்கள் மறந்திருப்போம்,ஆம் அன்று நாங்கள் இறந்திருப்போம்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்