First
கொங்கு வெள்ளாட்டின் சேட்டையும் ,உண்மைகளும்
——————————————-
தனது பெயருக்கு முன்னால் சோழன் என்ற பெயரை போட்டு போலி பெருமையை அடையத்துடிக்கும்
கொங்கு பகுதியை சேர்ந்த வெள்ளாடு ஒன்று
வட மாவட்ட அகமுடையார்கள் இருக்கும் பகுதிகளுக்கு சென்று தென் மாவட்ட அகமுடையார்கள் எங்களை விட குறைந்தவர்கள் என்றும் அவர்களுடனா நீங்கள் (வட மாவட்ட அகமுடையார்கள்) தொடர்பில் உள்ளீர்கள் என்று கூறி தென் மாவட்ட அகமுடையாரையும் ,வட மாவட்ட அகமுடையாரையும் பிரிவு செய்ய குழப்ப வேலை செய்ததாகவும்
அதை கேட்ட வடமாவட்ட அகமுடையார்கள் ,நாங்களும் தென் மாவட்ட அகமுடையாரும் ஒன்று தான் . எங்களுக்கு சம்பந்தமில்லாத நீ வந்து எங்களுக்கு சொல்லித்தர தேவையில்லை என்று விரட்டினார்களாம்.
நீங்களும் (தென் மாவட்ட அகம்படியரும்) , கொங்கு வேளாளரும் பிரிவில் காராளர் (வேளாளர்) தானே! நாங்கள் (கொங்கு வேளாளர்) ,உங்களுக்கு (தென் மாவட்ட அகம்படியருக்கு) பெண் கொடுக்கிறோம் என்று கொங்கு வேளாள தலைவர்கள் கூறினார்கள் என்று கணக்கன் கூட்டத்தார் பட்டயம் கூறுகிறது .
ஆனால் தென் மாவட்ட அகமுடையார்களோ இல்லை! இல்லை ! நாங்கள் சொந்த ஊருக்கு சென்று விடுவோம் உங்களோடு(கொங்கு வேளாளருடன்) திருமணம் செய்தால் எங்களுடைய மரியாதை பறி போய் விடும் ” என்று கூறி கொங்கு வேளாளரிடம் பெண் எடுக்க மறுத்து விட்டார்கள் என்ற செய்தியும் மேற்கூறிய பட்டயத்தில் பதிவாகியுள்ளது.
பார்க்க: இணைப்பு 1 கொங்கு சமுதாய ஆவணங்கள் பக்கம் 239,240
இதே கருத்தை பின்பற்றி கொங்கு சமுதாய ஆவணங்கள் என்ற நூலில் கொங்கு வெள்ளாள கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த புலவர் இராசு என்பவர் கூறியிருப்பார்.
இதே செய்தியை இவரது வேறு ஓர் நூலான( இரு தினம் முன்பு மதுரை புத்தக கண்காட்சியில் வாங்கியது)
“கொங்கு நாட்டு பட்டக்கார்களும் பாளையக்காரர்களும்” என்ற நூலின் 52ம் பக்கத்திலும் இதே செய்தியை கூறியிருப்பார்.
பார்க்க : இணைப்பு 2,3
ஆனால் என்ன, தென் மாவட்ட அகம்படியருக்கு காணி உரிமை (நில உரிமை) , கோவிலில் பரிவட்டம்,பாக்கு வெத்தலை, பச்சவடம் போன்ற உரிமைகளை பல்லவராயர் பெருந்தன்மையாக கொடுத்தார் என்று எழுதியுள்ளார்.
ஆனால் உண்மை என்னவென்றால் கொடுமணலில் அகம்படியர் காணி பெற்றதும் , கோவில் முதல் உரிமைகளை பெற்றதும் வீரத்தினால் ஆகும்.
பழைய கோட்டை பட்டக்காரான நல்லான் பிள்ளை மன்றாடியாருக்கு சொந்தமான அதிகாரத்தை (ஆட்சி உரிமையை பாப்பா கவுண்டர் கைப்பற்றி கொண்டதையும் அப்போது அகம்படியர்கள் படை திரட்டி , போரில் ஈடுபட்டு ஆட்சி உரிமையை மீண்டும்
நல்லான் பிள்ளை மன்றாடியாருக்கு வழங்கியதாலேயே கொடுமணலில் காணி உரிமையும் , கோவில் முதல் உரிமைகளும் வழங்கப்பட்டது. இதனை கணக்கன் கூட்டத்தார் பட்டய தகவல்கள் விரிவாக பேசுகின்றன. இந்த பட்டயத்தை ஆராய்ந்து இப்பட்டயம் பற்றிய குறிப்பில் எழுதியவரும் இதே புலவர் இராசு என்பவர் தான்..
மேற்கூறிய வெள்ளாடு தான் வட தமிழ்நாட்டிற்கு சென்று வடமாவட்டத்தில் இருக்கும் அகமுடையார்கள் வேளாளர் என்றும் கங்கை குலத்தவர் என்றும் தென் மாவட்ட அகம்படியர் வேறு என்றும் சொல்லி குழப்பம் விளைவிக்க முனைகின்றது.
இதே கொங்கு பட்டயம் தான் தென் மாவட்டத்தில் இருந்து கொங்கு பகுதியில் குடியேறிய அகம்படியர்களை வேளாளர் என்கிறது.
அதுமட்டுமல்ல தென் மாவட்ட அகம்படியர்கள் பலர் தென்ன கங்க தேவன் என்ற பெயர்களோடு கங்க பகுதிகளை ஆட்சி நிர்வாகம் செய்தவர்களாகவும் ,கங்க தொடர்பு கொண்டவர்களாகவும் காட்டப்பட்டுள்ளனர்.
இவ்வளவு ஏன் கொங்கு முதலியார் பாளையத்தில் உள்ள கோவில் கல்வெட்டு ஓன்றில் “கெங்கை குலத்தார்மாகிய அகம்படிய ஜாதியார்கள் தேவனமார்கள் ” கோவிலின் மகாமண்டபத்தை கட்டிய செய்தி பதிவாகியுள்ளது.
பார்க்க இணைப்பு 6
ஆகவே தென் மாவட்டத்தை சேர்ந்த அகம்படியர்கள் கங்கை குலத்தாராக தங்களை அழைத்துக்கொண்டனர் என்றும் தெரிகின்றனர்.
ஆகவே வடமாவட்டத்தை போலவே தென் மாவட்ட அகமுடையாரும் வேளாளர் அடையாளத்துள்ளும் இருந்துள்ளனர் என்று தெரிகிறது.
இது பற்றி மிகவும் அதிகமான ஆதாரங்களை திரட்டி வைத்துள்ளோம். விரைவில் இது பற்றிய விரிவான காணொளி வெளியிடப்படும்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்