First
கல்வெட்டில் அகமுடையார் – 4
“மாமன்னர் மருதுபாண்டியர்கள்” கல்வெட்டு.
———————————————-
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் (ஐயனார்) கோயில் முன்புறமுள்ள ஒரு கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.
சிங்கம்பிடாரி என அழைக்கப்பட்ட இவ்வூர் மருவி சிங்கம்புணரி என பெயர் பெறலாயிற்று. இங்கு சஞ்சீவி மலை ஒன்றும் உள்ளது. இவ்வூரில் சேவுகப்பெருமாள் கோயில் மிக முக்கியமானதாகும். அம்மன் பிடாரி அம்மன் என அழைக்கப்படுகிறது.
கேரள சிங்க வளநாட்டு வீரபாண்டிய நல்லூர் (முதலாம் ராசராசன் காலம் முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை இந்த பகுதி கேரள சிங்க வளநாடு என்றழைக்கப்பட்டுள்ளது என்பது இந்த கல்வெட்டின் மூலம் உறுதியாகிறது).
சிங்கம்புணரியில் சேவுகப்பெருமாள் (ஐயனார்) கோவிலுக்கு வருவோரின் பயன்பாட்டிற்கு சன்னதி முன்பு தடாகம் ஏற்படுத்தியும், மடாலயம் ஏற்படுத்தியும் சந்திரனும், சூரியனும் உள்ளவரை தர்மம் நடைபெற்று வர, சேவுகன் அம்பலகாரன் என்பவனுக்கு சகாத்தம் 1722 ரௌத்ரி வருடம், தை மாதம் 13ம் தேதி, (ஆங்கில வருடம் 27 சனவரி 1800)
“மருதுபாண்டிய மன்னர்கள்” நிலக் கொடை மானியம் வழங்கியுள்ளனர்.
ARE No -70/1928-29
Registers a gift of land by Marudu-Pandya, the agent of Arasunilaiyitta Vijaya-Raghunatha- Periyaudaiyar to Sevakan-Ambalakaran, for maintaining a matha near the tank in Velkularamanilai alias Vira-Pandyanallur in Keralasinga-valanadu.
கல்வெட்டு :
உ சுவஸ்த்தி ஸ்ரீ சாலிவா
கன சகாத்தம் தஎள ௨௰௨ இ[தன்]
மெல்ச் செல்லானின்ற ரவுத்
திரி ௵ தையி ௴ ௰ங௨ ௳ மகாரா
சமானிய ராச ஸ்ரீ அரசு நிலையி
ட்ட விசைய ரகுனாதப் பெரிய உ
டையாத் தெவரவர்கள் காரி
யத்துக்கு கற்த்தரான ராசமானியர
ரச ஸ்ரீ மருதுபாண்டியரவர்கள்
கெரழ சிங்கை வளர் நாட்டு வெள்
குலராம நிலையான வீரபாண்டி
யநல்லூர் சிங்கம்புணரி செவு
கப் பெருமாள் சுவாமியார் சன்
னிதானத்தில் வெள்ளைச் சொ
க்க அம்பலகாறன் குமாரன் செவுக
னம் பலகாறன் தடாகம் மடவாலை
யமும் தற்மத்துக்கு உபைய வினி யொக
ம் அமுதுபடிக்கு சறுவ மானிய
மாக விட்டுக் குடுத்த நஞ்சை ஒரு
மா னிலத்துக்கும் புஞ்சை அளவு
க்கு .. கம்னாலுக்கும் வகை குச்சு
க் கட்டி வயலில் நாலாங்கரைக்
கு வடக்கு மெள்மடங் கரை [ராம]
சாமி வயக்கல் ள ௧௰௨௯ ள இ
துவும் இதினிடை வி வடக்கு
௸ வயக்கல் பெருமாள் வயக்
ல் ………………….. ஆக தடி ௨௱ நில
ம் பு இதுவும் மெல்ப்படியான் ஊற
ணி தடாக(த்து)க்கு இடை வி தெற்கு ம
ணல்ப் புஞ்சைக்கு கள அளவுக்கு
ம் ளம் னாலு இந்த நஞ்சையும் பு
ஞ்சையும் தற்மத்துக்கு சறுவ மானி
யம் பண்ணி குடுத்த படியினாலெ க
ல்லுங் காவேரியும் புல்லும்
பூமியும் சந்திராதித்தி யாளுள்
ளவரைக்கும் தற்மம் நடப்
பி விச்சு கொள்ளவும்.
—————————————
சான்றாதார நூல்கள்,
1) Annual Reports on Indian Epigraphy (1926-1929), General Archaeological Survey of India, New Delhi -110 011. (1986).
2) சிவகங்கை மாவட்டம் தொல்லியல்
கையேடு, ரா.நாராயணன்,
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
வெளியீடு, முதற்பதிப்பு : 2011.
3) மருதுபாண்டிய மன்னர்கள்,
மீ. மனோகரன், அன்னம் வெளியீடு,
சிவகங்கை, முதற் பதிப்பு – ஆக 1994
———————————————————
அகமுடையார் வரலாற்று மீட்புப் பணியில்…
சோ. பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்.
பேச : 94429 38890.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்