அகமுடையார் வரலாற்றினை அகமுடையார் ஒற்றுமை வாயிலாகத் தொடர்ந்து எழுதி வருகிறோம்.அது…

Spread the love

First
அகமுடையார் வரலாற்றினை அகமுடையார் ஒற்றுமை வாயிலாகத் தொடர்ந்து எழுதி வருகிறோம்.அது உங்களில் பலருக்கு பிடித்திருக்கலாம்.வரலாறு எழுதுவதில் எங்களுக்கு இருக்கும் முதலும்,முதன்மையானதொரு இடர்பாடே,போதிய தரவுகள்(நூல்கள்/குறிப்புகள்) கிடைக்காமையே ஆகும்! தேவையான தரவுகள் கிடைத்தால் நம் முயற்சியை இன்னும் செம்மையாக ஆற்ற முடியும். ஆனால் துரதிஷ்டவசமாக தேவையான நூல்கள்.குறிப்புகள் நிறைய நேரம் நமக்கு கிடைப்பதில்லை.

இதை கேட்டறிந்த அண்ணண் அருள் அவர்கள் இன்று தன்னிடம் உள்ள நூல்கள் கலெக்சனின் முதல் தொகுதியை மொத்தமாக என் வீட்டு முகவரிக்கு நேற்று கூரியரில் அனுப்பி இருந்தார்கள். அது இன்று காலை எனக்கு கிடைத்தது.மிகவும் அற்புதமான ,தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் குறிப்பாக சோழர் வரலாறு பற்றி 7 க்கும் மேற்பட்ட மிகவும் முக்கிய புத்தங்கள்,வாட்டாகுடி இரணியன் வரலாறு,பாம்பன் சுவாமிகள் வரலாறு,தமிழ்நாடு வரலாறு உள்ளிட்ட 21 அரிய புத்தங்களை எனக்கு அனுப்பியுள்ளார்கள்! இனிவரும் காலங்களில் அகமுடையார் இணையதளத்தில் வெளியாகப்போகும் பல கட்டுரைகளுக்கு இந்நூல்கள் பெரிதும் உதவப்போகிறது என்பதில் துளியும் ஐய்யமில்லை!

இப்புத்தங்கள் ஸ்கேன் செய்யப்பட்டபிறகு அவருக்கே திருப்பி அனுப்பப்படும்( அவர் கலெக்சன்களை திருப்பி அனுப்புவது தானே சரி).
இப்புத்தங்களை விரைவிலேயே டிஜிட்டலாக மாற்றி அகமுடையார் ஒற்றுமை மின் நூலகத்தில் இணைக்கப்படும்.ஆகவே அகமுடையார்கள் எவரும் வரும்காலங்களில் இப்புத்தங்களை எளிதில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் உடன் பார்வையிட முடியும்.

இவர் ஏற்கனவே வெங்கடாச்சலம் வன்னியர் எழுதிய அகமுடையார் வரலாறு புத்தகத்திற்கு தேவையான பல்வேறு தரவுகளை பல ஆண்டுகளுக்கு முன் அளித்து இந்நூல் வெளிவரக் காரணமானவர் என்பது நிறையபேர் அறியாத தகவல்! மேலும் சமுதாயம் தொடர்பான விவாதங்களில் பல அரிய தகவல்களை பகிர்ந்து கொள்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.சமுதாயத்திற்கான அண்ணண் அருள் அவர்களின் முயற்சிகளை வெகுவாக பாராடுவதோடு அகமுடையார் ஒற்றுமை இணையதளத்தின் சார்பாக எங்கள் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்!



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo