First
அகமுடையார் குலத்தோன்றல்கள் பேணர் வடிவமைத்த சகோதரர் லோகேஷ் மருது அகமுடையாருக்கு நன்றி!
——————————————————————————————
அகமுடையார் இனத்தில் 200க்கும் மேற்பட்ட தலைவர்கள் இருந்தும் நாம் நம் வரலாற்றை சரிவர பதியாததால் பல்வேறு சமூகத்தினரும் நம் சமூகத்தலைவர்களை சொந்தம் கொண்டாடுதலும், பெரும் தலைவர்கள் உதித்த பழந்தமிழ்க்குடியாம் அகமுடையார் பேரினத்தின் வரலாறு பொதுவெளியில் குறிப்பாக பிற சமூகத்தினர் மத்தியில் அறியப்படாமலும் இருந்தது இதனை போக்கும் விதமாக நம் அகமுடையார் தோன்றல்கள் குறித்த நிறைய கட்டுரைகளை நம் அகமுடையார் ஒற்றுமை தளத்தில் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றோம்.
இருப்பினும் எல்லோருக்கும் படிப்பதற்கு நேரம் அவ்வளவாக இல்லை அதே போல் கட்டுரையை படித்து தெரிந்து கொள்வதை விட ஒரு படம் மிகவும் எளிதாகவும்,விரைவாகவும் செய்தியை மற்றவர்களிடத்தில் பதிவு செய்யும்.ஆம் ஒரு படம் 1000 எழுத்துக்களுக்குச் சமம் என்பார்களே அதே தான்.
இதற்காய் முக்கிய அகமுடையார் சமுதாயத் தலைவர்கள் அடங்கிய பேணர் ஒன்றை தயார் செய்ய நிறைய முடிவு செய்தோம். இப்பேணரில் தலைவர்களின் சிறுபடமும் அதற்குக்கீழ் அவர்களின் பெயர்களும் இடம்பெறுமாறு அமைப்பதன் மூலம் இப்படத்தைப் பார்க்கும் மற்ற சமுதாயத்தினரும் அகமுடையார் இனம் எத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க இனம் என்பதை உடனடியாக புரிந்து கொள்ளும் வகையில் இருக்கம் என்று நினைத்தோம்.இருப்பினும் இப்பணியை செய்ய தக்க சமயமோ ஆட்களோ கிடைக்கவில்லை!
அவ்வேளையிலேயே இராமநாதபுரத்தில் உள்ள சகோதரர் லோகேஷ் மருது அகமுடையார் குறிப்பிட்ட அகமுடையார் தலைவர்கள் படங்களையெல்லாம் பெரிதும் முயன்று சேகரித்து,உரிய பெயர்கள் இட்டு நாம் பயன்படுத்துவதற்கேற்ப ஒரு பேணரை அழகுற வடிவமைத்துத் தந்துள்ளார்.
அவரது பணியை அகமுடையார் ஒற்றுமை இணையதளம் வெகுவாக பாராட்டுவதோடு ,சக அகமுடையார்களின் சார்பாக எமது நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்!
இப்பேணரை அகமுடையார்கள் தயக்கமின்றி முகநூலிலும் ,வாட்ஸ அப்பிலும் பகிர்ந்து கொண்டு அகமுடையார் குலத்தோன்றல்கள் பெருமையை உலகமெங்கும் பரவச்செய்யுமாறு வேண்டுகிறோம்! நன்றி!
குறிப்பு:
இது ஒரு முதல் முயற்சி! வரும் காலங்களில் இப்பேணர் இன்னும் நல்ல முறையில் மேம்படுத்தப்படும்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்