அகம்படியர் திரு பூவன கோன் நாகன் அங்கராயன் கல்வெட்டு —————————-…

Spread the love

First
அகம்படியர் திரு பூவன கோன் நாகன் அங்கராயன் கல்வெட்டு
————————————————
இன்றைய தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ரோசனபட்டி மற்றும் பிராதுகாரன் பட்டி இடையே உள்ள விவசாய நிலத்தில் கல்வெட்டு தூண் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

நான்கு அடி நீளமும் ஒரு அடி அகலமும் கொண்ட இந்த கற்தூணில் இந்த கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டு வரிகளை முனைவர் சாந்தலிங்கம், இராஜகோபால் மற்றும் பிறையா என்பவர்கள் படியெடுத்து ஆவணம் இதழில் வெளியிட்டுள்ளனர்.

ஆதாரம்: ஆவணம் இதழ் 32/2021

7 வரிகள் படிக்கின்ற அளவில் இருக்கின்ற இந்த கல்வெட்டு கீழ்கண்ட எழுத்துக்கள் காணப்படுகின்றன.

1 ஶ்ரீ கிளாங்குடித்
2 தேவர் தொண்
3 டைமானார் க
4 கம்படியில் திரு பூ
5 வன் கோன் னாக
6 ன் அங்கராய
7 ன் தன்மாக
8…

கல்வெட்டு விளக்கம்
கிளாங்குடித் தேவர் தொண்டைமானார் என்பவரின் கீழ்
திருபூவன் என்கிற ஊருக்கு தலைவனாக(கோன்) விளங்கிய அகம்படிய இனத்தை சேர்ந்த நாகன் அங்கராயன் என்பவன் வழங்கிய தன்மம்.

கல்வெட்டு விரிவான விளக்கம்
————————–
கல்வெட்டு முற்றுப்பெறாததால் நாகன் அங்கராயன் வழங்கிய தன்மம் எது என்பது விளங்கவில்லை. ஆனால் பொதுவாக நிலதானம் வழங்கும் போது அதன் நிலத்தின் எல்லைகளை குறிக்க எல்லைக்கல் நடுவது வழக்கமானது. கோவில் போன்ற இறைத்தலங்களுக்கு நிலம் வழங்குவதாக இருந்தால் அதற்குறிய சின்னங்களை பொறித்து எல்லைக்கல் நாட்டுவார்கள். ஆனால் இந்த கல்லில் அப்படி எந்த அடையாளமும் இருப்பதாக தெரியவில்லை.
ஆனால் இந்த கல்வெட்டை கண்டுபிடித்தவர்கள் செய்திதாள்களில் இக்கல்வெட்டு பற்றி பேசும் போது இதே பகுதியில் விநாயகர், அம்மன் போகர் போன்ற சிலைகள் கிடைப்பதாக கூறுவதால் இப்பகுதியில் ஒரு கோவில் இருந்திருக்க வேண்டுமென்பது தெரிகிறது. மேலும் இக்கல்வெட்டு கிடைத்த இடம் இப்போது வயல் பகுதியாக இருப்பதால் ஒருவேளை இந்த கல் நிலதானத்தை குறிப்பிடும் கல்லாக இருக்க வேண்டும்.

மேலும் தேனி,ஆண்டிபட்டி பகுதியில் வசிக்கும் அகமுடையார்களின் முன்னோராக இவன் நாகன் அங்கராயன் விளங்கியிருக்கலாம். இக்கல்வெட்டு கிடைத்த பகுதி இவனின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாகும்.

தொண்டைமான் தொடர்பு
——————————
மேலும் இந்த கல்வெட்டு செய்தியில்
“கம்படியில் திரு பூவன் கோன் நாகன்
அங்கராயன்” என்ற வரிகளுக்கு முன்னால்
“கிளாங்குடி தேவர் தொண்டைமானார்” என்கின்ற வரிகள் வருகின்றன . இதை பார்த்த கல்வெட்டு ஆய்வாளர்கள் கிளாங்குடி தேவர் தொண்டைமானார் என்பவருக்கு கீழ் பணியாற்றிய திருபூவன் எனும் ஊர் தலைவன் நாகன் அங்கராயன் என்று குறித்து விட்டனர்.

ஆனால் தொண்டைமானார் அகம்படி அல்லது தொண்டைமானார் அகம்படியர் என்பது இணைந்து வருவது இது முதல் முறை அல்ல.
மதுரை திருமங்கலம் அருகே உள்ள மேலத்திருமாணிக்கம் என்ற ஊரில் கிடைத்த கல்வெட்டு செய்தியில்
“தேவர் தொண்டைமானார் அகம்படியர் பல்லவரையன்” என்ற வரிகளும்

ஆதாரம்: மதுரை மாவட்ட கல்வெட்டுக்கள் தொகுதி 2, கல்வெட்டு எண் 210/2003

அதே போல் பொள்ளாச்சி பகுதியில் கிடைத்த கொங்கு சோழர் கல்வெட்டு செய்தி ஒன்றில்
தொண்டிமானார் அகம்படியாரில் பாம்பான் வா பூ வில்லாலன் ” என்பவன் நாடுகாப்பான் தலைவனாக குறிப்பிடப்பட்ட செய்தியும் காணப்படுகின்றது( இந்த கல்வெட்டினை மற்றொரு பதிவில் விரிவாக பார்ப்போம்).

கி.பி 13ம் நூற்றாண்டுக்கு முன்னதான தொன்டைமான் கல்வெட்டுக்கள் அருகியே கிடைக்கும் நிலையில்
அந்த கல்வெட்டுக்கள் மூன்றில் அகம்படியர்கள் குறிக்கப்பட்ட காரணம் அல்லது முக்கியத்துவம் என்னவென்பதை ஆராய வேண்டியுள்ளது. அறந்தாங்கி தொண்டைமான்க்கள் அகம்படியர் என்பதால் இந்த தொண்டைமான்கள் தங்களுக்கு அடங்கிய பிரதேசங்களில் அகம்படியர்களையே தங்கள் பிரதிநிதிகளாக நியமித்துள்ளார்கள் என்பது தெரிகின்றது.இவர்கள் முதலில் தொண்டைமான் பெயரில் அறியப்பட்ட இவர்களே பின்னாளில் அறந்தாங்கி பகுதிகளில் ஆட்சியமைத்து பின்னாளில் அறந்தாங்கி தொன்டைமான்கள் என்று அறியப்பட்டனர் என்று தெரிகின்றது. இதை பின்னொரு நாளில் விரிவாக விளக்குவோம்.

அங்கராயனும்- அங்கப்படையும்
—————————-
புதுக்கோட்டை அருகே உள்ள பெற்பனைக்கோட்டை பகுதியில் கிடைத்த சங்க கால நடுகல்லில் குறிக்கப்படும் அகம்படியர் இனத்தவனான அங்கப்படை தானையன் கணங்குமரன் என்பவன் பற்றிய செய்திகளை ஏற்கனவே நமது அகமுடையார் ஒற்றுமை சேனலில் வெளியிட்டிருந்தோம். கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

சோழர் அகமுடையார் என்கிற அகமுடையார் ஒற்றுமை சேனலின் காணொளியில் கூட இதை விளக்கியிருப்போம்.

அங்கம் என்பதற்கு உடலில் இணைந்து இருக்கும் உறுப்பு என்பது பொருளாகும். அங்கப்படை என்பது குறிப்பிட்ட அரசனின் உறவு சார்ந்த படையாகும்
இவ்வாறு அகம்படியர்களே சோழர்களின் அங்கப்படையாக (உறவினர் படையாக ) இருந்ததையே மேற்சொன்ன நடுகல் செய்தி எடுத்துக்காட்டுகின்றது.

இருப்பினும் தொடர்ந்து அகம்படியர்கள் அங்கப்படை என்றும் அங்கக்காரன்,அங்கராயன் என்று அழைக்கப்பட்டதை பல்வேறு சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன.

அப்படி எடுத்துக்காட்டும் ஒர் சான்றுதான் இந்த கல்வெட்டு செய்தியுமாகும்;

இக்கல்வெட்டு செய்தியிலும் அகம்படியர் இனத்தவன் “அங்கராயன்” என்கிற அடையாளத்துடன் காணப்படுகின்றான்.

இதே புதுக்கோட்டை பகுதியில் ஏழகத்தார் எனும் (சோழர்களின் ஏழு பிரிவை சேர்ந்த அகத்தார்) எனும் சோழர்களின் உறவுப்படைகளின் தலைவர்கள் ஏழக என்ற அடைமொழியுடன் பல்வேறு கல்வெட்டு செய்திகளில் குறிக்கப்படுகின்றனர்.

அதிலும் குறிப்பாக ஒர் கல்வெட்டு செய்தியில்

குருந்தன்பிறை என்ற ஊரை சேர்ந்த அரையர்களான
“பெரியான் அரசனான ஏழக மீகாம நாடாள்வான் மற்றும் கேரளன் கண்ணிறைந்தான் அங்கராயன் ” என்பவர் மற்றும் சிலருடன் இணைந்து தானம் வழங்கியுள்ளான்.

சோழர்களின் உறவினர்களான ஏழகத்தாரும் ,அங்கராயரும் இணைந்து தானம் வழங்கியுள்ளது மிகவும் அற்புதமான கல்வெட்டு செய்தியாகும்.

விரிவாக கூற நிறைய மற்றும் ஆழமான விடயங்கள் உள்ளன. ஆனால் வேளைபளு காரணமாகவும், இன்று புதிய கல்வெட்டு செய்தி வெளியிடுவோம் என்று சொன்னதை நிறைவேற்றுவதற்காகவும் விரைந்து எழுத வேண்டியதாகி விட்டது.

சோழர்கள் அகமுடையார்களே என்ற காணொளியின் 2ம் பாகத்தில் ஏழகத்தார் சோழர்களின் உறவுப்படை என்பதை விரிவாக விளக்கும் போது உங்களுக்கு இன்னும் விளக்கமாக புரியும். இக்காணொளி குறைந்தது 1 மணி நேரத்திற்கு மேலாக 2 மணி நேரம் கொண்ட பல்வேறு ஆதாரங்களை எடுத்துக்காட்டும் காணொளியாக வெளிவரும்.

நன்றி அறிவிப்பு
—————
இந்த கல்வெட்டு செய்தியை ஆவணம் இதழில் பார்த்து நாம் ஆய்வு செய்தி எழுதுவதற்கு அனுப்பிய
அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றிகள்.







இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo