திருப்புவனம் ஊரை ஆட்சி செய்த திருப்பூவன் நாகன் அங்கராயர் எனும் அகம்படியர் இனத்தவ…

Spread the love

First
திருப்புவனம் ஊரை ஆட்சி செய்த திருப்பூவன் நாகன் அங்கராயர் எனும் அகம்படியர் இனத்தவன்
————————————————————–

நேற்று ஏழுதிய கட்டுரையில் அவசரத்தில் முக்கியமான ஓர் விடயத்தை குறிப்பிட மறந்துவிட்டேன். ஆனால் கமேண்ட் செய்த ஊர் தனது ஊர் “திருபுவனம் ” என்பதை குறிப்பிட்டார்.உடன் எழுத மறந்தது நினைவிற்கு வந்தது.

கல்வெட்டு குறிப்பிடும் 2 ஊர் பெயர்கள்
கிளாங்குடி என்பது இன்றைய புதுக்கோட்டையில் அமைந்த ஊராகும். புதுக்கோட்டை நகரமும் புதுக்கோட்டை தொண்டைமான்கள் ஆட்சியும் கி.பி 1686ல் இராமநாதபுரம் சேதுபதி மன்னரால் உருவாக்கி தரப்பட்டதாகும்.
ஆனால் கல்வெட்டின் காலம் கி.பி 13ம்ம் நூற்றாண்டு என்பதாலும் இதே காலத்தில் தொண்டைமான்களாக விளங்கியவர்கள் அறந்தாங்கி தொண்டைமான்கள் ஆவர் .ஆகவே இத்தொண்டைமானும் அறந்தாங்கி தொண்டைமான்களின் முன்னோராகவே இருந்திருக்க வேண்டும். இவரின் மற்றொரு கல்வெட்டுக்கள் மதுரை திருமங்கலம் நகரை அடுத்துள்ள மேலத்திருமாணிக்கம் என்ற ஊரில் கிடைப்பதும் ,இந்த கல்வெட்டு ஆண்டிபட்டி பகுதியில் கிடைப்பதும் இவர் சிறந்த ஆளுமையாக விளங்கியிருக்கிறார் என்பதும் தெரியவருகின்றது.

மேலும் இன்று திருப்புவனம் என்று அழைக்கப்படும் ஊரை ஆட்சி செய்தவர் ஆவார். இந்த திருப்புவனம் என்னும் இந்த ஊர் தேவார மூவர் பாடப்பெற்ற பழமையான தலம் ஆகும். இக்கோயிலில் அழகியநாயகி உடனுறை பூவணர் ஆகியோர் கோயில் கொண்டுள்ளார்

இக்கோயில் இறைவன் பூவணர், பூவணநாதர் அல்லது சமஸ்கிருதத்தில் புஷ்பவனேசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த திருபூவனம் என்பதே இன்று திருப்புவனம் என்று விளங்கி வருகின்றது.

ஆகவே கல்வெட்டில் குறிப்பிடப்படும் ” அகம்படியில் திருப்பூவன் கோன் நாகன் அங்கராயர்” என்பவர் இன்றைய திருப்புவனம் பகுதிக்கு ஆட்சியாளராக விளங்கியிருத்தல் கூடும்.

திருப்புவனம் இன்றும் அகமுடையார்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமம் ஆகும். மிகப்பெரும் ஆளுமைகள் இந்த ஊரில் இருந்து உருவாகியிருக்கிறார்கள்.

மருதுபாண்டியருக்கும்,ஆங்கிலேயருக்கும் நடந்த போர்களில் திருப்புவனம் போர் என்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது. மருதுபாண்டியர் நினைவாக ஆலய குருக்கள் இரு மருதமரங்களை பேணியதும் அதை வீரர்கள் வெட்ட தடுத்ததும் இதே திருப்புவனம் ஊரின் வைகைக்கரையில் தான்.

இந்த நிகழ்வுகளுகெல்லாம் பல காலம் முன்னதாக கருப்பணன் சேர்வை எனும் அகம்படியர் அழகர் கோவில் இறைவன் அழகரை பற்றி எழுதிய பாடல்கள் கி.பி 1690ம் காலத்தில் சுவடி வடிவில் கிடைத்துள்ளது.
இதை
காரைக்குடி அழகப்பா பல்கலை கழகத்தால் கள்ளழகர் வரலாறும் சித்திரைத் திருவிழா நேரடி வர்ணிப்பும்” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இவர் திருப்பூவனம் என்ற ஊரில் இருந்து பூஞ்சுத்தி ஊருக்கு வந்து குடியிருக்கும் வீரபத்திரன் சேர்வை மகன் கருப்பணன் சேர்வை என்பதை குறிப்பிடுகிறார். ஆகவே இத்திருப்புவன் என்ற ஊரில் அகமுடையார்கள் தொன்று தொட்டு குடியிருந்து வருகிறார்கள் என்பது விளங்கும்.

அகமுடையார்கள் இன்றும் சிறப்புடனே வாழ்ந்திருக்கும் திருப்புவனம் நகரை ஆட்சி செய்தவன் இந்த கோன் நாகன் அங்கராயர் எனும் அகமுடையார் இனத்தவன் ஆவான். கிளாங்குடி எனும் ஊருக்கு தலைவனாக விளங்கிய தொண்டைமானாரின் அரசபிரதிநிதியாக ஆட்சி செய்தவனே மேற்சொன்ன நாகன் அங்கராயர் எனும் அகம்படியர் இனத்தவர் ஆவான்.

திருப்புவனம் நகரில் அகம்படியர்களுக்கான தரவுகளை பின்னாளில் தொகுத்து தனியாகவே வெளியிடுவோம்.

குறிப்பு:
நேற்று நாம் எழுதிய கட்டுரையை படிக்காதவர்கள் கிழே உள்ள லிங்கைல் சென்று படிக்கலாம்.
https://www.facebook.com/agamudayarotrumai/posts/pfbid02no27nYgf8enNuRqrVFEUr6m41bxtoofs7her9dbbcLXqYbJD9TrDicN1uTYaYABxl?__cft__[0]=AZUTTWk50dHkpTXAI-8uEfDAsASY6FMw_-ILyYi-U-DNt8fEylyMi-NF9p2Cj9fExIzpTXs0QS_LF4nNPu7VdRWNWiy-l4pLC2TWS7ErkWclxXFqmZ51pymX9yLoR2zhNLR_1IuS4-PmEqQO9Zny2rTOzFKUGP_638eACLqcJZANuRj7Qy3GfCehOT60U2-G8DJGp1tAGA9J0AWBEubndo4GOSWwSym1YJMWK-mh8jxOkg&__tn__=%2CO%2CP-R

அழகர் வர்ணிப்பு நூலை படிக்க விரும்புவர்கள் கீழே உள்ள லிங்கில் சென்று படிக்கலாம்.

https://alagappauniversity.ac.in/uploads/notifications/ebook.pdf

நன்றி
———
போர்குடி அகம்படியர்கள் என்ற பெயரில் இயங்கிவரும் அகமுடையார் உணர்வாளர்கள் நமது வரலாற்று முயற்சிக்கு நூல்கள் வாங்க ரூ3000 அனுப்பியிருந்தார்கள் என்று சொல்லியிருந்தோம் அல்லவா.
அதற்கு

11-10-2022 அன்று commonfolks.in தளத்தில் ரூ2437க்கும்
பனுவல் தளத்தில் ரூ570க்கும்
என மொத்தம்: ரூ3007

அதாவது போர்குடி அகமுடையார்கள் வழங்கிய ரூ3000 க்கும் நூல்கள் வாங்கிவிட்டோம். அதன் ஸ்கீர்ன்சாட்களை இப்பதிவில் இணைத்துள்ளோம். புத்தங்கள் கைக்கு கிடைத்தவுடன் அதையும் பொதுவெளியில் பதிவிடுவோம்.

இதுவரை வந்த அனைத்து பணத்திற்கும் நூல்கள் வாங்கிவிட்டோம். எவராவது பணம் அனுப்பி அதை இங்கு குறிக்காமல் இருந்தால் கமேண்டில் தெரிவிக்கலாம்.

அகமுடையார் வரலாற்று முயற்சிக்கு நூல்கள் வாங்க உதவிய போர்குடி அகமுடையார் மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி!







இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo