மேலூர் தாலுகா திருச்சுனை திருஅகத்தீஸ்வரர் கோவில் இறைவனுக்கு ,திருமஞ்சண அழகியனான வீரசிங்க தேவன் எனும் அகம்படி இனத்தன் இறையிழி தேவதானம் அளித்த செய்தி இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது!
மேலூர் தாலுகா திருச்சுனை திருஅகத்தீஸ்வரர் கோவில் இறைவனுக்கு , வீரசிங்க தேவன் எனும் அகம்படி �
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
சாமந்தனார் அகம்படி முதலிகளில் என்று வீரசிங்க தேவனை இக்கல்வெட்டு குறிப்பிடுவதிலிருந்து இவன் சுந்தரபாண்டியனின் அகம்படி இன படைகளுக்கு தலைமைவகித்தவன் எனத் தெரிகிறது.நூற்றாண்டுகளாக சோழர்களுக்கு அடிமையாக இருந்த பாண்டிய நாட்டை மீட்டவன் சுந்தரபாண்டியன் வரலாற்றில் பெரும் சாதனையாக கருத்தப்படும் இந்த நிகழ்விற்கு அகம்படி இனத்தவர் தளபதிகளாக இருந்து பெரும் உதவி செய்திருக்கிறார்கள். இதனை “பாண்டிய நாட்டில் வாணாதிராயர்கள்” எனும் நூலில் வரலாற்றிஞர் வேதாச்சலமும் குறிப்பிடுகிறார்.பாண்டியர் பெற்ற வெற்றிகள் வாணாதிராயர் (அகம்படி இனத்தவர் ) பெற்ற வெற்றிகள் என்றே வரலாற்றிஞர்கள் குறிக்கிறார்கள்.