கோவில் திருப்பணிக்கு அவணியாபுரம் அகமுடையார் பெண்கள் செய்த திருப்பணி கல்வெட்டு …

Spread the love

First
கோவில் திருப்பணிக்கு அவணியாபுரம் அகமுடையார் பெண்கள் செய்த திருப்பணி கல்வெட்டு
——————————-

இன்று நாம் காண இருக்கும் கல்வெட்டு செய்தி தனிப்பட்ட முறையில் என்னை பலவிதங்களில் ஆச்சர்யப்படுத்திய கல்வெட்டு ஆகும். வரலாற்றின் பொதுப்பார்வையிலும் இது ஓர் ஆச்சர்யமிக்க செய்தியை சுமந்து நிற்கிற கல்வெட்டு இதுவாகும்.எதற்காக சொல்கிறோம் என்பதை கல்வெட்டின் விரிவான செய்தியில் காண்போம்.

மதுரையில் இருந்து 10 கீ.மீட்டர் தொலைவில் உள்ளது அவணியாபுரம் எனும் சிற்றூராகும். இன்று சிற்றூராக இருக்கும் இந்த ஊர் பாண்டிய மன்னர் மற்றும் நாயக்க மன்னர்களின் காலத்தில் சிறப்பிடமிக்க ஊராக இருந்ததை இந்த ஊரில் இருக்கும் பழமையின் அடையாளங்கள் உணர்த்துகின்றன (இதை நாமே இந்த ஊர் வழியாக மதுரைக்கு செல்லும் போது பார்த்து அறிந்தவை)

மேலும் பாண்டியரின் அரண்மனை இருந்ததாக அறியப்படும் மாடக்குளம் எனும் பகுதி இந்த ஊருக்கு அருகிலேயே இருந்திருக்க வேண்டும்.

அதே நேரம் இந்த ஊரின் பெயரான அவணியாபுரம் என்பது கூட
திருக்கொடுங்குன்றம் எனும் பிரான்மலை கல்வெட்டில் அறியப்படும் ” அகப்பரிவாரத்தாரில் பிள்ளையார் உலகளந்த பெருமாளான அவணி நாராயன தேவன்” எனும் அகமுடையார் இனத்தவன் பெயரால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். நகர் பகுதியான மதுரையில் இருந்தது சற்றே தொலைவு பகுதியான இவ்வூரில் அகமுடையார்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிப்பதும் , குறிப்பிட்ட அவணி நாராயன தேவன் காலத்திற்கு முன்னால் வேறு தரவுகள் இப்பகுதி குறித்து கிடைக்காததும் இப்பகுதி கல்வெட்டுக்களில் வேறு சமூகத்தவர் பெரிதாக குறிப்பிடப்பட்டாததும் ,இந்த ஊர் அருகில் உள்ள பல ஊர்களில் அகமுடையார்கள் பல நூற்றாண்டுகளாக பெரும்பான்மையாக வசிப்பதும் இக்கருத்தை முன் வைக்கின்றன. அதே நேரம் பாண்டிய மன்னர்களும் அவணி நாராயனன் என்ற பெயரில் அழைக்கப்பட்டிருப்பதால் இது ஆய்வுக்குரியது.

சரி இதை மற்றோரு நாள் விரிவாக பேசலாம்,இப்போது இக்கட்டுரைக்கு காரணமான இக்கல்வெட்டு செய்தியினை காண்போம்.

குறிப்பிட்ட இந்த அவணியாபுரம் ஊரானது, மதுரை நாயக்கர்கள் காலத்தில் பிள்ளையார் பாளையம் என்ற பெயரில் அழைக்கப்படுள்ளது.

குறிப்பிட்ட இந்த அவணியாபுரம் பகுதியில் தற்போது பர்மா காலனி என்று அறியப்படும் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில் கருவறையின் தென்புற சுவற்றில் அகம்படியர் சாதியை குறிக்கும் இரண்டு கல்வெட்டு செய்திகள் காணப்படுகின்றன.

இக்கல்வெட்டை, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள் ஆத்மநாதன், உதயகுமார் ஆகியோர் கண்டறிந்தனர்.

கல்வெட்டு 1:
————

முதற் கல்வெட்டு செய்தியில்

“உ ராம செயம் கணபதி துணை ப்ரபவ ஶ்ரீ தை மீ
27 உ பிள்ளையார் பாளையத்திலிருக்கும் வேடனஞ் சேரு
வைகாறன் மகன் பழனியான்டி தேவன் பாப்பஞ் சின்ன முத்து கூனன் தேவன் பொண்சாதியள் ந
லக்காள் வெள்ளச்சி மகள் செவனாயி பழனியா
ன்டி தேவன் பொண் சாதி சொக்கலிங்க
ம் மீனாட்சி யவர்களுடைய கிறுபை உ”

போன்ற வரிகள் காணப்படுகின்றன.

ஆதாரம்: பாண்டிய நாட்டில் புதிய கண்டுபிடிப்புகள், பக்கம் எண் 128 ஆசிரியர் ரா.உதயகுமார்.
மற்றும்
ஆவணம் இதழ் 26,பக்கம் எண் 191
பார்க்க: இணைப்பு 1

ஆகவே இக்கோயில் திருப்பணி செய்தவர் அகம்படியர் (அகமுடையார்) இனத்தை சேர்ந்த செவனாயி (சிவனாயி) என்பதும் இந்த கல்வெட்டு செய்தி இக்கோயிலின் கருவறை சுவற்றில் காணப்படுவதாலும் கருவறையில் மற்ற கல்வெட்டுக்கள் இல்லாததால் இக்கோயிலின் கருவறை மற்றும் இந்த ஆலயத்தை கட்டியவர் இவராகவே இருக்க வேண்டும். இதை கல்வெட்டு 2 பற்றி பேசும் போது இன்னும் விளக்குவோம்.

அடுத்ததாக குறிப்பிட்ட இந்த செவனாயி பழனியான்டி தேவன் என்பவருடைய மனைவி மேலும் செவனாயி என்ற இந்த பெண்ணின் தாயார் வெள்ளச்சி என்பதும் ,தந்தையார் பெயர் பாப்பஞ் சின்ன முத்து கூனன் தேவன் என்பதும் தெரிகின்றது.

பொதுவாக பெண் ஒருவர் செய்த தானங்களை குறிக்கும் கல்வெட்டுக்களே குறைவு. அதிலும் அப்பெண்ணை குறிக்கும் போது அவர் இன்னாருடைய மகள் என்று மட்டும் சொல்லி நிறுத்திக்கொள்வார்கள். ஆனால் தானம் வழங்கிய பெண்ணையும் குறிப்பிட்டு அந்த பெண்ணுடைய தாயார் பெயரையும் குறிப்பிடும் கல்வெட்டு இது ஆகும்.இது அரிதிலும் அரிதான ஓர் கல்வெட்டு, வரலாற்று பதிவாகும்.

அடுத்ததாக நம்மை ஆச்சர்யப்படுத்திய செய்தி இக்கல்வெட்டு தானம் செய்த பெண்ணின் மூன்று தலைமுறை பெயர்களை எடுத்துக்காட்டுகின்றது. தானம் செய்தவரின் தந்தை,அவருடைய தந்தை (தாத்தா), அவருடைய தந்தை (பாட்டனார்) போன்ற தகவல்களை அளிக்கின்றது.

அதாவது இந்த செவனாயி என்பவரின் பாட்டியின் பெயர் நல்லக்காள் (வெள்ளச்ச்சியின் தாயார்) என்பதும் , செவனாயின் தாத்தா பழனியான்டி தேவன் என்பதும் ,அவரின் அப்பா( செவானாயி தாத்தாவின் அப்பா) பெயர் வேடணஞ் சேர்வைக்காரர் என்பதாகும் .

இதில் கவனிக்க வேண்டிய மற்றோரு விடயம்,செவனாயி என்பவருடைய தந்தைக்கும்,தாத்தாவிற்கும் தேவன்/தேவர் பட்டம் உள்ளதும் ,அதற்கும் முந்தையவர் தாத்தாவின் அப்பாவாவிற்கு சேர்வை பட்டமும் உள்ளதும் தெரியவருகின்றது.

அடுத்து இந்த செவனாயி என்பவருடைய தாயின் பெயர் வெள்ளையம்மாள் என்றிருப்பதை காண்கின்றோம்.
பொதுவாக தென் மாவட்ட அகமுடையார்களில் வெள்ளையன், வெள்ளையம்மாள்,வெள்ளச்சி என்ற பெயர்கள் அதிகமாக பயன்படுத்தப்படுவதை பார்க்கலாம்.

கறுப்பு நிறத்திலேயே அமைந்திருந்த உடல் நிறத்தை கொண்டிருந்த மக்களிடம்
வெள்ளையன், வெள்ளையம்மாள்,வெள்ளச்சி என்ற பெயர்கள் எவ்வாறு உருவாகின என்பது ஆராய்ச்சிக்குரியதாக உள்ளது.

அரச குடியினர் மற்றும் இறைவனை குறிக்க வெளிச்சம்,ஒளி,வெள்ளை போன்ற சொல்லாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த பொருளில் இந்த பெயர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

சரி இப்போது அடுத்த கல்வெட்டினை பார்போம்.

கல்வெட்டு 2
————

ஆதாரம்: பாண்டிய நாட்டில் புதிய கண்டுபிடிப்புகள், பக்கம் எண் 128 ஆசிரியர் ரா.உதயகுமார்.
பார்க்க : இணைப்பு 2
மற்றும்
ஆவணம் இதழ் 26,பக்கம் எண் 191

இக்கோயிலின் இரண்டாவது கல்வெட்டு செய்தியில் மற்றோரு செவனாயி வருகிறார்.
இந்த செவனாயி அகம்படியார் சாதியை சேர்ந்தவர் என்பதையும், பின்னையத்தேவன் மனைவி என்பதையும் இக்கல்வெட்டின் 2ம் வரிகளில் காண்கின்றோம்.

இந்த செவனாயி என்கிற பெண் இந்த பிள்ளையார் கோவிலின் திருமண்டபத்தை கட்டியதோடு, சுமை தாங்கி கல் மற்றும் கோவிலில் உள்ள கிணற்றுக்கு ஆடுகால் ( கிணற்றில் தண்ணிர் இறைக்க இருபுறமும் நடப்படும் கல் மற்றும் மர அமைப்பு) ,வளைவு போன்றவற்றை அமைத்துக்கொடுத்துள்ளார்.
இந்த தானங்களை செவனாயி என்பவர் தன்னுடைய தந்தையின் நினைவாக உருவாக்கியுள்ளார் என்பது கல்வெட்டின் கடைசி வரியில் வரும் ” தன்னுடைய தகப்பனு” என்ற வரிகள் மூலம் அறிய முடிகின்றது. கல்வெட்டில் சில எழுத்துக்கள் இல்லாததால் செவானியின் தந்தை பெயரை அறிய முடியவில்லை ஆனால் அவருடைய பெயர் முத்து என்ற பெயருடன் ஆரம்பிக்கலாம் என்பது “முத்துப” என்ற வரிகள் மூலம் தெரியவருகின்றது

மேலும் இக்கல்வெட்டின் இரண்டாம் வரியின் தொடக்கத்தில் வரும் “தங்களுடைய காணி நிலம் இதே கோயிலும் குளமும் தேசங்கள் சாதி அகம்படியர் ” என்பதன் மூலம்
இந்த செவானாயி என்பவருடைய சொந்த ஊர் என்பது பிள்ளையார் பாளையம் என்பதும் ,இவருடைய விளை நிலங்கள், அவருக்கு உரிமையான கோயில் இந்த விநாயகர் ஆலயம் என்பதும் தெரிகின்றது.

மேலும் கல்வெட்டு 1 ல் பார்த்த செவனாயி ,கல்வெட்டில் குறிப்பிடப்படும் செவனாயி என்பவருக்கு பல தலைமுறை முந்தையவர் , பல தலைமுறைக்கு முன் இருந்த செவனாயி என்ற பெயர் வழிவழியாக வந்து கல்வெட்டில் குறிப்பிடப்படும் செவனாயிக்கு வந்துள்ளது. ஆண்களை போலவே பெண்களும் தங்கள் முன்னோர்களின் பெயர்களை தாங்கி வந்துள்ளனர் என்பது தெரிகின்றது.

மேலும் இந்த இரு கல்வெட்டுக்களில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம்
அகமுடையார் சமுதாயம் ஆண் வழி சமுதாயமாக இருந்த போதும் பெண்களுக்கு சொத்துரிமை அளித்துள்ளதையும் ,அவர்கள் அரச அதிகாரிகளாக(அதிகாரிச்சியாக) அகமுடையார் பெண்கள் அளித்த கல்வெட்டு செய்திகள் கொண்டு அறிந்து கொள்ள முடிகின்றது.

வெறுமனே சொத்துக்களை மட்டும் கொடுப்பதோடு நிற்காமல் அதையும் தாண்டி
தாய் ,தந்தையர் பெயர்களையும் குறிப்பிடுவதோடு அவர்களின் முன்னோர் பெண்களின் பெயரையும் குறிப்பிடுவது வரலாற்ரில் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமான ஒன்று!
ஆகவே அகமுடையார் சமுதாயத்தில் பெண்களுக்கான முக்கியத்துவம் என்பது வெறும் வாய்ப்பேச்சோடு நின்றுவிடாமல் அது நடைமுறையிலும் இருந்துள்ளது தெரிகின்றது.

ஒவ்வொரு அகமுடையார் கல்வெட்டும் ஒர் அரிய செய்தியை சுமந்து வருகிறது என்றால் இன்று நாம் பார்த்த இந்த கல்வெட்டு பல்வேறு ஆச்சர்ய செய்திகளை தாங்கி வந்துள்ளது என்றால் அது மிகையில்லை.

அகமுடையார் பெண்கள் அளித்த கொடை கல்வெட்டுக்களை முன்னரே அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளோம் .மீதமிருக்கும் கல்வெட்டுக்களையும் வரும் காலத்தில் வெளியிடுவோம்.

இந்த ஊருக்கு அருகில் இருக்கும் அகமுடையார் உறவுகள் இக்கோவில் மற்றும் இக்கல்வெட்டின் புகைப்படங்களை எடுத்து அனுப்பினால் மிகவும் நன்றாக இருக்கும்.

கட்டுரையாக்கம்
அகமுடையார் ஒற்றுமைக்காக
மு.சக்திகணேஷ் சேர்வை(அகமுடையார்)
திருமங்கலம்(மதுரை)
agamudayarotrumai.com





இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo