First
வளத்தார் எனும் சோழ குடிப்பெயர் தாங்கிய அகமுடையார்
——————————————————–
சோழர்களின் ஆதித்தன் என்கிற சூரிய குல பெயர் தாங்கிய அகமுடையார் இனத்தவருக்கான ஆதாரத்தையும்
சோழர் அகமுடையார் இனத்தவர்கள் என்பதற்கு பல்வேறு ஆதாரங்களை நம் அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்திலும், யூடிப் சேனலிலும் பார்த்திருப்பீர்கள்.
அதை நிருபிக்கும் மற்றோரு சான்று தான் நாம் இன்று பார்க்க இருக்கும் கல்வெட்டு ஆகும்.
இந்த கல்வெட்டு இன்றைய புதுக்கோட்டை மாவட்டம்,கந்தர்வகோட்டை வட்டம் ,நொடியூர் என்ற ஊரில் உள்ள சிவன் கோவிலில் கிடைத்த கி.பி 14ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு செய்தியாகும்.
ன்
மேற்கண்ட கோவிலின் மகா மண்டப தூண் ஒன்றில் கீழ்கண்ட வாசகம் காணப்படுகின்றது.
“ஸ்வஸ்தி ஶ்ரீ
நொடியூ
ருடையா
ன் வன்
னிய மிண்
ட ரகம்படி
யாரில் வளத்தார்
தன்
மம்
இக்
கால்”
ஆதாரம் : கல்வெட்டு இதழ் 31/2020 , கல்வெட்டு எண் 78:5
இக்கல்வெட்டு செய்தியின் மூலம் இந்த மகா மண்டப தூணை செய்தளித்தவன்
வளத்தார் என்ற பட்டம் கொண்ட அகம்படியர்( இன்றைய அகமுடையார்) இனத்தவன் என்பதை அறிந்துகொள்ளலாம்.
சோழர்களின் குடிப்பெயர்களில் வளவன்,வளத்தான் என்ற பெயர்களும் ஒன்றாகும்.
சோழன் மாவளத்தான்
சோழன் கரிகால் பெருவளத்தான்
போன்ற சோழ மன்னர்களின் பிரிவினர் பலர் வளத்தான் என்ற குடிப்பிரிவு பெயர் கொண்டு அழைக்கப்பட்டிருப்பதை வரலாற்றை படித்தவர்கள் அறிந்திருக்க முடியும்.
அந்த வகையில் குறிப்பிட்ட அகம்படியரும் வளத்தார் என்ற பெயரை தனது பட்டமாக தாங்கி உள்ளார் என்பது தெரிகிறது. அதே நேரம் வளத்தார் என்ற பெயரை மட்டும் வைத்து அகமுடையார்கள் தான் சோழர் வம்சத்தவர் என்று நாம் கூறவில்லை.
சோழர்கள் அகமுடையார்கள் என்று நாம் முன்னர் வெளியிட்ட காணொளியில் விரித்து கூறியுள்ள காரியங்களுடன் ஒப்பிடும் போது இதுவும் ஓர் கூடுதல் ஆதாரமாகும் . முன்னர் சொன்ன ஆதாரங்களுடன் இதையும் வைத்து ஒப்பிடும் போது சோழர்கள் இன்றைய அகமுடையார் சாதியினர் என்பது விளங்கும்.
அடுத்து வரவுள்ள சோழர் அகமுடையார் காணொளியின் இரண்டாம் பகுதி 2 மணி நேர வீடியோகவும் சோழர்கள் அகமுடையார்கள் என்பதை விளக்கும் விரிவான ஆதாரங்களையும் தாங்கி வர இருக்கின்றது.
மேலும் இந்த கல்வெட்டின் காலம் கி.பி 14ம் நூற்றாண்டு என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. சோழர் ஆட்சி சோழ நாட்டில் கி.பி 13ம் நூற்றாண்டில் வீழ்ந்த காலத்தில்
சோழ அரசர் வாரிசுள் “சேம பிள்ளையார்” என்ற பெயரில் அறந்தாங்கி பகுதியில் எஞ்சி நின்று ஆட்சி புரிந்துள்ளனர்.
சோழர் ஆட்சி முடிவுற்ற பின் வரலாற்றில் எங்கு சென்று மறைந்தனர் என்று தேடுபவர்கள் சோழ நாட்டின் உட்பகுதியிலும் , அறங்காங்கி பகுதிகளிலும் ,இலங்கையின் கண்டி மற்றும் கம்பளை பிரதேசங்களிலும் இன்றும் வாழ்ந்து வருகின்றனர் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
அதே போல் கல்வெட்டில் குறிப்பிடப்படும் மற்றொருவரான வன்னிய மிண்டன் என்பவன் வன்னியர் பட்டம் பூண்ட மறவர் சமுதாயத்தவனாகவோ அல்லது இன்றும் புதுக்கோட்டை பகுதியில் வாழும் வன்னிய பிள்ளை /அரசமக்கள் பெயர் கொண்ட மனைமகன் என்று கல்வெட்டில் அழைக்கப்படும் அகமுடையாரின் பிரிவினராக இருக்கவேண்டும்.
ஏன் என்றால் இதே பகுதியில்
வன்னியர் பட்டம் கொண்ட மறவர்கள் இன்றும் உள்ளனர். கல்வெட்டிலும் குறிக்கப்பெறுகின்றனர்.
“இவ்வூர் மறவரில் சூட்ட தேவர் வன்னிய மிண்டன் ”
ஆதாரம் : ஆவணம் இதழ் 19,2008 ,பக்கம் எண் 90
ஆகவே மேற்கண்ட வன்னிய மிண்டன் என்பவன் நொடியூர் என்ற ஊரை சேர்ந்த மேற்கண்ட சாதிகளில் ஒருவனாகவே இருக்க வேண்டும்.
பேசுவதற்கு நிறைய செய்திகள் உள்ளன. ஆனால் எனது லேப்டாப்பில் டிஸ்பிளே பிரச்சனை உள்ளதால் அதிக நேரம் டைப் செய்ய முடியவில்லை. வரும் காலங்களில் இதனை விரிவாக பேசுவோம்.
குறிப்பிட்ட நொடியூர் பகுதியில் அகமுடையார்கள் எவரேனும் இப்பதிவை பார்த்தால் இப்பதிவில் கமேண்ட் செய்ய வேண்டுகிறேன்.
அனைத்து அகமுடையார் உறவுகளுக்கும் மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை மற்றும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
குருபூஜை கொண்டாடுபவர்கள் மறக்காமல் நமது அகமுடையார் ஒற்றுமை பக்கத்திற்கு இன்பாக்ஸ் செய்தியில் தங்கள் ஊர் நிகழ்வுகளின் நிகழ்வை லிங்காக அனுப்ப வேண்டுகிறோம்.இது அகமுடையார் ஒற்றுமை யூடிப் பேஸ்புக் பக்கங்களில் வெளியிடப்படும். நன்றி.
நன்றி:
இக்கல்வெட்டை நம் ஆய்விற்கு அனுப்பி வைத்த அகமுடையார் அரண் திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு நன்றி!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்