இன்று ஓர் ஆச்சர்யம் மற்றும் வியப்பு! தற்போது அமெரிக்காவில் வசிக்கும் (பணிபுரியும…

Spread the love

First
இன்று ஓர் ஆச்சர்யம் மற்றும் வியப்பு! தற்போது அமெரிக்காவில் வசிக்கும் (பணிபுரியும் ) திரு.சதீஷ்குமார் அகமுடையார் என்ற உறவு ஒருவர் அகமுடையார் ஒற்றுமையின் வரலாற்று மீட்பு முயற்சிக்கு ரூபாய் 25,000 நிதிவழங்கியுள்ளார்.
இவ்வளவு பெரும்தொகை வழங்கியும் கூட தனது விவரங்களைக் கூட வெளியிட வேண்டாம் ( வலதுகை கொடுப்பது இடது கைக்குக் கூட தெரியாமல் கொடுப்பது தான் சரி என்றார்) பின்னர் நான் பெயர் குறிப்பிடாமல் பணம் பெறுவது ஊழலுக்கு வழிவகுக்கும் என்று வலியுற்றுத்திக் கூறியதால் தனது பெயரையும் மற்றும் வசிக்கும் ஊரை மட்டும் குறிப்பிட்டுக்கொள்ளுங்கள் என்று சொன்னார்!

எம்மை இதற்கு முன் எந்த வகையிலும் அறிந்திராத நிலையிலும் நமது பணியை மட்டும் தொடர்ந்து வாசித்து வந்த காரணத்தால் சமுதாய உணர்வு மேலோங்கி இப்பெரும் தொகையை அளித்திருப்பது எமக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
அவருடைய சமுதாய உணர்வுக்கு நன்றிகளும்,வணக்கங்களும்!

இந்தப் பணத்தைக் கொண்டு முழுத்தொகுதியும் சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களும் வாங்கிவிடலாம் அனால் இவற்றை மீண்டும் மதுரையில் ஒருவராக கொண்டுவருவது சிரமம் எனத் தெரிகிறது! ஆகவே மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் அல்லது ஆன்லைனில் புத்தக பதிப்பாளர்களிடமிருந்து ஆர்டர் செய்யப்படும் ( இவை அனைத்திற்கும் பில்லும் கிடைக்கும் வீட்டுக்கும் டெலிவரி செய்யப்படும் என்பதால் நம் வேலையும் சுலபமாகும் )

விரைவில் (புத்தகம் வாங்கி முடித்தவுடன்) அனைவரும் பார்க்க வரவு செலவு கணக்கு ஆன்லைனில் சமர்பிக்கபடும்!இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?