First
அகமுடையார் வரலாற்று மீட்பில் இன்று மிகவும் சந்தோசமான தருணங்கள்! கல்வெட்டு தேடலுக்கு மிக முக்கியமான மத்திய அரசால் வெளியிடப்படும் கல்வெட்டு ஆண்டறிக்கை முழுத்தொகுதியையும் வாங்க உள்ளோம்.இந்த விசயத்தில் நமக்காக (அகமுடையார் ஒற்றுமை இணையதளத்திற்காக) இப்புத்தகங்களை வாங்கி அனுப்ப திரு.பாலமுருகன் அகமுடையார்( நிறுவனர்-அகமுடையார் அரண்) பெரிய மனதோடு ஒப்புக்கொண்டார்.அவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி!
நேற்று(09-01-2017) அன்று இத்தொகுதிகளில் 10 வாங்கப்பட்டு விட்டது! இன்னும் 27 தொகுதிகள் வாங்கப்படவிருக்கின்றது! ஒரு 20 தொகுதிகள் வரை சென்னை அலுவலகத்தில் இல்லை(மைசூரில் தான் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது).
நேற்று வாங்கிய புத்தகங்களுக்கு புத்தக அடக்கவிலையில் இருந்து 40% தள்ளுபடி வேறு கிடைத்தது.இன்னும் மகிழ்ச்சியான நிகழ்வு!நேற்று வாங்கிய புத்தகங்களுக்கான பில் மற்றும் கல்வெட்டு ஆண்டறிக்கை புத்தகத்தின் முகப்பு பக்கங்கள் உங்கள் பார்வைக்காக!
அதுமட்டுமல்ல இன்று நான் மதுரையில் உள்ள புத்தகநிலையங்களில் வரலாறு சம்பந்தமான புத்தகங்கள் வாங்க இருக்கிறேன்! கிடைக்காத சில புத்தகங்கள் ஆன்லைனிலும் ஆர்டர் செய்யப்படும்!
அனைத்து தொகுதிகள்,நூல்கள் வாங்கியவுடன் பில்லுடன் வரவு செலவு கணக்கு சமர்பிக்கப்படும்!நன்கொடை அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்