First
பேரரசர் மருதுபாண்டியர் கட்டிய கலியநகரி சத்திரம்
—————————————————————————-
தொண்டிக்கு அருகில் பழைய காசி -இராமேஸ்வரம் சாலையில் கலியநகரியில் பாசிப்பட்டணம் கடற்கரையை நோக்கியவாறு இச்சத்திரம் அமைந்துள்ளது.இம்மண்டபத்தினுள் அழகிய மரச்சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன.
காசி-இராமேஸ்வரம் புனிதப் பயணம் செல்லும் பக்தர்கள் உணவருந்தி பாதுகாப்பாக தங்கிச் செல்ல இச்சத்திரம் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களால் கட்டப்பட்டது! மருதுபாண்டியர் காலத்தில் இப்பாதையின் வழியாக புனித யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு இலவச உணவு தடையின்றி இச்சத்திரத்தில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது!
எதிரிகளாக இருந்தாலும் ஒருவர் இறைவனுக்கான அறப்பணியாக செய்திருந்தால் அதை தொடர்ந்து நடப்பதை தடுப்பதோ, மறைப்பதோ, நிறுத்துவதோ ,தம் பெயரருக்கு மாற்றுவதோ பெரும் கொடும் பாவச்செயலாக அக்காலத்தில் கருதப்பட்டது.அதனால் தான் ஒருவருக்கொருவர் எதிரியாக இருந்தாலும் /ஜென்மப்பகை கொண்டிருந்த போதும் எந்த ஒரு பழந்தமிழ் அரசனும் மற்ற அரசர்களின் இறைப்பணியை நிறுத்தவோ/மறைப்பதோ/தன் பெயருக்கு மாற்றம் செய்யவோ முயலவில்லை அதனால் தான் தமிழகத்தில் அரசுரிமைப் போட்டி மூவேந்தர்களுக்குள் கடுமையாக நடைபெற்றாலும் கோவில்கள் மற்றும் அறப்பணிகள் அப்படியே தொடர்ந்தன ,கல்வெட்டு போன்ற செய்திகளும் அழிக்கப்படாமல் கிடைக்கின்றன.
மருதுபாண்டியர் பின் வந்த ஆட்சியாளர்கள் மருதுபாண்டியர் தொடங்கிய பணி எனக்கொள்ளாது இறைப்பணி நோக்கத்தை முன்னிட்டாவது இந்த அறப்பணிகளைத் தொடர்ந்திருக்கலாம் ஆனால் அவர்கள் அப்படி நடந்து கொள்ளவில்லை என்பதனை இம்மண்டபங்களின் நிலையே நமக்கு எடுத்துக்காட்டுகிறது!
மருதுபாண்டியர்களின் மற்ற கொடைப்பணிகளை கண்டுகொள்ளதது போல் இந்த அறநிலையமும் இன்று கேட்பாரற்று சிதிலமடைந்து கிடக்கிறது.இவ்வூரின் அருகே இருக்கும் அகமுடையார் உறவுகள் இம்மண்டபத்தை சுற்றியும் மேலும் உள்ள செடி கொடிகளை அகற்றி,இடத்தை சுத்தப்படுத்தி ,மண்டபத்தை பழுதுபார்த்து இவ்வழியே செல்லும் புனித யாத்திரையாளர்கள் இங்கு தங்கிச் செல்லும் வகை செய்தால் மருதுபாண்டியர் புகழ் மென்மேலும் வளரும்!
தங்கிச் செல்ல முடியாத அளவிற்கு இருந்தால் சுத்தப்படுத்தி மக்களுக்கு காட்சிப்படுத்தினால் மக்களுக்கு இறைப்பற்றும் தேசப்பற்றும் வளரும்!
செய்யலாமே!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்