முதல் இரண்டு படங்கள்: திருமங்கலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ,திருமங்கலத…

Spread the love

First
முதல் இரண்டு படங்கள்: திருமங்கலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ,திருமங்கலத்தின் புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவருமாகிய திரு. மு.சி.ஆ.ரெத்தினசாமித் தேவர் (அகமுடையார்) ,எம் தந்தை ,தாயாரின் திருமணத்தை முன்னின்று நடத்தி மணமக்களை வாழ்த்தி உரையாற்றிய போது!
திரு. ரெத்தினசாமித் தேவர் அவர்கள் எனது தாயாருக்கு தாத்தா முறை ( திரு. ரெத்தினசாமித் தேவர் அவர்களின் மனைவி ,எனது தாயாரின் தாத்தாவிற்கு முறைப்பெண் என்ற வகையில் ) .
மூன்றாம் படம்: மணமகனான என் தந்தைக்கு திலகமிடும் அவரது மாமனார்(எனது அம்மாவின் அப்பா தாத்தா திரு.ராசு சேர்வை(அகமுடையார்) -)
நான்காம் படம்: திருமணத்தில் தாலி கட்டும் வைபவம்
ஐந்தாம் படம்: திருமணம் முடிந்த பின் மணமக்கள்
ஆறாம் படம்: மாப்பிள்ளை அழைப்பு( புகைப்பட வரிசை மாறியுள்ளது)
ஏழாம் எட்டாம் புகைப்படங்கள்: திருமண அழைப்பிதழ்
எட்டாவது படம்: எம் தந்தையுடன் நான் ( மு.சக்தி கணேஷ்-ஓர் பரிசளிப்பு விழாவில்) நான் படிக்கும் காலத்தில் எடுத்தது

எம் தந்தையின் பழைய நினைவுகளோடு சற்றே திருமங்கலத்தின் வரலாறும்
புகைப்படம் எடுக்கப்பட்ட நாள்: 04-06-1973 -திங்கள் கிழமை!

இராமநாதபுரம் எம்பியாக இருந்த திருமதி.பவானி ராஜேந்திரன் மு.சி.ஆ.ரெத்தினசாமித் தேவர் (அகமுடையார்) அவர்களின் குடும்பத்தினர்.

இத்திருமணப் பத்திரிகையில் வரவேற்பாளர்கள் பெயரில் காணப்படும் திரு.மாயாண்டி சேர்வை என்பவர் சென்டர்ல் சினிமா ஆர்டிஸ்டாக இருந்தவர் அக்காலத்தில் இன்று இருப்பது போல் திரைபப்டங்களுக்கு ப்ளக்ஸ் வைப்பது கிடையாது (ப்ளஸ்கஸ் என்பது வெகு சமீபத்திய கண்டுபிடிப்பு) ஆகவே அப்போதெல்லம் பெயிண்டில் திரைப்பட விளம்பரங்களை வரைவதே வழக்கத்தில் இருந்தது.இக்கலையில் இவர் மிகவும் புகழ்பெற்றவராக விளைங்கினார் என அறிய முடிகிறது. மேலும் மருதுபாண்டியர் சிம்மாசனத்தில் வீற்றிருப்பது போன்ற ஓவியத்தை வரைந்த புகழுக்குறியவர் இவரே.திருமங்கலம் தெற்குத் தெருவில் உள்ள கடைசி பெட்ரோல் பல்க் எதிரில் இவரது சமாதி உள்ளது.

எமது தந்தையின் தந்தை மாயன்(மாயான்டி) சேர்வை (அகமுடையார்) மற்றும் அவரது முன்னோர்களுக்கு கமுதி வல்லந்தையே பூர்வீக ஊராகும் .எங்களுக்கு வல்லந்தை,இராமநாதபுரம் வீரசோழனில் எம் தந்தையின் முன்னோர் வழி உறவினர்கள் உண்டு .மேலும் இது தொடர்ந்து சிவகங்கை,இராமநாதபுரம்,மண்டபம் ,மண்டபம் கேம்ப், இராமேஸ்வரம் , புதுக்கோட்டை,,அறந்தாங்கி ,திருவண்ணாமலை வரை நீள்கிறது.

எம் தாயார் வழியில் காரைக்குடி ,இராமநாதபுரம், திருச்சி ,தஞ்சை போன்ற ஊர்களில் சொந்தங்கள் உண்டு!

எம் சகோதரிகள் திருமண பந்தத்தின் மூலம் மதுரை, விருதுநகர் ,இராமநாதபுரம்,வாலாந்தரவை,வடுவூர்,உச்சிப்புளி,மானாமதுரை, தஞ்சாக்கூர் போன்ற ஊர்களில் சொந்தங்கள் அறியப்படுகின்றனர்.

குறிப்பு:
செய்தி அறியாதவர்களுக்காக : எமது (அகமுடையார் ஒற்றுமை தளத்தின் நிர்வாகி மு,.சத்திகணேஷ்) அவர்களின் தந்தை திருமங்கலம் திரு.முனியான்டி சேர்வை(அகமுடையார்) இருவாரங்களுக்கு முன் (பிப்ரவரி 12 -2017) அன்று எதிர்பாராதவிதமாக இயற்கை எய்தினார்.அவரரின் நினைவாகவே இச்சிறு புகைப்படப் பதிவு செய்யப்படுகிறது.எம் தந்தையைப் பற்றிய விரிவான பதிவு ஓர் நாள் வெளியாகும்!







இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo