• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

முதற்கட்ட தேர்வில் 41 அகமுடையார் கல்வி மைய மாணவ,மாணவியர் எழுத்து தேர்வில் தேர்ச…

February 23, 2021 by administrator

முதற்கட்ட தேர்வில் 41 அகமுடையார் கல்வி மைய மாணவ,மாணவியர் எழுத்து தேர்வில் தேர்ச்சி
———————————————————
சமீபத்தில் நடந்த இரண்டாம் நிலை காவலர், தியணைப்புடை ,சிறைகாவலர் போன்ற பணியிடங்களுக்கு நடந்த அரசு தேர்வில்
முதற்கட்டமாக நடந்த எழுத்து தேர்வில் அகமுடையார் கல்வி மையத்தில் பயின்ற 41 மாணவ,மாணவியர் தேர்வாகியுள்ளனர் ( அதன் பட்டியல் இப்பதிவில் படமாக இணைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அடுத்த கட்டமாக விரைவில் நடைபெற இருக்கின்ற உடற்தகுதி தேர்வுக்கு அனுப்பப்படுவார்கள் . அதிலும் இந்த 41 மாணவ,மாணவியரில் அனைவரும் தேர்வாகி காவலர் பணிக்கு செல்ல வேண்டுமென்பதே நமது அவா! எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியருக்கு நல்வாழ்த்துக்கள்!

நன்றி அறிவிப்பு
—————
கல்வி பணிக்கென துவங்கப்பெற்ற 32 ஊர் மேலமண்டு இராஜகுல அகமுடையார் மடம் தற்போதும் அரசு தேர்வு போன்ற கல்வி பணிக்கு பயன்பட வேண்டும் என்று பல்வேறு இடையூறுகள் வந்தாலும் அதையெல்லாம் புறந்தள்ளி மாணவ மாணவியர் அரசு தேர்வுக்கு தயாராக தொடர்ந்து இடம் அளித்து உதவி வரும்
32 ஊர் மேலமண்டு இராஜகுல அகமுடையார் அமைப்பின் தலைவர்
அண்ணன் திரு.துர்க்கா தேவன் அவர்களுக்கும் ,

அகமுடையார் கல்வி மையத்தை ஆரம்பித்து ,ஆரம்பம் முதல் இன்றுவரை நடத்தி வரும் அண்ணன் திரு.மருதமுத்து அவர்களுக்கும் ,
பல்வேறு வகையில் உதவி வரும் சகோதரர் திரு.ராமுசுந்தர் அவர்களுக்கும் ,உறுதுணையாக இருந்து வரும் அண்ணன் திருப்பரங்குன்றம் வெங்கடேஷ் அவர்களுக்கும்
எந்தக்கைமாறும் கருதாமல் ஒரு வகுப்பை கூட விடாமல் தொடர்ந்து மாணவர்களுக்கு பாடம் நடத்தி தயாராக்கிய கல்வி மையத்தின் ஆசிரியப்பெருமக்களுக்கும் , பயிற்று மையம் நடப்பதற்கு வேறுவகைகளிலும் உதவி செய்து வரும் பெயர் குறிப்பிடப்படாத கண்ணுக்குதெரியாமல் அந்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் அகமுடையார் ஓற்றுமை பேஸ்புக் பக்கம் சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றி! நன்றி! நன்றி!


Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

முக்கிய தகவல்கள் SMS பெற
அகமுடையார்களின் இன்றைய சாதிப் பெயரின் பிண்ணனி(சென்ற பதிவில் இணைக்காததால் இப்படம்...
கோதை நாச்சியார் ஆண்டாள் தாயாரும் அகமுடையார்களும் ——————————-…
பிள்ளைப் பெயர்ச்சி | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY
உறவுகளுக்கு வணக்கம்! திருக்கோயிலூர் அகமுடையார் (துளுவ வேளாளர்) சங்கம் சார்பில்,...
புல்லட் சுரேஷ் அகமுடையார் Thalivar
Real Meaning Of Agambadiyar Caste Name

Filed Under: Uncategorized

Primary Sidebar

Recent Posts

  • “வரலாற்று தரவுகளில் அகமுடையார்கள்” என்ற ஓர் புதிய நூல் நம் பார்வைக்கு கிடைத்த…
  • சவளம் எனும் ஆயுதத்தை கொண்ட மூரிவன் அகம்படியர் கல்வெட்டு
  • புதுவை மாநிலம் பாகூர்கொம்யூன்பஞ்சாயத்துக்குஉட்பட்ட ஸ்ரீ வேதாம்பிகைசமேத ஸ்ரீ மூலந…
  • அம்பலூரில் நடைபெற்ற சின்னமருது பாண்டியர் 269 வதுபிறந்தநாள் கல்வி மையம் திறப்பு விழா பாகம் 2
  • மருதிருவர் கல்வி மையத்தின் புதிய கிளைகள் திறப்பு ——————————-…