முருகபாஞ்சானில் நிறுவப்பட்ட மருதுபாண்டியர்கள் சிலை அகற்றம்–நாம் கற்றுக்கொள்ள வே…

Spread the love

First
முருகபாஞ்சானில் நிறுவப்பட்ட மருதுபாண்டியர்கள் சிலை அகற்றம்–நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்
—————————————————–
சிவகங்கை மானாமதுரை அருகில் உள்ளது வேலூர் முருகபாஞ்சான் எனும் கிராமம்.முழுக்க அகமுடையார்கள் செறிந்து வாழும் இக்கிராமத்தில் 23-10-2022 அன்று மருதுபாண்டியர்களின் சிலையை நிறுவ முயன்றுள்ளனர். இத்தகவலை முன்னமே அறிந்த காவல்துறையினர்
இச்சிலையை அகற்றியுள்ளனர். அகற்றும் போது சிலை சற்று சேதமானதாகவும் ,இச்சிலை தற்போது மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் உள்ளதாகவும் தெரிகின்றது.

இந்த தகவல் இரு தினம் முன்பே அந்த ஊரை சேர்ந்த சகோதர் ஒருவர் நமக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் வெறுமனே பதிவிட்டால் என்ன நடக்கும் .சிலர் இதை கண்டிப்பதாக கமேண்ட் செய்வார்கள் அதை தாண்டி தீர்வு என்ன கிடைக்கும்.

ஆகவே இதுகுறித்து விரிவாக பதிவிட வேண்டும் ஆனால் எனது லேப்டாப்பில் பிரச்சனை என்பதால் இரு நாட்களாக வெளியில் இருந்த காரணத்தால் லேப்டாப்பை தூக்கி செல்ல முடியாததால் உடன் பதிவிட முடியவில்லை.

சரி விசயத்திற்கு வருவோம்.

ஏற்கனவே சொன்னது போல் வேலூர் முருகபாஞ்சான் கிராமத்தில் மருதுபாண்டியர்கள் சிலையை நிறுவ அந்த ஊர் அகமுடையார்கள் நிறுவினார்கள் அதை காவல்துறை வந்து எடுத்து தற்போது இந்த சிலைகள் மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் இருப்பதாக அறிகின்றோம்.

பொதுவாகவே இது போன்ற சிலைகள் வைக்கப்படும் போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று சொல்லி காவல்துறையினர் சிலைகளை அகற்றுவது தற்போது வழக்கமான நடைமுறையாக மாறி உள்ளது.

ஆனால் வேலூர் முருகபாஞ்சான் ஊர்காரர்களோ ,இந்த ஊரில் வேறு சமுதாயத்தினர் இல்லை அதனால் சட்டம் ஒழங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை என்கிறார்கள்.

ஆனால் ஒன்றை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். ஒற்றுமையாகவும் ,சட்ட விழிப்புனர்வோடும் ,சட்டத்தின் துணையை கொண்டுள்ள சமுதாயங்கள் வைக்கும் சிலைகளையே அகற்றிவிடும் போதும் , ஒரே ஊருக்குள் இருக்கும் சமுதாயத்திற்குள்ளேயே ஒற்றுமையும் இல்லாது சட்ட விழிப்புனர்வும் இல்லாத நமக்கு இதில் எந்த விதமான தீர்வு கிடைக்கும் என்பது நமக்கு முன்னமே தெரிந்ததுதான்.

நல்லவேளையாக இந்த சிலையை அகற்றும் போது எந்த வித கலவரமும் ஏற்படவில்லை .அப்படி ஏற்பட்டிருந்தால் என்னவாயிருக்கும்! வ படிக்கும் மாணவர்கள், அரசு வேலைக்கு தயாராகிக்கொண்டிருப்பவர்கள் என இளம் வயதில் உள்ளவர்கள் பலர் மீது வழக்கு பாய்ந்திருக்கும்.
அதன் பின் சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோர்களும், உறவினர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் இந்த வேலையெல்லாம் எதற்கு ,சமுதாய பணியே வேண்டாம் என்று வெறுக்குமளவிற்கு கொண்டு சென்று விட்டுவிடுவார்கள்.

ஆனாலும் இந்த சிலை விவகாரத்தினால் தற்போது மேற்படி கிராமத்தில் காவல்துறையினர் தற்போது ரோந்துபணியில் ஈடுபடுவதாக அறிகிறோம்.

சரி அப்படியென்றால் மருதுபாண்டியர்களின் சிலை அகற்றத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்று கேட்காதீர்கள்!

செய்வதை திருந்த செய்ய வேண்டும் எனப்தை தான் நமது அகமுடையார் உறவுகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

முதலில் இது போன்ற சிலை வைக்கிறீர்கள் என்றால் முதலில் அந்த ஊரில் கூட்டம் நடத்தி, தீர்மானம் போட்டு ,சேர்மன் போன்ற தலைவர்களிடம் முறைப்படி எழுத்து பூர்வமாக அனுமதி பெறுங்கள்! பின் இதையெல்லாம் முறையாக எழுதி குறிப்பிட்ட ஊரில் வேறு சமுதாயத்தினர் இல்லை,சிலையின் பாதுகாப்பு தன்மையெல்லாம் விளக்கி காவல்துறையிடம் பெற வேண்டும் அங்கு கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தின் துணைய நாடவேண்டும். இதெற்கெல்லாம் மேலாக எது சரியான நடைமுறை என்று திறமையான வழக்கறிஞர்களின் ஆலோசனைகளை பெற வேண்டும்.

வேலூர் முருகபாஞ்சான் ஊர் அகமுடையார்களின் உணர்வை மதிக்கின்றோம். ஆனால் இவ்வாறு மருதுபாண்டியர் சிலையை நிறுவி அதை அகற்றி கேட்பாரற்று வேறு இடத்தில் கிடைக்குமானால் அது மருதுபாண்டியருக்கு நாம் செய்யும் அவமானம். ஆகவே இதை உணர்ந்து முறையாக அனுமதி பெற்று சிலையை நிறுவது மாமன்னர்களான மருதுபாண்டியருக்கும் பெருமை, குறிப்பிட்ட ஊருக்கும் அது நல்லது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் நாம் ஓற்றுமையடைய வேண்டியது அவசியமாகும்.

தமிழ்நாட்டின் முதலாம் பெரும்பான்மை சமூகமாக இருக்கும் அகமுடையார் சமூகம் ஒற்றை சிலை கோரிக்கைக்காக பல காலம் போராடி வருகின்றோம்.

ஆனால் தென்மாவட்டத்தில் குறிப்பாக சிவகங்கையில் அகமுடையார்கள் நாம் பெரும்பான்மையாக இருக்கின்றோம் .ஆனால் சிவகங்கை நகரில் மருதுபாண்டியர்களுக்கு நம்மால் சிலை வைக்க இன்று வரை முடிந்ததா ? அதே நேரம் சிவகங்கை நகரின் மையத்தில் அரண்மனைக்கு அருகிலேயே காமராஜரின் சிலையை வைக்க சிவகங்கையில் மிகவும் சிறுபான்மையாக உள்ள நாடார் சமுதாயத்தினரால் முடிகின்றதென்றால் எப்படி???? அது தான் ஒன்றுமை!

ஓற்றுமையில்லாது 1000 குடும்பங்கள் இருக்கும் ஊரில் நிகழ்த்த முடியாதை விட ஓற்றுமையோடு 50 குடும்பங்கள் இருக்கும் ஊரில் செய்து காட்டமுடியும்.

ஆனால் அகமுடையார்களுக்குள் எவ்வளவு வேற்றுமையை தங்களுக்குள் செயற்கையாக வளர்த்துக்கொண்டுள்ளார்கள்(. உட்பிரிவுகளை பெரிதாக கருதாத அகமுடையார்கள் தங்களுக்குள்ளேயே செயற்கையாக வேறுமையை வளர்த்துள்ளார்கள். அதுதான் நாம் இன்று ஒரு சிலை கோரிக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் நிலையில் உள்ளோம்!

ஆகவே முதலில் அகமுடையார்கள் நீங்கள் இருக்கும் ஊரில் ஒற்றுமையாக இருங்கள். இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் உங்களுக்குள் ஒற்றுமையை வளர்த்துக்கொள்ளுங்கள்!

இதற்காக கொடி கட்ட வேண்டாம், பிளக்ஸ் வைக்கவேண்டாம். சத்தம்போட்டு கொடி கட்டி, பிளக்ஸ் வைத்து இதை வளர்க்க நினைத்தால் அதற்கு பல்வேறு வகைகளில் இடையூறு செய்ய ப்பிரிக்கவே முயற்சி செய்வார்கள்.

சத்தமில்லாமல் அமைதி புரட்சியாக ஒன்றினைந்து செயல்படுங்கள்! ஊருக்குள் திருவிழாக்கள் ,சமுதாய ஒன்று கூடல் நிகழ்ச்சிகளை ஊருக்குள் முதலிலும் பின்னர் 10 ஊர்,25 ஊர் ஒன்றாக , ஒன்றிய வாரியாக ஒன்றாக. தாலுகா ரீதியாக ஒன்றாக, அடுத்து மாவட்டம் என்று ஒன்று சேருங்கள்!

பின்னர் அதை வைத்து நாம் தமிழகம் முழுவதும் ஓன்றாக , உலகம் முழுவதும் என்று ஒன்றாக முடியும் அதன் பின் நாம் வைக்கும் எந்த கோரிக்கையையும் நாம் எளிதாக வென்றெடுக்கலாம்.

ஆனால் இதற்கெல்லாம் ஆரம்ப புள்ளியாக நாம் செய்ய வேண்டியது . முதலில் ஒவ்வொரு ஊரிலும் ஒற்றுமையாக வேண்டும் என்பது தான்.

இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் நடந்து விட்ட நிகழ்வை சரிசெய்யும் பொருட்டு அகமுடையார் சமுதாய வழக்கறிஞர்கள் , ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் வேலூர் முருகபாஞ்சான் கிராமமக்களை தொடர்புகொண்டு அச்சிலையை மீண்டும் அங்கு நிறுவ சட்டபூர்வமான உதவிகளை செய்து தரவேண்டும்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?